நினா நாயக்

இந்திய அரசியல்வாதி


நினா பி. நாயக் (பிறப்பு: நவம்பர் 24, 1953) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தக்ஷினா கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் மற்றும் குழந்தை உரிமை ஆர்வலர் ஆவார். குழந்தை உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். ஒரு நிர்வாகியாகவும், பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சியாளராகவும் குழந்தை மேம்பாடு, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.

நினா நாயக்
நினா நாயக் (மார்ச் 2014)
தலைவா்- கர்நாடக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
தலைவா், குழந்தைகள் நலச் சங்கம் பெங்களூரு
பதவியில்
2003–2007
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 நவம்பர் 1953 (1953-11-24) (அகவை 70)
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
பிள்ளைகள்2 தத்தெடுப்பு
வாழிடம்பெங்களூரு
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்
(முதுகலைப் பட்டம்


செயல்பாடுகள்

தொகு

குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரித்தல், இந்த உரிமைகளுக்கான கொள்கை வகுத்தல் மற்றும் அவற்றை இந்திய அரசு செயல்படுத்துவதில் இவரது பணிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. [1] ' சிறார் நீதிச் சட்டம் ' மற்றும் 'பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் ' (போஸ்கோ சட்டம்) ஆகியவற்றை செயல்படுத்துவதில் இவர் ஒரு உந்து சக்தியாக இருந்து வருகிறார்.

ஏப்ரல் 6, 2012 அன்று பெங்களூரில் நடந்த ஒரு டெட் (மாநாடு) நிகழ்வில் ஆளுகையில் குழந்தைகளின் பங்கு குறித்து விளக்கக்காட்சியை வழங்கினார். [2] [3] பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ள.நினா நாயக் கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். [4] முன்னதாக, அவர் இந்திய குழந்தைகள் நல கவுன்சிலின் துணைத் தலைவராகவும், இந்திய தேசிய திட்டமிடல் ஆணையத்தில் குழந்தைகள் தொடர்பான துணைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். [5] கர்நாடக மாநில குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவராக மாநிலத்தில் பல தத்தெடுப்புகளுக்கு எளிமையான வசதிகளை செய்து கொடுத்துள்ளது . [6] அரசின் முக்கிய நிலைகளில் பணிபுரிந்ததால் குழந்தைகள் உரிமை மற்றும் அவா்களின் நலன்சார்ந்த விடயங்களில் எளிதாக மாற்றங்களை ஏற்ப்படுத்த நினா நாயக்கால் முடிந்ததது. இளஞ்சிறார் குற்றவாளிகளை தண்டிப்பதை விட அவா்களைத் திருத்துவதே முயைானது என்பது அவாின் கருத்தாக உள்ளது.[7]

கல்வி

தொகு

நினா நாயக் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சமூக பணி குடும்பம் மற்றும் குழந்தை நலன் படிப்பில் முதுகலை பட்டமும் குழந்தை வளர்ச்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாடங்களை உள்ளடக்கிய மனையியல் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.. [5] இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகத்தில் (IGNOU) மனித உரிமைகள் தொடர்பான படிப்பில் சான்றிதழ் பெற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து சென்னை, கொல்கத்தா, மும்பை, புதுதில்லி ஆகிய இடங்களில் சமூகப்பணியினை ஆற்றியுள்ளார்.[8]

சமூகப்பணி

தொகு

கடந்த 30 ஆண்டுகளாக குழந்தை உரிமை ஆர்வலராக நினா நாயக் பல பொறுப்புகளை வகித்துள்ளார் [1] [9]

தலைவர், குழந்தைகள் நலக் குழு, பெங்களூர்

தலைவர், கர்நாடக குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில ஆணையம் (மும்முறை). [2]

இந்திய குழந்தைகள் நல ஆணையத்தின் துணைத் தலைவர்.

சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ( இந்திய அரசின் செயலாளருக்கு சமம்)

இந்திய தேசிய திட்டமிடல் ஆணையத்தின் 11 வது ஐந்தாண்டு திட்டத்திற்கான குழந்தைகள் தொடர்பான துணைக்குழு உறுப்பினர்.

அரசியல்

தொகு

மார்ச் 10, 2014 அன்று நினா நாயக் தெற்கு பெங்களூரு மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, 21,403 வாக்குகளைப் பெற்றார் இது மொத்த வாக்குகளில் 1.9% ஆகும் . பாரதீய ஜனதா கட்டியின் வேட்பாளர் அனந்த்குமாரிடம் தோல்வி அடைந்தார். [10]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நினா நாயக் தத்தெடுக்கப்பட்ட 2 குழந்தைகளை வளர்த்து வருகிறார். [6]

வெளி இணைப்புகள்

தொகு

நினா நாயக் டெட் மாநாட்டில்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Nina Nayak is our candidate". Archived from the original on 13 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Theme: The Big Picture". Domlur Change. TEDx. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.
  3. "A Mantra For Change: Nina Nayak". TEDxDomlurChange. TEDx. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.
  4. "Nina Nayak : KSCPCR". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.
  5. 5.0 5.1 "Selection of Members in the National Commission for Protection of Child Rights (NCPCR)" (PDF). Ministry of Women & Child Development Government of India. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.
  6. 6.0 6.1 "Guardians Of Foster Love". Parenting. Outlook. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.
  7. https://www.quora.com/What-is-your-view-on-AAP-candidate-Nina-Nayak-who-is-being-called-a-rape-sympathizer
  8. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/nandan-lives-a-myth-ananth-rides-modi-wave-nina-p-nayak/articleshow/32595006.cms
  9. "Ex-Infosys CFO, Delhi scribe on AAP fourth list". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 11 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140311021551/http://www.hindustantimes.com/india-news/aap-releases-4th-list-of-lok-sabha-candidates/article1-1193241.aspx. பார்த்த நாள்: 11 March 2014. 
  10. "AAP fields child rights activist against Nandan". http://timesofindia.indiatimes.com/india/AAP-fields-child-rights-activist-against-Nandan/articleshow/31807954.cms. பார்த்த நாள்: 11 March 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினா_நாயக்&oldid=3778508" இலிருந்து மீள்விக்கப்பட்டது