நிசததேசம் நைமிசாரண்யத்திற்கு வெகுதூரம் தெற்கிலும், இமயமலையின் தரணசுதலத்திற்குக் கிழக்கிலும் சேதிதேசத்திற்கு வடக்கிலும் பிரயாகைக்கு மேற்கிலும்,மிகவும் நீலமான கங்கை, யமுனை நதிகளின் நடுவில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

தொகு

இந்த தேசத்தின் வடக்குப் பாகத்தில் ஆநர்த்தம் என்னும் மலைகளும், கற்களும் நிறைந்த ஓர் உபதேசமுண்டு. இமயமலையை அடுத்து இருப்பதால் குளிர், மழை, பனி எப்பொழுதும் விடாமல் பெய்து கொண்டே இருக்கும். இது கற்பாறையும், மண்ணும் கலந்த பூமியாக இருக்கும்.[2]

பருவ நிலை

தொகு

இமயமலையிலுள்ள கங்கா, யமுனாநதிகளுக்கு இடையே இருப்பதால் பூமி, குளிர், மழை விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும்.

மலை, காடு, விலங்குகள்

தொகு

இந்த தேசத்தின் இருபுறத்திலும் கங்கா,யமுனா நதி ஓடுவதாலும், சிறிய மலைகளும், சிறிய காடுகளும், அவைகளில் கருங்குரங்கு, பெரிய மலைப்பாம்பு, கரடி, பன்றி, புலி, யானை ஆகிய கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தில் நாதகிரி என்னும் மலையே மிகவும் பெரியது. பூமிவளம் மிகவும் நன்மையானபடியால் வளம் நிறைந்த தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகவும் சோழதேசத்திற்கு ஈடாக செழுமையாக இருக்கும். இந்த தேசத்தின் அண்டை தேசங்களான கோசலம், மகதம், பாஞ்சாலம், விதேகம் ஆகிய தேசங்களில் யானை, குதிரை, ஆடு, பசு, எருமை, மான், புறா, கிளி, முதலியன கூட்டம் கூட்டமாய் வாழ்கின்றன.

நதிகள்

தொகு

இந்த தேசத்தின் இருபுறத்திலும் செழிப்பான பகுதியில் கங்கை|கங்கைநதியும், இதற்கு கிழக்கில் சர்மண்வதீ நதியும், காஞ்சனாசம் என்னும் மலையிலிருந்து காஞ்சனாசி என்ற நதி விழும் முகப்பும் சேர்ந்து கங்கையுடன் இணைகிறது.

விளைபொருள்

தொகு

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாமிரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.

நகரம்

தொகு

இந்த தேசத்தின் சர்மண்வதீ நதி யமுனையுடன் சேர்ந்தோடும் பகுதியில் ஒரு பெரிய நகரமுள்ளது. இது புராணகாலத்தில் நிசதபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் சிற்ப சாத்திர முறைப்படி தேவாலயங்கள், ஸ்தூபிகள், மாளிகைகள், அரண்மனைகள், என கட்டடங்கள் இன்றும் காணும்படி உள்ளது.

கருவி நூல்

தொகு

சான்றடைவு

தொகு
  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 122 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசததேசம்&oldid=2076829" இலிருந்து மீள்விக்கப்பட்டது