நாரின் பிராந்தியம்

நரியன் பிராந்தியம் (Naryn Region, கிருகிசு மொழி : Narin oblusu, نارىن وبلاستى) என்பது கிர்கிஸ்தானின் பெரிய பிராந்தியம் ( ஒப்ளாஸ்ட் ) ஆகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் சுய் பிராந்தியம், வடகிழக்கில் இசிக் - குல் பிராந்தியம், தென்கிழக்கில் சீனாவின் சிங்சியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம், தென்மேற்கில் ஓஷ் பிராந்தியம், மேற்கில் ஜலால்-அபாத் பிராந்தியம் போன்றவை உள்ளன. இதன் தலைநகரம் நரியன் ஆகும். இப்பிராந்தியம் 1939 நவம்பர் 21 அன்று டியென்-ஷான் பிராந்தியமாக நிறுவப்பட்டது. 1962 திசம்பர் 20 இல் இப்பிராந்தியம் கலைக்கப்பட்டது, ஆனால் 1970 திசம்பர் 11 அன்று மீண்டும் நிறுவப்பட்டது. 1988 அக்டோபர் 5 அன்று இது இசிக்-குல் பிராந்தியத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது. இறுதியாக, 1990 திசம்பர் 14 அன்று இதன் தற்போதைய பெயரான நரியன் பிராந்தியம் என்றபெயரில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. [2]

நரியன் பிராந்தியம்
Нарын облусу
Нарынская область
மாகாணம்
நரியனில் ஒரு பள்ளிவாசல்
நரியனில் ஒரு பள்ளிவாசல்
நரியன் பிராந்தியம்-இன் கொடி
கொடி
நரியன் பிராந்தியம்-இன் சின்னம்
சின்னம்
கிர்கிஸ்தானின் வரைபடத்தில் நரியன் பிராந்தியத்தின் அமைவிடம்
கிர்கிஸ்தானின் வரைபடத்தில் நரியன் பிராந்தியத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 41°30′N 75°30′E / 41.500°N 75.500°E / 41.500; 75.500
நாடு கிர்கிசுத்தான்
தலைநகரம்நரியன்
அரசு
 • குபர்னேட்டர்ஓமுர்பெக் சுவனலீவ்
பரப்பளவு
 • மொத்தம்45,200 km2 (17,500 sq mi)
மக்கள்தொகை
 (2020-01-01)[1]
 • மொத்தம்2,89,621
 • அடர்த்தி6.4/km2 (17/sq mi)
நேர வலயம்ஒசநே+6 (East)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (not observed)
ஐஎசுஓ 3166 குறியீடுKG-N
மாவட்டங்கள்5
நகரங்கள்1
நகரியங்கள்2
சிற்றூர்கள்134

பிரதான நெடுஞ்சாலை சீன எல்லையிலிருந்து டொருகார்ட் கணவாயில் வடக்கே இசிக்-குல் ஏரியின் பாலிக்கி வரை செல்கிறது.

நரின் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 99% கிர்கிஸ் மக்களாவர். பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் விலங்கு வளர்ப்பு (செம்மறி, குதிரைகள், யாக் ) முக்கிய பங்கு வகிக்கிறன்றன. கம்பளி, இறைச்சி போன்றவை முக்கிய உற்பத்திப் பொருட்களாக உள்ளன. சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு கனிமச் சுரங்கங்கள் பெரும்பாலும் வருவாயற்றவை என கைவிடப்பட்டன. இன்று இந்த பிராந்தியம் நாட்டின் ஏழ்மையான பிராந்தியமாக கருதப்படுகிறது. இந்த மாகாணமானது அழகான மலைகள், ஆல்பைன் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் சோன்-குல் ஏரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கோடை மாதங்களில் செம்மறி ஆடுகள், குதிரைகளின் பெரிய மந்தைகளையும் அவற்றை மேய்ப்பவர்களையும் ஈர்க்கிறது.

புள்ளிவிவரங்கள்

தொகு

2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, நரியன் பிராந்தியத்தில் ஒரு நகரம் ( நரின் ), 2 நகர்ப்புற வகை குடியிருப்புகள் மற்றும் 134 கிராமங்கள் உள்ளன. இதன் மக்கள்தொகையானது, 2009 ஆம் ஆண்டின் மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின்படி, 245.3 ஆயிரம் (கணக்கிடப்பட்ட உண்மையான மக்கள் தொகை) அல்லது 257.8 ஆயிரம் (தோராய மக்கள் தொகை) ஆகும். [3] 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிராந்தியத்தின் மக்கள் தொகை மதிப்பீடு 289,621 என இருந்த‍து. [1]

Historical populations in Naryn Region
ஆண்டும.தொ.±%
19701,76,844—    
19792,13,887+20.9%
19892,49,416+16.6%
19992,48,699−0.3%
20092,45,266−1.4%
Note: de jure population; Source:[3]

இன அமைப்பு

தொகு

2009 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நர்ன் பிராந்தியத்தின் இன அமைப்பு (தோராய மக்கள் தொகை): [3]

இனக்குழு மக்கள் தொகை நரியன் பிராந்திய மக்கள்தொகையின் விகிதம்
கிர்கிசுகள் 2,55,799 99.2%
உஸ்பெக்கியர் 568 0.2%
டங்கன்கள் 429 0.2%
உய்குர் மக்கள் 339 0.1%
கசக்குகள் 215 0.1%
உருசியர்கள் 157 0.1%
பிற இன மக்கள் 261 0.1%

அடிப்படை சமூக-பொருளாதார குறிகாட்டிகள்

தொகு
  • பணியில் உள்ள மக்கள் தொகை: 89,300 (2008) [4]
  • பதிவுசெய்யப்பட்ட வேலையற்றோர் தொகை: 6,922 (2008) [5]
  • ஏற்றுமதி: 0.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008) [6]
  • இறக்குமதி: 4.0 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
  • நேரடி அந்நிய முதலீடுகள்: 1,1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008 இல்) [7]

மாவட்டங்கள்

தொகு

நரன் பிராந்தியம் நிர்வாக ரீதியாக 5 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது [8]

 
சோன்-குல் அருகே குதிரைகள் மேய்கின்றன
 
நரியன் கிராமப்புறம்
மாவட்டம் தலைநகரம்
அக்-தலா மாவட்டம் பேடோவ்
அட்-பாஷி மாவட்டம் அட்-பாஷி
ஜும்கல் மாவட்டம் சாக்
கொச்சோர் மாவட்டம் கொச்சோர்
நரியன் மாவட்டம் நரியன்

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Population of regions,districts, towns, urban-type settlements, rural communities and villages of Kyrgyz Republic (National Statistical Committee estimate as of the beginning of 2020) Численность населения областей, районов, городов, поселков городского типа,айылных аймаков и сел Кыргызской Республики (оценка НСК на начало 2020г)
  2. "Brief Description of Naryn Region (in Russian)". Archived from the original on 2018-01-23. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
  3. 3.0 3.1 3.2 "2009 population census of the Kyrgyz Republic: Naryn Region" (PDF). Archived from the original (PDF) on 25 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  4. National Committee on Statistics (in Kyrgyz/Russian) பரணிடப்பட்டது 14 நவம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  5. National Committee on Statistics (in Kyrgyz/Russian) பரணிடப்பட்டது 14 நவம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  6. National Committee on Statistics (in Kyrgyz/Russian) பரணிடப்பட்டது 22 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  7. National Committee on Statistics (in Kyrgyz/Russian) பரணிடப்பட்டது 22 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  8. "Kyrgyzstan - Джалал-Абадская область". Archived from the original on 2009-08-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரின்_பிராந்தியம்&oldid=3642728" இலிருந்து மீள்விக்கப்பட்டது