நார்மன் யார்ட்லி
நார்மன் யார்ட்லி (Norman Yardley, பிறப்பு: மார்ச்சு 19 1915, இறப்பு: அக்டோபர் 3 1989), இங்கிலாந்து அணியின் முன்னாள் துட்டுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 446 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 - 1950 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 307) | திசம்பர் 24 1938 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூலை 20 1950 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], ஆகஸ்ட் 17 2010 |
யார்ட்லி, யார்க்கின் செயின்ட் பீட்டர்ஸில் பள்ளி மாணவர் துடுப்பாட்ட அணியில் விளையாடினார். மிகவும் திறமையான பன்முக விளையாட்டு வீரரான இவர் , கேம்பிரிட்ஜில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்குச் சென்று, துடுப்பாட்டம் , சுவர்ப்பந்து, ரக்பி ஃபைவ்ஸ் மற்றும் வளைதடிப் பந்தாட்டம் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடியதற்காக ப்ளூஸை வென்றார். பல்கலைக்கழக போட்டிகளில், இவர் தனது இரண்டாவது ஆண்டில் 90 ஓட்டங்களையும் , மூன்றாவது ஆண்டில் 101 ஓட்டங்களையும் எடுத்த இவர் தனது இறுதி ஆண்டில் தலைவராக இருந்தார். இவர் 1936 ஆம் ஆண்டில் யார்க்ஷயரில் அறிமுகமானார் மற்றும் 1955 ஆம் ஆண்டு வரை கவுண்டி துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். இவர் 1939 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1946-47 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் வாலி ஹமொண்டிற்கு துணை தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.அங்கு இவர் ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார். இவர் 1947 இல் ஹம்மொண்டிற்குப் பிறகு தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.1950 ஆம் ஆண்டு வரை இவர் தலைவராக இருந்தார். 1948 ஆம் ஆண்டில் பிரையன் செல்லர்ஸ் பதவி விலகியபோது இவர் யார்க்ஷயர் தலைமைப் பொறுப்பிற்கு வெற்றி பெற்றார். 1955 ஆம் ஆண்டு வரை யார்ட்லி அந்தப் பொறுப்பில் இருந்தார். இவர் 1951 மற்றும் 1954 க்கு இடையில் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் தேர்வாளராக பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டில் தேர்வாளர்கள் குழுவின் தலைவராக செயல்பட்டார். இவர் 1981 முதல் 1983 வரை யார்க்ஷயர் சி.சி.சியின் தலைவராக இருந்தார், 1983 இல் ஜெஃப்ரி பாய்காட்டினை விடுவிப்பதற்கான முடிவு தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய பின்னர் இவர் ராஜினாமா செய்தார். 1989 ல் பக்கவாதத்தால் இறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுயார்ட்லி 1915 மார்ச் 19 அன்று பார்ன்ஸ்லிக்கு அருகிலுள்ள ராய்ஸ்டனில் துடுப்பாட்டத்திற்குத் தொடர்பு இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்தார். [1] [2] இவர் யார்க்கின் செயின்ட் பீட்டரர்ஸ் பள்ளியில் கல்வி கற்றார். அங்கு இவர் ஒரு துடுப்பாட்ட வீரராக ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தினார்.1930 முதல் ஐந்து ஆண்டுகள் பள்ளி அணியிலும், இறுதி இரண்டு ஆண்டுகளில் தலைவராகவும் இருந்தார். [2] [3] 1933 ஆம் ஆண்டில், இவர் 88.45 எனும் மட்டையாட்ட சராசரியில் 973 ஓட்டங்கள் எடுத்தார்,. தொடர்ச்சியான மூன்று ஆட்டப் பகுதிகளில் மூன்று நூறுகளை அடித்தார்.மேலும் பந்துவீச்சில் 11.90 எனும் சராசரியில் 40 இழப்புகளைக் கைப்பற்றினார்.[2]
முதல் தரத் துடுப்பாட்டம்
தொகுசெயின்ட் பீட்டர்ஸ் பள்ளியை விட்டு வெளியேறிய யார்ட்லி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்குச் சென்றார், அங்கு அவர் பன்முக வீரராக சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். அவர் ஒவ்வொரு ஆண்டும் 1934 மற்றும் 1939 க்கு இடையில் வடகிழக்கு இங்கிலாந்து சுவர்ப்பந்து வாகையாளர்பட்டத்தினை வென்றார், துடுப்பாட்டம் , சுவர்ப்பந்து, ரக்பி ஃபைவ்ஸ் மற்றும் வளைதடிப் பந்தாட்டம் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடியதற்காக ப்ளூஸை வென்றார். பல்கலைக்கழக போட்டிகளில், இவர் தனது இரண்டாவது ஆண்டில் 90 ஓட்டங்களையும் , மூன்றாவது ஆண்டில் 101 ஓட்டங்களையும் எடுத்த இவர் தனது இறுதி ஆண்டில் தலைவராக இருந்தார்.
சான்றுகள்
தொகு- ↑ Frith, David. "Norman Yardley (player profile)". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 August 2010.
- ↑ 2.0 2.1 2.2 "Norman Yardley (Cricketer of the Year)". Wisden Cricketers' Almanack. John Wisden & Co. 1948. பார்க்கப்பட்ட நாள் 12 June 2010.
- ↑ Hodgson, p. 148.