நிர்மலா விசுவேசுவர ராவ்

முனைவர் நிர்மலா விசுவேசுவர ராவ் (Nirmala Visweswara Rao) (பிறப்பு:1996 மே 29) இவர் ஓர் குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியத்தில் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். [1] மத்திய பல்கலைக்கழகத்தின் நாட்டிய கலதாரா பேராசிரியர் பசுமர்த்தி ராமலிங்க சாஸ்திரி மற்றும் ஐதராபாத்தின் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆச்சார்யா சிகிச்செர்லா கிருஷ்ணா ரெட்டி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடனத்தில் முதுகலைப் பட்டம், மதிப்புறு முனைவர் பட்டம் மற்றும் முனைவர் (பி.எச்.டி.) ஆராய்ச்சி ஆகியவற்றை முடித்துள்ளார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் காமனா இராம்சந்தர் ராவ் மற்றும் சீதா மகாலட்சுமி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் தனது குரு சிந்தா இராம்மூர்த்தியிடமிருந்து 10 வயதில் நடனத்தைக் கற்கத் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கதிமி விசுவேசுவர ராவ் என்பவரை மணந்தார். கணவரின் ஊக்கத்தோடு இவர் தனது முதுகலைப் பட்டம் பெற்றார். பசுபதி இராமலிங்கா சத்ரி என்பவரிடம் நடனத்தைக் கற்றுக் கொண்டு தனது தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்தார். இவர் 1998 ஆம் ஆண்டில் நிமலா நிருத்யா நிகேதன் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இது ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் இந்திய கலாச்சார கலைகளால் அங்கீகரிக்கப்பட்டது.

தொழில்

தொகு

இவர் ஆந்திர பல்கலைக்கழகதிலிருந்து இளங்கலைப் பட்டமும், தெலுங்கு பல்கலைக்கழகத்திலிருந்து நடனத்தில் சான்றிதழ் படிப்பும், மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் மற்றும் ஐதராபாத்து பி.எஸ்.தெலுங்கு பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 2011இல் இந்தியாவின் ஐதராபாத்து பி.எஸ். தெலுங்கு பல்கலைக்கழகத்திலிருந்து நுண்கலைகளில் முனைவர் (குச்சிபுடி & கராகா நிருத்யம்) பட்டமும் பெற்றுள்ளார். [3]

இவர் ஆறு வயதிலிருந்தே நடனமாடத் தொடங்கினார். குழந்தை பருவத்திலிருந்தே, இவர் உள்நாட்டில் பல கட்டங்களை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி பல விருதுகளை வென்றுள்ளார். குச்சிபுடி நடனத்தின் நல்ல வெளிப்பாட்டுப் பகுதியுடன், இவர் நடனத்தின் மீது ஒரு இயல்பான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார். மேலும், மிகச் சிறந்த மேடை இருப்பைக் கொண்டிருக்கிறார். இவர் 1994 முதல் ஒரு தொழில்முறை நிபுணராக உருவெடுத்துள்ளார். இவர் உலகின் அனைத்து கண்டங்களிலும் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [4]

சர்வதேச மற்றும் சிறந்த செயல்திறன்

தொகு

போலந்து, துருக்கி, பல்கேரியா, ஆஸ்திரியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தோஹா கத்தார், மஸ்கட், துபாய், பகுரைன் போன்ற வெளிநாடுகளில் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தொகு

2008 மே மாதம் 9 அன்று கத்தாரின் தோகாவிலுள்ள அகில இந்திய தெலுங்கு சங்கத்திலிருந்து "நாட்டிய கலா வித்வான்மணி" என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2003 சூன் 23 அன்று மாநிலம் தழுவிய அமைப்பான மனோரஞ்சனி என்ற அமைப்பு நிருத்ய கௌமுடி என்ற விருதினை வழங்கியது. மஸ்கத் தெலுங்குச் சங்கத்தின் சார்பில் "சிறந்த நடனக் கலைஞர்" என்ற விருதினைப் பெற்றுள்ளார். 2008 சூன் 6 அன்று 6 வது உலகளாவிய சர்வதேச நுகர்வோர் விழாவிலிருந்து "சிறந்த நடனக் கலைஞர்" விருது வழங்கப்பட்டது. மலேசியாவில் உள்ள தெலுங்கு சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டத்திற்காக "கோல்டன்" விருது வழங்கப்பட்டது. அகில இந்திய அளவிலான அகில பாரத நிருத்யா உத்ஸவம் என்ற அமைப்பு "சம்ஸ்கார பாரதி" என்ற விருதினை வழங்கியது. ஆந்திராவின் மாண்புமிகு ஆளுநர் சி.ரங்கராஜனிடமிருந்து உகாதி கொண்டாட்டங்களில் சிறந்த நடனத்திற்காக நினைவு பரிசு பெற்றார். [5]

வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Recital info" (PDF). www.fullhyderabad.com.
  2. http://kuchipudikalakar.blogspot.com/2012/10/dr-nirmala-visweswara-rao.html
  3. http://nirmalavisweswararao.blogspot.com/p/about-dr-nirmalavisveswara-rao.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://nirmalavisweswararao.blogspot.com/p/dr-nirmalavisveswara-rao.html
  5. https://events.fullhyderabad.com/kuchipudi-dance-recital-by-k-nirmala-visweswara-rao/2006-september/tickets-dates-videos-reviews-17247-1.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_விசுவேசுவர_ராவ்&oldid=3349681" இலிருந்து மீள்விக்கப்பட்டது