ரெடின் கிங்ஸ்லி
ரெடின் கிங்ஸ்லி (Redin Kingsley) ஒரு இந்திய நடிகரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.[1] இவர் திரைப்படங்களில் சத்தமாகவும், தட்டையாகவும் பேசும் பாணியில் மிகவும் பிரபலமானவர்.[2]
ரெடின் கிங்ஸ்லி | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2018-தற்போது வரை |
தொழில்
தொகுரெடின் கிங்ஸ்லி திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நடக்கும் அரசு கண்காட்சிகளுக்கு ஒரு நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணிபுரிந்தார். இவரது முதல் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'வேட்டை மன்னன்' என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படம் அறியப்படாத காரணங்களால் கைவிடப்பட்டது. பின்னர் 2018இல், இவர் முதலில் நெல்சன் இயக்கிய நயன்தாராவின் கோலமாவு கோகிலாவில் தோன்றினார்.
சில படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய பிறகு, இவர் நெற்றிக்கண் (2021) படத்தில் இரகசிய ஏஜென்டாகவும், 'டாக்டர்' (2021) படத்தில் மறைநிலை காவல் அதிகாரியாகவும் நடித்திருந்தார்.[3][4] நகைச்சுவையான பாத்திரங்களைத் தொடர்ந்து இவர் இரசினிகாந்தின் அண்ணாத்த (2021) படத்திலும் நடித்தார். இவரது தற்போதைய திட்டங்களில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்,[5] விஜய்யின் 'பீஸ்ட்' ஆகியவை அடங்கும். இரண்டுமே சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றன. வடிவேலுவின் முந்தைய படங்களில் இவரது நடிப்பிற்காக இவர் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.[6][7] மேலும் வடிவேலுவின் வரவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது.[8]
சான்றுகள்
தொகு- ↑ "``சிம்பு நினைச்சா மட்டும்தான் அது நடக்கும்..! - `கோகோ' ரெடின்". ஆனந்த விகடன். Archived from the original on 1 August 2019. பார்க்கப்பட்ட நாள் 1 August 2019.
- ↑ "ரெடின் கிங்ஸ்லி: 'டாக்டர்' தந்த நம்பிக்கை... அடுத்த நட்சத்திர நகைச்சுவை நடிகர் ரெடி!". புதிய தலைமுறை. Archived from the original on 18 October 2021. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
- ↑ "Doctor: From Redin Kingsley to Yogi Babu, 6 actors who shine in Sivakarthikeyan-starrer". இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 12 October 2021. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
- ↑ "Redin Kingsley discusses the humour of 'Doctor' and why he felt validated when Vadivelu called him for 'Naai Sekar'". தி இந்து. Archived from the original on 10 November 2021. பார்க்கப்பட்ட நாள் 10 November 2021.
- ↑ "பீஸ்ட்' படத்தை தொடர்ந்து சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி". புதிய தலைமுறை. Archived from the original on 15 October 2021. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
- ↑ "வடிவேலு நேரில் அழைத்துப் பாராட்டினார்: ரெடின் கிங்ஸ்லி பேட்டி". இந்து தமிழ் திசை. Archived from the original on 12 November 2021. பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
- ↑ "When Vadivelu appreciated Redin Kingsley!". Sify. Archived from the original on 16 November 2021. பார்க்கப்பட்ட நாள் 15 November 2021.
- ↑ "'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் இணைந்த 'டாக்டர்' பட பிரபலம்". மாலை மலர். Archived from the original on 17 October 2021. பார்க்கப்பட்ட நாள் 17 October 2021.