நரம்பியல் பொருளியல்
நரம்பியல் பொருளாதாரம் (Neuroeconomics) என்பது தனிநபர்கள் எவ்வாறு பொருளாதார முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை விளக்க பொருளாதாரம், நரம்பியல் மற்றும் உளவியல் ஆகிய பல்துறைகளின் ஒருங்கிணைப்பை செயலாக்கும் ஒரு துறையாகும்.[1] பொருளாதார நடத்தை எவ்வாறு மூளை பற்றிய நமது புரிதலை வடிவமைக்கும் என்பதையும், நரம்பியல் கண்டுபிடிப்புகள் பொருளாதாரத்தின் மாதிரிகளை எவ்வாறு கட்டுப்படுத்தி வழிகாட்டுகின்றன என்பதையும் இத்துறை ஆய்வு செய்கிறது.[2]
நரம்பணுவியல், ஆய்வு மற்றும் நடத்தைசார் பொருளியல், அறிவார்ந்த மற்றும் சமூக உளவியல் ஆகிய துறைகளின் ஆய்வுகளை இத்துறையில் ஒருங்கிணைக்கின்றன.[3] முடிவெடுக்கும் நடத்தை பற்றிய ஆய்வு விரிவான முறையில் ஒரு கணிப்பியலாக மாறும்போது, கோட்பாட்டு உயிரியல், கணினியியல், கணிதம் ஆகிய துறைகளிலிருந்தும் புதிய அணுகுமுறைகளை இத்துறை இணைத்துக்கொள்கிறது. இந்தத் துறைகளில் உள்ள கருவிகளின் கலவையைப் பயன்படுத்தி முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை நரம்பியல் பொருளாதாரம் ஆய்வு செய்கிறது. இதனால் ஒற்றை முன்னோக்கு அணுகுமுறையில் எழும் குறைபாடுகள் இத்துறையில் தவிர்க்கப்படுகின்றன.[4]
உளவியல், அறிவாற்றல், உணர்ச்சி, கலாச்சார மற்றும் சமூக காரணிகளின் விளைவுகள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் முடிவுகளில் பாரம்பரிய பொருளாதாரக் கோட்பாட்டு முடிவுகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை ஆய்வு செய்யும் நடத்தைப் பொருளாதாரம் என்ற துறைக்கு வழிவகுக்கிறது. பொருளாதார நடத்தை மற்றும் நரம்பியல் பொறிமுறைகளுக்கு இடையிலான இடைவினையைப் புரிந்துகொள்வதற்காக நரம்பியல் பொருளாதாரம் நரம்பறிவியல் முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் ஓர் புதிய அடுக்கையும் சேர்த்துக் கொள்கிறது. பல்வேறு துறைகளில் இருக்கும் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நரம்புப் பொருளியல் பொருளாதார முடிவெடுக்கும் ஓர் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை நோக்கி செயல்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Home". Society For Neuroeconomics (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.
- ↑ Center for Neuroeconomics Study at Duke University http://dibs.duke.edu/research/d-cides/research/neuroeconomics பரணிடப்பட்டது 20 மார்ச்சு 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Levallois, Clement; Clithero, John A.; Wouters, Paul; Smidts, Ale; Huettel, Scott A. (2012). "Translating upwards: linking the neural and social sciences via neuroeconomics". Nature Reviews Neuroscience 13 (11): 789–797. doi:10.1038/nrn3354. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-003X. பப்மெட்:23034481.
- ↑ Loewenstein G., Rick S., Cohen J. (2008). "Neuroeconomics". Annual Review of Psychology 59: 647–672. doi:10.1146/annurev.psych.59.103006.093710. பப்மெட்:17883335. https://archive.org/details/sim_annual-review-of-psychology_2008_59/page/647.