நிக்கராகுவா ஏரி

நிக்கராகுவா ஏரி (Lake Nicaragua or Cocibolca or Granada) நடு அமெரிக்கா நாடானா நிக்கராகுவாவிற்கு தென்மேற்கில் அமைந்த பிளவு பட்ட பெரிய நன்னீர் ஏரியாகும்.[2] இது பரப்பளவில் உலகின் 19வது பெரிய நன்னீர் ஏரியாகும். கடல் மீன்களான சுறா, வாள் மீன் மற்றும் டெர்பீன் மீன்கள் இந்த ஏரியில் காணப்படுகிறது.[3]

நிக்கராகுவா ஏரி
சூன் 2005இல் நிக்கராகுவா எரி
நிக்கராகுவா ஏரி is located in நிக்கராகுவா
நிக்கராகுவா ஏரி
நிக்கராகுவா ஏரி
அமைவிடம்மேற்கு நிக்கராகுவா
ஆள்கூறுகள்11°37′N 85°21′W / 11.617°N 85.350°W / 11.617; -85.350
ஏரி வகைபிளவுபட்ட ஏரி
முதன்மை வரத்து40+ ஆறுகள்
முதன்மை வெளியேற்றம்சான் ஜுவான் ஆறு
வடிநிலப் பரப்பு41,600 km2 (16,062 sq mi)[1]
வடிநில நாடுகள்நிக்கராகுவா
அதிகபட்ச நீளம்161 km (100 mi)
அதிகபட்ச அகலம்71 km (44 mi)
மேற்பரப்பளவு8,264 km2 (3,191 sq mi)
சராசரி ஆழம்13.3 m (44 அடி)
அதிகபட்ச ஆழம்26 m (85 அடி)
நீர்க் கனவளவு110 km3 (26 cu mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்32.7 m (107 அடி)
Islands400+ தீவுகள்
குடியேற்றங்கள்கிரனடா, அல்தாகிராசியா, மொயோகல்பா, சான் கார்லஸ், சான் சோர்ஜ்

இந்த ஏரி 8,264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், கடல் மட்டத்திலிருந்து 32.7 மீட்டர் உயரமும், 26 மீட்டர் ஆழமும், 161 கிலோ மீட்டர் நீளமும், 71 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 40க்கும் மேற்பட்ட ஆறுகள் கலக்கிறது. இந்த ஏரியிலிருந்து சான் ஜுவான் ஆறு உற்பத்தி ஆகி, கரிபியக் கடலில் கலப்பதுடன், நிக்கராகுவா-கோஸ்ட்டா ரிக்கா நாடுகளின் எல்லைகளாக அமைகிறது. இவ்வேரியில் கிரனடா, அல்தாகிராசியா, மொயோகல்பா, சான் கார்லஸ், சான் சோர்ஜ் போன்ற பெரிய தீவு நகரங்கள் உள்ளது. இதன் வடக்கில் மனாகுவா ஏரி உள்ளது.

நிக்கராகுவா கால்வாய்த் திட்டம்

தொகு

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டோ ஆறு மற்றும் நிக்கராகுவா ஏரிகளை இணைத்து கால்வாய்களை வெட்டி, பசிபிக் பெருங்கடல் மற்றும் கரிபியக் கடலை இணைக்கும் கால்வாய்த் திட்டம் செயல்படுத்த இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.[4][5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்க்ள்

தொகு
  1. Salvador Montenegro-Guillén(2003). "Lake Cocibolca/Nicaragua". {{{booktitle}}}, 1–29.
  2. "Cocibolca (Nicaragua)". LakeNet. பார்க்கப்பட்ட நாள் 2009-01-14.
  3. Lake Nicaragua
  4. Attempts to build a canal across Nicaragua
  5. Frank Jacobs (February 28, 2012). "The First Google Maps War". The New York Times.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கராகுவா_ஏரி&oldid=4175328" இலிருந்து மீள்விக்கப்பட்டது