நிக்கல்(II) ஆக்சைடு

வேதிச் சேர்மம்

நிக்கல்(II) ஆக்சைடு (Nickel(II) oxide) என்பது NiO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிக்கல்(III) ஆக்சைடு, Ni2O3 மற்றும் NiO2 போன்ற நிக்கல் ஆக்சைடுகள் அறியப்பட்டாலும் நிக்கல்(II) ஆக்சைடு மட்டுமே நன்கு வரையறுக்கப்பட்டு விவரிக்கப்படும் நிக்கல் ஆக்சைடாகக் கருதப்படுகிறது[3]. மிகவும் அரிய பன்செனைட்டு வடிவத்தில் இது இயற்கையில் ஒரு கனிமமாகத் தோன்றுகிறது. இது கார உலோக ஆக்சைடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல மில்லியன் கிலோகிராம் அளவு மாறுபட்ட தரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கியமாக நிக்கல் உலோகக்கலவைகள் உற்பத்தியில் ஒரு இடைநிலையாக இது உருவாகிறது[4]

நிக்கல்(II) ஆக்சைடு
Nickel(II) oxide
நிக்கல்(II) ஆக்சைடு
நிக்கல்(II) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) ஆக்சைடு
வேறு பெயர்கள்
நிக்கல் மோனாக்சைடு
ஆக்சோநிக்கல்
இனங்காட்டிகள்
1313-99-1 Y
பப்கெம் 14805
வே.ந.வி.ப எண் QR8400000
பண்புகள்
NiO
வாய்ப்பாட்டு எடை 74.6928 கி/மோல்
தோற்றம் பச்சை நிறப் படிகத்திண்மம்
அடர்த்தி 6.67 கி/செ.மீ3
உருகுநிலை 1,955 °C (3,551 °F; 2,228 K)
மிகக்குறைவு
கரைதிறன் KCN இல் கரையும்
+660.0·10−6செ.மீ
3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.1818
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-240.0 கிலோயூல்/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் JT Baker
ஈயூ வகைப்பாடு புற்றுநோயூக்கி
நச்சு (T)
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
5000 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நிக்கல் செலீனைடு
நிக்கல்(II) தெலூரைடு]]
ஏனைய நேர் மின்அயனிகள் பலேடியம்(II) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பல்வேறு வகையான தயாரிப்பு முறைகள் மூலம் நிக்கல் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. 400 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பமடையும் போது நிக்கல் தூள் ஆக்சிசனுடன் வினைபுரிந்து நிக்கல் ஆக்சைடைக் கொடுக்கிறது. நிக்கல் தூள் மற்றும் தண்ணீர் சேர்ந்த கலவையை 1000 ° செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துவதன் மூலம் சில வணிகச் செயல்முறைகளில் பச்சை நிற நிக்கல் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இந்த வினைக்கான வேகவிகிதத்தை NiO சேர்ப்பதன் மூலம் அதிகரிக்க முடியும்[5] . நிக்கல் ஐதராக்சைடு, நிக்கல் நைட்ரேட்டு மற்றும் நிக்கல் கார்பனேட்டு போன்ற நிக்கல்(II) சேர்மங்களை வெப்பச் சிதைவு வினையின் மூலம் வெளிர் பச்சை நிறதூள் நிக்கல் ஆக்சைடாக மாற்றுவது எளிமையான மற்றும் மிக வெற்றிகரமான தயாரிப்பு முறையாகும்[3]. பகுதிக்கூறுகளான நிக்கல் மற்றும் ஆக்சிசன் தனிமங்களை ஒன்று சேர்த்து சூடாக்கியும் சாம்பல் மற்றும் கருப்பு நிற தூளாக நிக்கல் ஆக்சைடைத் தயாரிக்கலாம். இதில் விகிதவியல் அளவுகளில் தனிமங்கள் சேர்ந்திருக்காது.

படிகக் கட்டமைப்பு

தொகு

எண்முக Ni2+ மற்றும் தளங்களுடன் நிக்கல்(II) ஆக்சைடு சோடியம் குளோரைடு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. கருத்தியல் ரீதியாக ஓர் எளிமையான கட்டமைப்பாக கருதப்படும் இது பொதுவாக பாறை உப்பு கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பல இருபடி உலோக ஆக்சைடுகளைப் போலவே, நிக்கல்(II) ஆக்சைடும் பெரும்பாலும் விகிதவியல் அளவுகளில் அமைவதில்லை. அதாவது Ni: O விகிதம் 1: 1 என்ற அளவிலிருந்து மாறுபடுகிறது. நிக்கல் ஆக்சைடில் இந்த விகிதவியல் அல்லாத நிலை ஒரு நிற மாற்றத்தைக் கொடுக்கிறது. சரியான விகிதவியல் முறையில் உள்ள நிக்கல்(II) ஆக்சைடு பச்சை நிறமாகவும் விகிதவியல் முறையில் அமையாத நிக்கல்(II) ஆக்சைடு லருப்பு நிறமாகவும் காணப்படுகின்றன,

பயன்கள்

தொகு

NiO சேர்மம் பல்வேறு வகையான சிறப்பு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில் தூய்மையான வேதிப்பொருள் என்ற அளவில் பொதுவாக இது சிறப்பு பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. உலோகவியல் தரம் என்ற அடிப்படையில் இது சில கலப்புலோகங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. பெர்ரைட்டுகள் மற்றும் மெருகூட்டிய பீங்கான்களை உருவாக்கும் பீங்கான் தொழிலில் இது பயன்படுத்தப்படுகிறது. வெப்பப்படுத்தப்பட்ட நிக்கல்(II) ஆக்சைடானது நிக்கல் எஃகு கலப்புலோகங்கள் தயாரிக்க பயன்படுகிறது. நிக்கல் எஃகு உலோகக் கலவைகள் குறித்த தனது பணிக்காக சார்லசு எதோவார்ட் குயிலௌம் 1920 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இன்வார் மற்றும் எலின்வார் என்ற பெயர்களால் இவர் நிக்கல் எஃகு உலோகக் கலவைகளை அழைத்தார்.

எடிசன் மின்கலன்கள் எனப்படும் நிக்கல்-இரும்பு மின் கலன்களிலும், எரிபொருள் மின்கலன்களிலும் NiO ஒரு அங்கமாக இருந்தது. சிறப்பு வேதிப்பொருளாகவும், வினையூக்கியாகவும் பல நிக்கல் உப்புகள் தயாரிப்பில் இச்சேர்மம் ஒரு முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுகிறது. மிக சமீபத்தில் சுற்றுச்சூழல் ரீதியாக உயர்ந்த நிக்கல் உலோக ஐதரைடு வகை மின்கலன்கள் வளர்ச்சியடையும் வரை பல மின்னணு சாதனங்களில் காணப்படும் NiCd மீள்நிரப்பு மின்கலன்களை உருவாக்க NiO பயன்படுத்தப்பட்டது [5]. ஓர் எதிர்மின் அயனி மின்குரோமிய பொருளான இச்சேர்மம் தங்குதன் ஆக்சைடு நேர்மின் மின்குரோமிய பொருளுடன் சேர்ந்து மின்குரோமிய சாதனங்களில் பயன்படுத்த பரவலாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Nickel metal and other compounds (as Ni)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "Safety Data Sheet" (PDF). Northwest Missouri State University.
  3. 3.0 3.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. pp. 1336–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  4. K. Lascelles, L. G. Morgan, D. Nicholls, D. Beyersmann “Nickel Compounds” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005 Wiley-VCH, Weinheim, 2005.
  5. 5.0 5.1 "Handbook of Inorganic Chemicals", Pradniak, Pradyot; McGraw-Hill Publications,2002

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_ஆக்சைடு&oldid=3384844" இலிருந்து மீள்விக்கப்பட்டது