ஜெப்ரி போய்கொட்
ஜெப்ரி போய்கொட் (Geoffrey Boycott, அக்டோபர் 21, 1940), முன்னாள் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 108 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 609 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 313 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1964-1982 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜெப்ரி போய்கொட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 422) | சூன் 4 1964 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சனவரி 1 1982 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 7 2008 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபாய்காட் வேக்ஃபீல்டிற்கு அருகிலுள்ள ஃபிட்ஸ்வில்லியம் என்ற கிராமத்தில் பிறந்தார். [2] இவர் ஜேன் (நேய் ஸ்பெய்ட்) மற்றும் தாமஸ் வில்ஃபிரெட் பாய்காட் ஆகிய தம்பதியினரின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.
பாய்காட் எட்டு வயதாக இருந்தபோது, தனது வீட்டிற்கு அருகே இரும்பு தண்டவாளத்தில் விழுந்ததால் இவரின் மார்பில் கம்பி குத்தியது. உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இவரின் மண்ணீரல் அகற்றப்பட்டது. [3] மார்ச் 1950 இல், [4] இவரின் தந்தை நிலக்கரி தொழிலாளியாக பணிபுரிந்தபோது கடுமையான விபத்து ஏற்பட்டது. அதில் இவரது முதுகெலும்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டது: [5] அதில் பாதிக்கப்பட்ட இவர் 1967 ஆம் ஆண்டில் இறந்தார். [6]
பாய்காட் ஃபிட்ஸ்வில்லியம் தொடக்கப்பள்ளியில் பயின்றார், [7] அதில் இவர் 45 ஓட்டங்கள் எடுத்ததற்காக லென் ஹட்டன் மட்டையாளர் விருதை வென்றார் . 45 ஓட்டங்கள் மற்றும் ஆறு இழப்புகளை 10 ஓட்டங்களுக்கு கைப்பற்றியது , தற்போதுவரை பள்ளி போட்டியில் சாதனையாகக் கருதப்படுகிறது. [8] 10 ஆம் வயதில், இவர் அக்வொர்த் துடுப்பாட்ட சங்கத்தில் சேர்ந்தார். அங்கு சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். [9] தனது 11 வயதில், இவரை கிராமர் பள்ளிக்கு தேர்வுக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அந்தத் தேர்வில் இவர் தோல்வியடைந்தார்.எனவே அதற்கு பதிலாக உள்ளூர் கின்ஸ்லி மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார். [10] இருப்பினும், ஒரு வருடம் கழித்து, இவர் தாமதமாக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார், மேலும் ஹெம்ஸ்வொர்த் இலக்கணப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.இவரது 15 ஆவது வயதில் பள்ளியின் துடுப்பாட்ட முதல் லெவன் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
உள்ளூர் போட்டிகள்
தொகுஇவர் 1962 ஆம் ஆண்டில் லீட்ஸ், யார்க்ஷயர் கோல்ட்ஸ் மற்றும் யார்க்ஷயர் இரண்டாம் லெவன் ஆகியவற்றிற்கான துடுப்பாட்ட அணிகளில் சிறப்பாக விளையாடிய பிறகு இவர், தனது சொந்த மாவட்டத்திற்காக விளையாடத் தொடங்கினார். [11] [12] யார்க்ஷயருக்காக 414 போட்டிகளில் அவர் 32,570 ஓட்டங்கள் எடுத்தார். இதில் அதிகபட்சமாக எசெக்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 260 ஓட்டங்களை எடுத்தார். இவரின் சராசரி 57.85 ஆகும்.இவர் மொத்தமாக 103 நூறு ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் 8,699 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரின் மட்டையாட்ட சராசரி 40.08 ஆகும். இங்கிலாந்து அணிக்காக முதல் தரப் போட்டிகளில் விளையாடிய போது இவரின் சராசரி இரு முறை 100 க்கும் அதிகமாக இருந்துள்ளது. 1971 ஆம் ஆண்டில் 100.12, மற்றும் 1979 ஆம் ஆண்டில் 102.53. இதை இரண்டு முறை சாதித்த இரண்டு வீரர்களில் இவர் ஒருவர் ஆவார் [13] மார்க் ராம்பிரகாஷ் என்பவர் மற்றவர் ஆவார். பாய்காட் 1971 ஆம் ஆண்டில் யார்க்ஷயரின் தலைவராக நியமிக்கப்பட்டார், ஆனால் 1978 ஆம் ஆண்டில் ஒரு கோப்பையை வெல்லத் தவறியதால் பணிநீக்கம் செய்யப்பட்டார். [14] பின்னர் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் உறுப்பினர்களின் கிளர்ச்சியின் பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். அவரது தொழில் வாழ்க்கையில் பாய்காட் அடிக்கடி சங்கத்தில் இருந்த மற்ற நபர்களுடன் மோதலில் ஈடுபட்டார். இதில் ஃப்ரெட் ட்ரூமேன், பிரையன் க்ளோஸ் மற்றும் ரே இல்லிங்வொர்த் ஆகியோர் அடங்குவர். [15]
சான்றுகள்
தொகு- ↑ "First and last". The Guardian. 4 July 2004. https://www.theguardian.com/sport/2004/jul/04/cricket.features2.
- ↑ Arlott, p. 124.
- ↑ Boycott, Boycott: The Autobiography, pp. 15–16.
- ↑ McKinstry, p. 15.
- ↑ McKinstry, p. 22.
- ↑ Hunter-Tilney, Ludovic (22 August 2008). "Lunch with the FT: Sir Geoffrey Boycott". Financial Times. p. 1. Archived from the original on 19 July 2009. பார்க்கப்பட்ட நாள் 26 September 2008.
- ↑ McKinstry, p. 15.
- ↑ Arlott, p. 124.
- ↑
{{cite book}}
: Empty citation (help) - ↑ McKinstry, p. 22.
- ↑
{{cite book}}
: Empty citation (help) - ↑ Arlott, p. 125.
- ↑ Pierson, Mark. "Boycott awaits verdict on success of cancer treatment".
- ↑ Rich, Tim. "Cricket: 'New' Yorkshire ready to restore forgotten glories".
- ↑ Hill and Williams, p. 150.