நியூ கலிடோனியா
நியூ கலிடோனியா (New Caledonia, பிரெஞ்சு மொழி: Nouvelle-Calédonie)[கு 1] என்பது பிரான்சின் கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில், ஆத்திரேலியாவின் கிழக்கில் இருந்து 1,210 கிமீ தூரத்திலும், பிரான்சில் இருந்து 20,000 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.[3] மெலனீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் கிராண்ட் டெரே, லோயல்டீ தீவுகள், செசுட்டர்பீல்டு தீவுகள், பெலெப் தீவுக்கூட்டம், மற்றும் பல சிறிய தீவுகளும் உள்ளன.[4] செசுட்டர்பீல்டு தீவுகள் பவளக் கடலில் அமைந்துள்ளது.[5]
நியூ கலிடோனியா
| |
---|---|
கொடி | |
குறிக்கோள்: "Terre de parole, terre de partage"[1] "பேச்சின் நிலம், பங்கீட்டின் நிலம்" | |
நாட்டுப்பண்: Soyons unis, devenons frères[1] | |
சின்னம் | |
நிலை | Sui generis சிறப்புக் கூட்டமைப்பு |
தலைநகரம் | நூமியா 22°16′S 166°28′E / 22.267°S 166.467°E |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு |
பிராந்திய மொழிகள் |
|
மக்கள் | நியூ கலிடோனியன் |
சுயாட்சி | பிரான்சு |
அரசாங்கம் | சார்பு மண்டலம் |
• தலைவர் | இம்மானுவேல் மாக்ரோன் |
• அரசுத்தலைவர் | பிலிப் கெர்மைன் |
• உயர் ஆணையர் | தியெரி லட்டாஸ்டே |
சட்டமன்றம் | பிராந்திய காங்கிரசு |
நிறுவுதல் | |
• பிரான்சுடன் இணைப்பு | 1853 |
• கடல்கடந்த மண்டலம் | 1946 |
• சிறப்பு கூட்டு | 1999 |
பரப்பு | |
• மொத்தம் | 18,576 km2 (7,172 sq mi) |
• நிலம் | 18,275 km2 (7,056 sq mi) |
மக்கள் தொகை | |
• 2017 மதிப்பிடு | 278,500 (182-வது) |
• அடர்த்தி | 14.5/km2 (37.6/sq mi) (200-வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | US$9.89 பில்.[2] |
• தலைவிகிதம் | US$38,921[2] |
நாணயம் | CFP franc (XPF) |
நேர வலயம் | ஒசநே+11 |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +687 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | NC |
இணையக் குறி | .nc |
நியூ கலிடோனியாவின் நிலப்பரப்பு 18,576 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை 268,767 ஆகும் (ஆகத்து 2014 கணக்கெடுப்பு)[6] இவர்களில் நியூகலிடோனியாவின் பழங்குடியினர் கனாக்கு மக்கள் எனப்படுவோர், ஐரோப்பியக் குடியேறிகள், பொலினீசிய மக்கள் (குறிப்பாக வலிசியர்), மற்றும் தென்கிழக்காசியர், சிறிய அளவு வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினரும் அடங்குவர்.. இதன் தலைநகரம் நூமியா ஆகும்.[3]
1986 ஆம் ஆண்டு முதல் குடியேற்றங்களை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலமாகப் பட்டியலிட்டு வருகிறது.[7] 1987 இல் இங்கு மக்கள் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், பெரும்பான்மையான மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது தடவையாக 2018 நவம்பர் 4 இல் இடம்பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பில்[8][9] 56.9% மக்கள் பிரான்சுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர்.[10] 2020 இல் நடந்த வாக்கெடுப்பில் 53.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இறுதியாக, 2021 நவம்பர் 12 இல் நடந்த வாக்கெடுப்பில் 96.49% மக்கள் விடுதலைக்கு எதிராகவும், 3.51% மக்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.[11] பழங்குடிகளான கனாக்கு மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றைக் காரணம் காட்டி இவ்வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.[12][13]
வரலாறு
தொகுநியூகலிடோனியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் கிமு 1600 முதல் கிபி 500 (லப்பித்தா காலத்தில்) இடம்பெற்றது.[14] லப்பித்தா மக்கள் பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் திறமை வாய்ந்த மாலுமிகளாகவும் வேளாண்மையில் சிறந்து விளங்கியதாகவும் அறியப்படுகிறது.[15]
பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் முதன்முறையாக நியூகலிடோனியாவை 1774 செப்டம்பர் 4 இல் தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது கண்ணுற்றார்.[16] இசுக்காட்லாந்தின் நினைவாக இதற்கு "புதிய கலிடோனியா" என அவர் பெயரிட்டார்.[16] கிராண்ட் டெரே தீவின் மேற்குக் கரையை 1788 இல் கொம்டே டி லப்பேரோசு என்பவர் கண்டுபிடித்தார். லோயால்ட்டி தீவுகளுக்கு வில்லியம் ராவென் என்பவர் 1793-96 இல் பயணம் செய்தார்.[17]
குறிப்புகள்
தொகு- ↑ முன்னர் அதிகாரபூர்வமாக "நியூ கலிடோனியா பிராந்தியமும் சார்புகளும்" (Territory of New Caledonia and Dependencies, பிரெஞ்சு மொழி: Territoire de la Nouvelle-Calédonie et dépendances), சுருக்கமாக "நியூ கலிடோனியா பிராந்தியம்", இப்போது அதிகாரபூர்வமான பிரெஞ்சுப் பெயர் Nouvelle-Calédonie (Organic Law of 19 March 1999, article 222 IV – பார்க்க: [1]).
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "La Nouvelle-Calédonie se dote d'un hymne et d'une devise" (in French). Le Monde.fr. 2010-08-18. http://www.lemonde.fr/politique/article/2010/08/18/la-nouvelle-caledonie-se-dote-d-un-hymne-et-d-une-devise_1399996_823448.html. பார்த்த நாள்: 2013-01-30.
- ↑ 2.0 2.1 "PIB GRANDS AGRÉGATS". ISEE. Archived from the original on 7 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-01.
- ↑ 3.0 3.1 "Présentation". Nouvelle-caledonie.gouv.fr (in French). Archived from the original on 30 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-01-30.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Présentation – L'Outre-Mer". Outre-mer.gouv.fr. பார்க்கப்பட்ட நாள் 2013-01-30.
- ↑ David Stanley (1989). South Pacific Handbook. David Stanley. p. 549. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-918373-29-8.
- ↑ "268 767 habitants en 2014". ISEE. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
- ↑ Trust and Non-Self-Governing Territories (1945–1999) United Nations
- ↑ Willsher, Kim (19 March 2018). "New Caledonia sets date for independence referendum". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018.
- ↑ "Paris meeting to prepare New Caledonia independence vote". Radio New Zealand. 2016-02-02. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
- ↑ Reuters (2018-11-04). "New Caledonia votes 'non' to independence from France". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "'Tonight France is more beautiful': Macron hails New Caledonia's rejection of independence". France 24 (in ஆங்கிலம்). 2021-12-12. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ "New Caledonia rejects independence in final vote amid boycott". Reuters (in ஆங்கிலம்). 2021-12-12. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ "Covid-19 : aucun décès supplémentaire à déplorer au point sanitaire du 11 décembre 2021". Nouvelle-Calédonie la 1ère.
- ↑ "Histoire / La Nouvelle-Calédonie". Nouvelle-caledonie.gouv.fr (in French). 2012-11-20. Archived from the original on 30-10-2012. பார்க்கப்பட்ட நாள் 2013-01-30.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ Leanne Logan; Geert Cole (2001). New Caledonia. Lonely Planet. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86450-202-2.
- ↑ 16.0 16.1 "Rapport annuel 2010" (PDF). IEOM Nouvelle-Calédonie. பார்க்கப்பட்ட நாள் 2013-01-30.
- ↑ Quanchi, Max; Robson, John (2005). Historical Dictionary of the Discovery and Exploration of the Pacific Islands. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810865280.
வெளி இணைப்புகள்
தொகு- New Caledonia : picture post card beautiful – Official Government of France website (in English)
- Tourism New Caledonia