நவரத்ன இராமராவ்

நவரத்ன இராமராவ் (Navaratna Rama Rao) (27 மே 1877 - 1960) இவர் மைசூரைச் சேர்ந்த ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். ஒன்பது ரத்தினங்கள் என்று பொருள்படும் "நவரத்னா" என்ற தலைப்பு, அந்த குடும்பத்தில் உள்ள ஒன்பது அறிஞர்-சகோதரர்களால் மரபுவழி தேசஸ்த் மத்வ பிராமணர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட அறிவார்ந்த சேவைகளுக்காக உத்திராதி மடத்தின் மூலம் இவருக்கு வழங்கப்பட்டது. [1]

தொழில் தொகு

1877 இல் பிறந்த இவர், தேசஸத் மத்வ பிராமணர்க் குடும்பத்தைச்சேர்ந்தவர். இவர்சி. இராஜகோபாலாச்சாரியுடன் பெங்களூரு மத்திய கல்லூரியில் பயின்ற இவர் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நண்பராக இருந்தார். [2] இசுக்கொட்லாந்திய ஆசிரியர் ஜான் குத்ரி டைட் அவர்களால் செல்வாக்கு பெற்றார். சென்னையில் சட்டப் பட்டம் பெற்ற பின்னர் தமிழ்நாட்டின் சேலத்தில் பயிற்சி பெற்றார். இவர் 1951 இல் ஓய்வு பெற்றார். இவரது நினைவுகளை நெருங்கிய நண்பராக இருந்த மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்பவர் வெளியிட்டார். [3] இவர், மைசூர் அரசுப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று, மகாராஜா நான்காம் கிருட்டிணராச உடையாரின்.மாநில நிர்வாகத்தில் "அமில்தாராக" தனது வாழ்க்கையைத் தொடங்கி பல்வேறு துறைகளில் பணியாற்றினார். மேலும் மாநில தொழில்கள் மற்றும் வர்த்தக இயக்குநராக ஓய்வு பெற்றார். மைசூரின் 1930 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற இந்திய வட்டமேசை மாநாட்டில் அப்போதைய திவானான சர் மிர்சா இஸ்மாயிலின் ஆலோசகாராக கலந்து கொண்டார்.

ஒரு திட்டமிடுபவராக, மைசூரில் பட்டுத் தொழிலை நிறுவுவதற்கும் பின்னர் இந்தியாவின் மத்திய பட்டு வாரியத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இவரது பொது சேவையை அங்கீகரிக்கும் விதமாக, இவருக்கு அப்போதைய மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜா உடையார் "ராஜசேவபிரசக்தா" என்ற பட்டத்தை வழங்கினார்.

பாரத ரத்னா வி.டி. கிருஷ்ணமாச்சாரி, மஸ்தி வெங்கடேச ஐயங்கார், டி.வி.குண்டப்பா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோருடன் இவர் நட்புடனிருந்தார்..

சேவையில் இருக்கும்போது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையால் சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல முடிவுகளுக்கு இவர் பொறுப்பேற்றார். பாரத ரத்னா சி.ராஜகோபாலாச்சாரி பெங்களூருக்கு வந்தபோது பசவனகுடியில் இவரது வீட்டில் தங்கியிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை தொகு

சேக்சுபியரையும், மேற்கத்திய இலக்கியங்களையும் படித்தாலும், இவர் கன்னடம், சமசுகிருதம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ராஜாஜியின் ஆங்கில மொழியில் இந்திய இலக்கியத்தின் இரண்டு ஆரம்பகால படைப்புகளான, இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சி.ராஜகோபாலாச்சாரி முன்னுரையில் ஒப்புக்கொள்வது போல, இவரால திருத்தப்பட்டது. இவையனைத்தும் இவரது நினைவுக் குறிப்பு கெலாவு நேனாபுகலு மற்றும் மஸ்தியின் நவரத்ன ராம ராவ் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

இவரது இலக்கியப் படைப்புகளில், மஸ்தியின் சென்னா பசவ நாயக்கர் என்ற கன்னட நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, நிக்கோலே மச்சியாவெல்லியின் தி பிரின்ஸ் என்ற நூலின் கன்னட மொழிபெயர்ப்பு, இவரது சன்னா கதேகலுவும், மைசூர் ஆட்சியாளர்களின் வாழ்க்கை ஓவியங்களும் போன்ற பல கட்டுரைகள் ஆகியவை அடங்கும். சட்டம் படிக்கும் போது மெட்ராஸ் டைம்ஸ் என்ற இதழில் சேக்சுபியரின் படைப்புகள் மற்றும் சமகால தேசிய அரசியல் குறித்த பணிகளில் ஈடுபட்டார்.

2015 ஆம் ஆண்டில், தி வானிஷ்டு ராஜ் என்ற இவரது நினைவுக் குறிப்பை இவரது இரண்டு பேரக்குழந்தைகளான நவரத்னா சீனிவாச ராஜாராமும், இராஜேசுவரி ராவும் வெளியிட்டனர். [4]

குறிப்புகள் தொகு

நூலியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவரத்ன_இராமராவ்&oldid=3659114" இலிருந்து மீள்விக்கப்பட்டது