நினைவெல்லாம் நீயடா

நினைவெல்லாம் நீயடா (Ninaivellam Neeyada) 2024 இல் ஆதிராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2] இத்திரைப்படம் கலவையான எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

நினைவெல்லாம் நீயடா
Ninaivellam Neeyada
இயக்கம்ஆதிராஜன்
தயாரிப்புஇராயல் பாபு
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஇராஜா பட்டாச்சார்ஜி
படத்தொகுப்புஆசிஷ்
கலையகம்லேகா தியேட்டர்சு
வெளியீடு23 பெப்ரவரி 2024 (2024-02-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

2022 பெப்பிரவரி நிலவரப்படி, சென்னையில் எழுபது சதவிகிதப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.[3] படப்பிடிப்பு 2022 செப்டம்பரில் முடிவடைந்தது.[4]

ஒலிப்பதிவு

தொகு

இத்திரைப்படத்திற்குஇளையராஜா இசையமைத்திருந்தார். இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய "இதயமே இதயமே" என்ற பாடல் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.[5][6]

வரவேற்பு

தொகு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சகர் ஒருவர் திரைப்படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு இரண்டு நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டார். "நினைவெல்லாம் நீயடா அடிப்படையில் ஒரு நீண்ட காதல் நாடகமாகும். இத்திரைப்படம் தொடர்ந்து செல்வதுடன் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதற்குக் காரணம் திரைக்கதையில் மோசமாக ஒருங்கிணைக்கப்பட்ட முற்றிலும் தேவையற்ற பாடல்கள்" என்று எழுதினார்.[7] மாலைமாலை மலரின் விமர்சகர் ஒருவர் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு மூன்று நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டார். முதல் பாதியில் பள்ளிப் பருவத்தையும், இரண்டாம் பாதியில் இளைஞர்களின் காதலையும் நியாபகப்படுத்தி இருக்கிறார் என்று எழுதி திரைப்படம் கொண்ட காதலின் தனித்துவமான அமைப்பைப் பாராட்டியதுடன் திரைப்படத்தின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றையும் பாராட்டினார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Prajin & Manisha Yadav's 'Ninaivellam Neeyada' teaser". The Times of India. February 1, 2024.
  2. "Manisha Yadav to star opposite Prajin in a romantic drama". The Times of India. December 28, 2021.
  3. "'Ninaivellam Neeyada' first look poster launched". The Times of India. February 14, 2022.
  4. "'Ninaivellam Neeyada' shooting wrapped up". The Times of India. September 1, 2022.
  5. "Yuvan sings a song penned and composed by llaiyaraaja". The Times of India. February 21, 2022.
  6. "Yuvan Shankar Raja sings a song for 'Ninaivellam Neeyada' which is penned by his father Ilaiyaraaja". The Times of India. February 20, 2022.
  7. "Ninaivellam Neeyada Movie Review : An overlong romantic drama filled with superfluous and silly moments". The Times of India.
  8. "Ninaivellam Neeyada". www.maalaimalar.com. February 23, 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவெல்லாம்_நீயடா&oldid=3986417" இலிருந்து மீள்விக்கப்பட்டது