நாகார்ஜுனா சாகர் விசிறித்தொண்டை ஓணான்

நாகார்ஜுனா சாகர் விசிறித்தொண்டை ஓணான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சீ. தொண்டலு
இருசொற் பெயரீடு
சீதானா தொண்டலு
தீபக் மற்றும் பலர் 2018[2]

நாகார்ஜுனா சாகர் விசிறித்தொண்டை ஓணான் என்பது சீதானா தொண்டலு (Sitana thondalu), அகாமிடே குடும்ப பல்லிகளின் ஒரு சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[3] இது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் கண்டறியப்பட்ட மாதிரியின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது.

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இச்சிற்றினத்தின் இனப்பெருக்கக் காலம் சூன் மற்றும் ஆகத்து மாதங்கள் ஆகும்.

வாழிடம்

தொகு

பாறைகள் நிறைந்த, அரிதான தாவரங்கள் முக்கியமாகப் புதர்கள் மற்றும் சில குன்றிய மரங்கள் (முண்டுலியா செரிசியா) உள்ளப் பகுதிகளில் காணப்படும்.

பெயர்க் காரணம்

தொகு

குறிப்பிட்ட சிற்றினப் பெயரானது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா மாநிலங்களில் உள்ள அகமிடே பல்லிக்கான தொண்டலு என்ற தெலுங்கு வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயர்ச்சொல்லாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Vyas, R.; Srinivasulu, C.; Mohapatra, P.; Thakur, S. (2021). "Sitana thondalu". IUCN Red List of Threatened Species 2021: e.T149313273A149313279. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T149313273A149313279.en. https://www.iucnredlist.org/species/149313273/149313279. பார்த்த நாள்: 10 June 2024. 
  2. DEEPAK, V.; AKSHAY KHANDEKAR, R. CHAITANYA & PRAVEEN KARANTH 2018. Descriptions of two new endemic and cryptic species of Sitana Cuvier, 1829 from peninsular India. Zootaxa 4434 (2): 327–365
  3. Ganesh S.R., Bubesh Guptha 2021. Herpetological diversity in the Central Eastern Ghats, Peninsular India. Journal of Animal Diversity 3 (3): 18-44