நித்தியானந்தா
சுவாமி நித்தியானந்தர் (Nithyananda) என்றும் பரவலாக பரமஹம்ச நித்தியானந்தா[1] எனவும் அறியப்படுபவர் ஓர் ஆன்மீக குரு ஆவார்.[2] இவர் பரமஹம்ச நித்தியானந்த தியான பீடம் என்பதைத் தோற்றுவித்துள்ளார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது.[3] இந்த பீடத்திற்கு கனடா முதலான 50 நாடுகளில் கிளைகள் உள்ளன.[4] உலக அலவில் 10 மில்லியன் நபர்கள் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.[4] இவர் தன்னுடைய சீடர்களுக்காக சத்சங்கம் மற்றும் தியான நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் மக்களின் எதிர்ப்பினால் நீக்கப்பட்டவரும் ஆவார்.
நித்தியானந்தா | |
---|---|
பிறப்பு | சனவரி 1, 1978 திருக்கோவிலூர், தமிழ் நாடு |
பட்டம் | பரமகம்சர் |
வலைத்தளம் | |
http://www.nithyananda.org |
வாழ்க்கை வரலாறு
தொகுநித்தியானந்தர் 1978ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தார்.[5] திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணாச்சலம் மற்றும் லோகநாயகி தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாவார்.[5]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுThis section's factual accuracy is disputed. |
நித்தியானந்தரின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளாக பின்வருவன அவரது அமைப்பு சார்ந்த தரவுகளால் முன்வைக்கப்படுகின்றன:
தனது பன்னிரண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் புத்த பூர்ணிமா அன்று மே 31,1990 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடந்தார். பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவிராஜக வாழ்க்கையினைத் தொடர்ந்தார். இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும்[மேற்கோள் தேவை], அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து[மேற்கோள் தேவை] தேர்ந்தார். திபெத் வரை சென்ற நித்தியானந்தர் இமயமலையில் பல கடுமையான தவ நிலையின் பின்னர் ஞான அனுபூதி முக்தி (எனும் பேரானந்த நிலையினை சனவரி 1, 2000 ஆண்டு அடைந்ததாகவும், தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நித்திய ஆனந்தம் அனைத்து மனிதர்களிற்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை சனவரி 1, 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தும் வைத்தார். இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் செயல்படுகிறது.
மதுரை ஆதீனம்
தொகுமதுரையிலிருக்கும் மதுரை ஆதீனம் மடத்தில் மதுரை 292 ஆதீனமாக இருப்பவர் நித்தியானந்தரை தனது வாரிசாகவும் 293 வது மதுரை ஆதீனமாகவும் அறிவித்தார். இதன்படி கடந்த ஏப்ரல் 29 2012 மதுரை ஆதீனம் மடத்தில் ஆதீன வழக்கப்படி 292 வது ஆதீனமாக இருப்பவர் நித்தியானந்தருக்கு 293 வது மதுரை ஆதீனமாக நியமித்ததற்கு அடையாளமாக அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க, தலைக்கவசம் போன்றவைகளை அணிவித்தார். மதுரை ஆதீனமாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நித்தியானந்தர் 292 வது மதுரை ஆதீனத்துடன் இணைந்து செயல்படுவதுடன் இனி அவர் “மதுரை ஆதீனம் 293- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என அழைக்கப்படுவார்.[6] இந்நியமனத்தை காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் எதிர்த்தன. ஆனாலும், நித்தியானந்தரை நீக்கம் செய்ய முடியாது என மதுரை ஆதீனம் அறிவித்தார். இந்நியமனத்திற்கு பல்வேறு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்து, 19, அக்டோபர், 2012 (19-10-2012) முதல் நித்தியானந்தரை வாரிசுப் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார்.[7]
வழக்குகளும் விமர்சனங்களும்
தொகுதமிழ் நடிகை ரஞ்சிதாவும் சுவாமி நித்தியானந்தாவும் நெருக்கமாக இருந்த காணொளியை 2010, மார்ச் 2 இல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.[8] இதன் தொடர்ச்சியாய் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் சுவாமி நித்தியானந்தரை, கர்நாடக காவல்துறையினர் ஏப்ரல் 21, 2010 அன்று கைது செய்தனர்.
வழக்கு
தொகு
கர்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், பிடதியில் அமைந்துள்ள நித்யானந்தா தியான பீடத்தில் சூன் 7-ம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அதன் பீடாதிபதி நித்யானந்தர் மீது 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
பிடதி ஆசிரமம்
தொகுநித்தியானந்தா தன்னுடைய பிடதி ஆசிரமத்தில் சூன் 7, 2012 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் செய்தியாளரைத் தாக்கியதைத் தொடர்ந்து[9], அவருக்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் போராட்டம் நடத்தின. அதனைத் தொடர்ந்து ஆசிரமம் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தின் முதல்வர், சதானந்த கவுடா ஆசிரமத்தை மூடுவதற்கு உத்திரவிட்டார்.[10] நித்தியானந்தாவை கைது செய்யவும், அவரது ஆசிரமத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது, அவர் தலைமறைவானதாக செய்திகள் வந்த நிலையில், புதன்கிழமை சூன் 13 அன்று ராமநகரம் அமர்வு நீதிமன்றத்தின் முன் ஆஜர் ஆனார். ராமநகரம் மாவட்ட நீதிமன்றம், நித்யானந்தருக்கு வியாழக்கிழமை (சூன் 14) ஜாமீன் வழங்கியது.[11] அவர் ஜாமீனில் விடுதலையான சிறிது நேரத்தில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம் என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு தொடர்ந்த உள்மாநில பாதுகாப்பு போலீசார், நித்யானந்தரை மீண்டும் கைது செய்தனர்.[12] நித்யானந்தரை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, மைசூர் சிறையில் நித்யானந்தர் அடைக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை (ஜூன் 15) இரவு 9 மணியளவில் நித்யானந்தர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.[13]
வெளி நாட்டில் நித்தியானந்தா
தொகுகடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நித்தியானந்தா நேபாளம் வழியாக தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தனது பக்தாள்களுடன் தங்கி,[14]அதனருகில் உள்ள தீவை விலைக்கு வாங்கி தனி நாடு நிறுவவுள்ளதாக கருதப்படுகிறது.[15][16]
ஊடகங்களில்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://nithyananda.org/
- ↑ Beary, Habib (13 June 2012). "BBC News – India police quiz guru Nithyananda over assault claims". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 14 December 2013.
- ↑ "Meditation holds key to peaceful life: Paramahamsa Nithyananda". The Hindu (Chennai, India). 26 November 2006 இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100923092516/http://www.hindu.com/2006/11/26/stories/2006112602760200.htm. பார்த்த நாள்: 11 January 2010.
- ↑ 4.0 4.1 "Medical tests exonerate Nithyananda of rape charge?". dnaindia. 15 Oct 2014. http://www.dnaindia.com/india/report-medical-tests-exonerate-nithyananda-of-rape-charge-2026394.
- ↑ 5.0 5.1 "Nithyananda may have forged birth documents". Deccan Herald. 24 March 2010. http://www.deccanherald.com/content/59977/nithyananda-may-have-forged-birth.html.
- ↑ மதுரை ஆதீனம் பொறுப்பை ஏற்றார் நித்யானந்தர்[தொடர்பிழந்த இணைப்பு] (தினமணி செய்தி)
- ↑ இளைய ஆதீனம் நித்யானந்தா நீக்கம் (தினமணி செய்தி)
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
- ↑ "மதுரை கோர்ட் நோட்டீஸ், கர்நாடகா கைது மிரட்டல்- எங்கே மறைந்தார் நித்யானந்தா?". சூன் 12, 2012. பார்க்கப்பட்ட நாள் சூன் 12, 2012.
- ↑ "144 தடை உத்தரவு : போலீஸ் சுற்றிவளைப்பு நித்யானந்தா சீடர்கள் தப்பி ஓட்டம்". தினகரன். சூன் 12, 2012. Archived from the original on 2012-06-12. பார்க்கப்பட்ட நாள் சூன் 12, 2012.
- ↑ நித்யானந்தர் ஜாமீனில் விடுதலை
- ↑ http://www.bbc.co.uk/tamil/india/2012/06/120614_nithyananda_bail.shtml
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/article3534857.ece
- ↑ இமயமலையா, ஈகுவேடாரா? எங்கே இருக்கிறார் நித்தியானந்தா?
- ↑ தனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி?
- ↑ Where is Nithyananda? Whistleblowers say he may be in Ecuador or hiding in India
- ↑ https://web.archive.org/web/20160831181828/http://www.dinamalar.com/Supplementary/kumudam_main.asp?dtnew=03-07-09
வெளி இணைப்புகள்
தொகு- http://srianandeshwaratemple.dhyanapeetam.org/LiveStreamBanyantreeinAnandeshwaraTemple.asp பரணிடப்பட்டது 2009-12-21 at the வந்தவழி இயந்திரம்
- http://www.dhyanapeetam.org/Web/default.asp பரணிடப்பட்டது 2010-02-01 at the வந்தவழி இயந்திரம்
- நித்யானந்தாவால் பாலுறவில் ஈடுபட முடியும்: பெங்களூர் கோர்ட்டில் சிஐடி போலீசார் அறிக்கை தாக்கல்!
- நித்தியானந்த இணையத் தொலைக்காட்சி