நிரணம் திரிகபாலீசுவரம் தட்சிணாமூர்த்தி கோயில்

நிரணம் திரிகபாலீசுவரம் தட்சிணாமூர்த்தி கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் நிரணம் என்ற இடத்தில் பம்பை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயிலாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் . திராவிடக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இது உள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன் குருவின் அம்சமாக உள்ள தட்சிணாமூர்த்தி ஆவார். [1] [2] திரிகபாசுஸ்வரம் கோயிலின் மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பரசுராம முனிவர் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. [3] கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இந்தக் கோயிலும் ஒன்றாகும். [4] 108 சிவன் கோவில்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று திரிகபாலீசுவரர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மற்றவை கண்ணூர் மாவட்டத்தில் பெரளச்சேரியில் உள்ள கடச்சிரா திருக்கபாலம் சிவன் கோயில் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தில் நாதபுரத்தில் உள்ள நாதபுரம் இரிங்கண்ணூர் சிவன் கோயில் ஆகியவையாகும். [5]

கோயிலின் பக்கவாட்டுத்தோற்றம்

சப்தமாதர்கள்

தொகு
 
சப்த மாதர்கள்

இக்கோயிலில் தனி சன்னதியில் சப்தமாதர்களின் சிலைகள் உள்ளன. மற்ற கோயிலில் காணப்படாத சிறப்பாக இதனைக் கூறலாம். கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள பெரிய சன்னதிகள் ஏழு பலிகல்லு வடிவில் உள்ளன. இவர்களுக்கு காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. சப்த மாதாக்கள் ஆதி பராசக்தியின் வெவ்வேறு வடிவங்களாகக் கருதப்படுகின்றனர். பிராமணி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகியோர் சப்தமாதர்கள் ஆவர்.[6]

கோயில் வரலாறு

தொகு

இது ஒரு பழமையான கோயில் ஆகும். இக்கோயில் பம்பா நதிக்கும், மணிமாலா நதிக்கும் நடுவில் நீரணம் என்ற இடத்தில் அமைந்துள்ளது . இங்கு வித்யா தேவ தட்சிணாமூர்த்தியின் மனதில் திரிகபாலீசுவரன் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிரணம் கவிஞர்கள் காலத்தில் இக்கோயிலும் இது உள்ள இடமும் புகழ் பெற்றிருந்தது. காலவெள்ளத்தில் அது மறந்துபோனது. அண்மையில் பிரபல ஜோதிடரான காணிப்பையூர் சங்கரன் நம்பூதிரிபாட் கோயில் திருப்பணிக்காக, "தேவ பிரஷ்ணத்தை" நடத்தினார். இங்குள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுவது இங்குள்ள சிவலிங்கம் ஆகும். இது சிறப்புத்தன்மை வாய்ந்த சிவலிங்கம் ஆகும். இந்த லிங்கத்திருமேனியாக உள்ள கல் இமயமலையில் மட்டுமே காணும் சிறப்புடையதாகும். கபாலீசுவரன் தட்சிணாமூர்த்தியைமூலவராகக் கொண்ட மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

நிரணம் கவிஞர்கள்

தொகு

கண்ணசான் கவிஞர்கள் என்று அழைக்கப்படும் நிரணம் கவிஞர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கவிஞர்கள் ஆவர். அவர்கள் 'மாதவ பணிக்கர்', 'சங்கர பணிக்கர்,' மற்றும் 'ராம பணிக்கர்' ஆவர்.புகழ்பெற்ற கவிஞரும், அவர்கள் கோயிலுக்கு அருகில் வாழ்ந்த திரிகபாலீசுவரனின் (தட்சிணாமூர்த்தி) பக்தரும் ஆவார். நிரணத்தில் . [7] அவர்களின் படைப்புகள் முக்கியமாக சமஸ்கிருத இதிகாசங்களின் தழுவல், மொழிபெயர்ப்பு மற்றும் புராணங்கள் ஆகும். அவர்கள் பொ.ஆ. 1350-பொ.ஆ.1450இல் வாழ்ந்தவர்கள்.[8]

மேலும் காண்க

தொகு

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Niranam Thrikkapaleeswara Dhakshinamurthy Temple".
  2. Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola
  3. "Tiruvalla - Niranam - Thrikkapaleswaram - Lord Shiva Temples of Pattanamthitta District - Abode of God Shiva On the Internet - Name of Hara encompass; World be free from Suffering".
  4. "108 Shiva temples of Kerala - Worshiped by Parasurama Information".
  5. "108 Shiva temples of Kerala - Worshiped by Parasurama Information 46. Trukkapaleeswaram Mahadeva Temple Nadapuram, 47. Trukkapaleeswaram Mahadeva Temple Peralassery, 48. Trukkapaleeswaram Mahadeva Temple Niranam".
  6. Leeming, David; Fee, Christopher (2016). The Goddess: Myths of the Great Mother. Reaktion Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780235387.
  7. Menon, A. Sreedhara (1979). Social and cultural history of Kerala.
  8. "The Niranam Poets". Archived from the original on 2014-10-14.