நிக்கல்(II) ஐதராக்சைடு

வேதிச் சேர்மம்

நிக்கல்(II) ஐதராக்சைடு (Nickel(II) hydroxide) என்பது Ni(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எலுமிச்சை-பச்சை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. அம்மோனியா மற்றும் அமீன்களில் சிதைவுடன் கரைகிறது. அமிலங்களால் தாக்கப்படுகிறது. மின் உணரியான இச்சேர்மம் , இதனால் Ni(III) ஆக்சி-ஐதராக்சைடாக மாற்றப்படுகிறது. இப்பண்பு மறுமின்னூட்ட மின்கலன்களில் பரவலான பயன்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.[5]

Nickel(II) hydroxide
Nickel(II) hydroxide
நிக்கல்(II) ஐதராக்சைடு Nickel(II) hydroxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
நிக்கல் ஐதராக்சைடு, தியோபிராசைட்டு
இனங்காட்டிகள்
12054-48-7 Y
36897-37-7 (ஒற்றை நீரேற்று) N
ChemSpider 55452 Y
EC number 235-008-5
InChI
  • InChI=1S/Ni.2H2O/h;2*1H2/q+2;;/p-2 Y
    Key: BFDHFSHZJLFAMC-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Ni.2H2O/h;2*1H2/q+2;;/p-2
    Key: BFDHFSHZJLFAMC-NUQVWONBAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61534
வே.ந.வி.ப எண் QR648000
  • [Ni+2].[OH-].[OH-]
UNII L8UW92NW6J Y
பண்புகள்
Ni(OH)2
வாய்ப்பாட்டு எடை 92.724 கி/மோல் (நீரிலி)
110.72 கி/மோள் (ஒற்றை நீரேற்று)
தோற்றம் பச்சை நிறப் படிகங்கள்
அடர்த்தி 4.10 கி/செ.மீ3
உருகுநிலை 230 °C (446 °F; 503 K) (நீரிலி, சிதைவடையும்)
0.0015 கி/லி[1]
5.48×10−16[2]
+4500.0·10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம், hP3
புறவெளித் தொகுதி P3m1, No. 164
Lattice constant a = 0.3117 நானோமீட்டர், b = 0.3117 நானோமீட்டர், c = 0.4595 நானோமீட்டர்
படிகக்கூடு மாறிலி
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−538 கிலோயூல்·மோல்−1[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
79 யூல்·மோல்−1·K−1[3]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External SDS
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H332, H315, H334, H317, H341, H350, H360, H372
P260, P284, P201, P280, P405, P501
Lethal dose or concentration (LD, LC):
1515 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
நடுவில் உள்ள சோதனைக் குழாயில் நிக்கல்(II) ஐதராக்சைடு வீழ்படிவு உள்ளது

பண்புகள்

தொகு

நிக்கல்(II) ஐதராக்சைடு சேர்மம் α மற்றும் β ஆகிய இரண்டு நன்கு வகைப்படுத்தப்பட்ட பல்லுருவங்களைக் கொண்டுள்ளது. α அமைப்பு Ni(OH)2 அடுக்குகளை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட அயனிகள் அல்லது தண்ணீருடன் கொண்டுள்ளது.[6][7] β வடிவம் Ni2+ மற்றும் OH அயனிகளின் ஓர் அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[6][7] நீரின் முன்னிலையில், α வடிவ நிக்கல்(II) ஐதராக்சைடு பொதுவாக β வடிவத்திற்கு மறுபடிகமாகிறது.[6][8] α மற்றும் β வடிவங்களுக்குக் கூடுதலாக, பல γ நிக்கல் ஐதராக்சைடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் பெரிய இடை-தாள் தூரங்களைக் கொண்ட படிக அமைப்புகளால் வேறுபடுகின்றன.[6]

Ni(OH)2சேர்மத்தின் கனிம வடிவம், தியோபிராசைட்டு 1980 ஆம் ஆண்டில் வடக்கு கிரேக்கத்தின் வெர்மியன் பகுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஐடோகிரேசு அல்லது குளோரைட்டு படிகங்களின் எல்லைகளுக்கு அருகில் மெல்லிய தாள்களாக உருவாகி ஒளி ஊடுருவக்கூடிய மரகத-பச்சை படிகமாக இயற்கையாகவே இது காணப்படுகிறது.[9] இக்கனிமத்தின் நிக்கல்-மக்னீசியம் மாறுபாடான (Ni,Mg)(OH)2 கனிமத்தை இசுக்காட்லாந்தில் உள்ள ஒரு தீவில் முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டது.[10]

வினைகள்

தொகு

நிக்கல்(II) ஐதராக்சைடு மின்சார கார் மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக Ni(OH)2 பெரும்பாலும் ஓர் உலோக ஐதரைடுடனும் ஒரு குறைப்பு வினையுடனும் இணைந்து, நிக்கல் ஆக்சி ஐதராக்சைடாக (NiOOH) ஆக ஆக்சிசனேற்றம் அடைகிறது.[11][12]

வினை 1

Ni(OH)2 + OH(–) → NiO(OH) + H2O + e(−)

வினை 2

M + H2O + e(−) → MH + OH(−)

ஒட்டு மொத்த வினை (H2O) இல்

Ni(OH)2 + M → NiOOH + MH

இரண்டு நிக்கல்(II) ஐதராக்சைடு பல்லுருவ வடிவங்களில் α-Ni(OH)2 அதிக கோட்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளது, எனவே பொதுவாக மின்வேதியியல் பயன்பாடுகளில் விரும்பத்தக்கதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது காரக் கரைசல்களில் β-Ni(OH)2 வடிவத்திற்கு மாறுகிறது. இது தொழில்துறை பயன்பாடுகளுக்கு நிலைப்படுத்தப்பட்ட α-Ni(OH)2 மின்முனைகளின் சாத்தியக்கூறுகள் பற்றிய பல ஆய்வுகளுக்கு வழிவகுக்கிறது.[8]

தயாரிப்பு

தொகு

பொட்டாசியம் ஐதராக்சைடுடன் நிக்கல்(II) உப்புகளின் நீரிய கரைசலைச் சேர்த்து சூடுபடுத்தினால் நிக்கல்(II) ஐதராக்சைடு உருவாகும்.[13]

நச்சுத்தன்மை

தொகு

Ni2+ அயனியை உள்ளிழுக்க நேர்ந்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இச்சேர்மத்தின் நச்சுத்தன்மை மற்றும் தொடர்புடைய பாதுகாப்புக் கவலைகள், கால்சியம் அல்லது கோபால்ட்டு ஐதராக்சைடுகள் போன்ற ஐதராக்சைடுகளை உடன் சேர்த்து Ni(OH)2 மின்முனைகளின் ஆற்றல் அடர்த்தியை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சியை உந்தியுள்ளது.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. CRC Handbook of Chemistry and Physics (84 ed.). CRC press. 2003. pp. 4–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0849304849.
  2. John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1138561632.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles (6 ed.). Houghton Mifflin Company. p. A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-94690-7.
  4. "Nickel Hydroxide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
  5. 5.0 5.1 Chen, J.; Bradhurst, D.H.; Dou, S.X.; Liu, H.K. (1999). "Nickel Hydroxide as an Active Material for the Positive Electrode in Rechargeable Alkaline Batteries". Journal of the Electrochemical Society 146 (10): 3606–3612. doi:10.1149/1.1392522. Bibcode: 1999JElS..146.3606C. https://ro.uow.edu.au/cgi/viewcontent.cgi?article=1118&context=engpapers. 
  6. 6.0 6.1 6.2 6.3 Oliva, P.; Leonardi, J.; Laurent, J.F. (1982). "Review of the structure and the electrochemistry of nickel hydroxides and oxy-hydroxides". Journal of Power Sources 8 (2): 229–255. doi:10.1016/0378-7753(82)80057-8. Bibcode: 1982JPS.....8..229O. 
  7. 7.0 7.1 Jeevanandam, P.; Koltypin, Y.; Gedanken, A. (2001). "Synthesis of Nanosized α-Nickel Hydroxide by a Sonochemical Method". Nano Letters 1 (5): 263–266. doi:10.1021/nl010003p. Bibcode: 2001NanoL...1..263J. 
  8. 8.0 8.1 Shukla, A.K.; Kumar, V.G.; Munichandriah, N. (1994). "Stabilized α-Ni(OH)2 as Electrode Material for Alkaline Secondary Cells". Journal of the Electrochemical Society 141 (11): 2956–2959. doi:10.1149/1.2059264. Bibcode: 1994JElS..141.2956V. https://archive.org/details/sim_journal-of-the-electrochemical-society_1994-11_141_11/page/2956. 
  9. Marcopoulos, T.; Economou, M. (1980). "Theophrastite, Ni(OH)2, a new mineral from northern Greece". American Mineralogist 66: 1020–1021. http://www.minsocam.org/ammin/AM66/AM66_1020.pdf. 
  10. Livingston, A.; Bish, D. L. (1982). "On the new mineral theophrastite, a nickel hydroxide, from Unst, Shetland, Scotland". Mineralogical Magazine 46 (338): 1. doi:10.1180/minmag.1982.046.338.01. Bibcode: 1982MinM...46....1L. http://www.minersoc.org/pages/Archive-MM/Volume_46/46-338-1.pdf. பார்த்த நாள்: 2024-04-16. 
  11. Ovshinsky, S.R.; Fetcenko, M.A.; Ross, J. (1993). "A nickel metal hydride battery for electric vehicles". Science 260 (5105): 176–181. doi:10.1126/science.260.5105.176. பப்மெட்:17807176. Bibcode: 1993Sci...260..176O. 
  12. Young, Kwo (2016). Nickel Metal Hydride Batteries (in ஆங்கிலம்). MDPI. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3390/books978-3-03842-303-4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-03842-303-4.
  13. Glemser, O. (1963) "Nickel(II) Hydroxide" in ""Handbook of Preparative Inorganic Chemistry, 2nd ed. G. Brauer (ed.), Academic Press, NY. Vol. 1. p. 1549.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_ஐதராக்சைடு&oldid=4108118" இலிருந்து மீள்விக்கப்பட்டது