நீரிழிவு விழித்திரை நோய்
நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy)[1] என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் உண்டான விழித்திரையைப் பாதிக்கும் விழித்திரை நோயைக் குறிக்கும். இந்நோய், முடிவில் குருட்டுத் தன்மையை உருவாக்கும் தன்மையுள்ளது[2]. இது, நீரிழிவினால் கண்ணில் ஏற்படும் மாற்றங்களைக் (சிக்கல்களை) உள்ளடக்கிய உள்பரவிய நோயாகும். பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எண்பது சதவிகித நோயாளிகளில் இவ் விழித்திரை நோய் உள்ளது[3]. என்றாலும், கண்களை நன்கு பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலமாகவும், சரியான, கவனமான சிகிச்சைகள் மூலமாகவும், குறைந்தபட்சம் தொண்ணூறு சதவிகித நேர்வுகளைக் குறைக்க முடியமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன[4]. நீரிழிவினால் பாதிக்கப்படுகின்ற காலம் அதிகமாகும்போது நீரிழிவு விழித்திரை நோய் உண்டாவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கின்றன[5].
நீரிழிவு விழித்திரை நோய் | |
---|---|
நீரிழிவு விழித்திரை நோய்க்கான சிதறடி சீரொளி (லேசர்) அறுவை சிகிச்சையினைக் காட்டும் விழியடி பிம்பம் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | diabetology, கண் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | H36. (E10.3 E11.3 E12.3 E13.3 E14.3) |
ஐ.சி.டி.-9 | 250.5 |
நோய்களின் தரவுத்தளம் | 29372 |
மெரிசின்பிளசு | 000494 001212 |
ஈமெடிசின் | oph/414 oph/415 |
ம.பா.த | D003930 |
நீரிழிவு விழித்திரை நோய் நான்கு முதன்மை நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது:
1. அடிப்படையானது 2. நீரிழிவு விழிப்புள்ளி நோய் (Diabetic maculopathy) 3. பெருக்கத்திற்கு முன்பானது (Pre-proliferative) 4. பெருக்கம் தொடர்பானது (Proliferative)
நீரிழிவு விழித்திரை நோய் பாதிப்பினால் விழித்திரையில் உள்ள தந்துகிகளில் (நுண்ணிய இரத்தநாளங்கள்) சிறிய பலூன் போன்று புடைப்புக் காணப்படுகிறது. இரத்த நாளங்கள் உடைந்து விழித்திரையின் மேல் இரத்தம் பரவுகிறது. இரத்தக் கசிவு விழிப் பின்னறை நீரிலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விழிப் பின்னறை நீரினுள் வளர்ச்சியுறலாம். லேசர் கதிர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்வதினால் இந்நிலைத் தொடராமல் தடுக்கலாம்.
அறிகுறிகள்
தொகுமுன்னெச்சரிக்கை அறிகுறிகள் நீரிழிவு விழித்திரை நோய்க்கு ஏதுமில்லை. வெகு சீக்கிரமாக பார்வை இழப்பை உண்டாக்கும் விழிப்புள்ளி திரவக் கோர்வைக்கும் (macular edema) சில காலத்திற்கு முன்னெச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமலிருக்கலாம். பொதுவாக, விழிப்புள்ளி திரவக் கோர்வை உள்ளவர்கள் படிப்பதற்கும், வண்டிகளை ஓட்டுவதற்கும் மிகவும் கடினமான இருக்கும் வகையில் மங்கலான பார்வையை கொண்டிருப்பார்கள். சில நோயாளிகளில் ஒரு நாளைக்குள் பார்வை மேம்பட்டோ அல்லது இன்னும் மோசமாகவோ போகலாம்.
மேலும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Diabetic Retinopathy பரணிடப்பட்டது 2014-05-12 at the வந்தவழி இயந்திரம்
- National Diabetes Information Clearinghouse பரணிடப்பட்டது 2010-02-21 at the வந்தவழி இயந்திரம்
- NHS Diabetic Eye Screening Programme
மேற்கோள்கள்
தொகு- ↑ "Diabetic retinopathy". Mayo Clinic. பார்க்கப்பட்ட நாள் 14 May 2012.
- ↑ "Diabetic retinopathy". Diabetes.co.uk. பார்க்கப்பட்ட நாள் 25 November 2012.
- ↑ Kertes PJ, Johnson TM, ed. (2007). Evidence Based Eye Care. Philadelphia, PA: Lippincott Williams & Wilkins. p. 123-142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7817-6964-7.
- ↑ Tapp RJ, Shaw JE, Harper CA et al. (June 2003). "The prevalence of and factors associated with diabetic retinopathy in the Australian population". Diabetes Care 26 (6): 1731–7. doi:10.2337/diacare.26.6.1731. பப்மெட்:12766102. https://archive.org/details/sim_diabetes-care_2003-06_26_6/page/1731.
- ↑ Dr Caroline MacEwen. "diabetic retinopathy". பார்க்கப்பட்ட நாள் August 2, 2011.