நீலம் போல் (Neelam Pol)(பிறப்பு 1981) என்பவர் தொழிலதிபர் மற்றும் கேல் பிளானட் அறக்கட்டளை (Khel Planet Foundation) நிறுவனர் ஆவார்.[1][2][3] இவர் ஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்.[4] போல் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத் தலைநகரான மும்பையில் வசிக்கிறார்.[5]

நீலம் போல்
Neelam Pol
பிறப்பு1981
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
பணிநிறுவனர், கேல் பிளானட்
அறியப்படுவது21 ஆம் நூற்றாண்டு கல்வி மற்றும் சமூக தொழில்முனைவு
வாழ்க்கைத்
துணை
சௌரப் அகர்வால்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

போல் வலது கை போகோமெலியாவுடன் பிறந்தார். இது ஒரு நிரந்தர, மேம்பாடற்ற, உடல் ஊனம் ஆகும். இந்த ஊன வகையில் வலது கை இடது கையை விடக் குறைவான நீளத்தில் காணப்படும்.[2]

கல்வி

தொகு

போல் ஆர்வர்டு பல்கலைக்கழக கல்வியியல் பட்டதாரி பள்ளியில் பன்னாட்டுக் கல்விக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6] இவர் காரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் உத்தி மேலாண்மையில் முதுநிலை மேலாண்மை கல்வியினை முடித்தார்.[7] இவர் திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டதாரி ஆவார்.

மோல், உலக வங்கி அறிஞராகவும், முக்கிய கூட்டாளராகவும் இருந்துள்ளார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கல்வி தொழில்முனைவோர் நிதியுதவியினை 2014-ல் பெற்றார்.

தொழில்

தொகு

போல் இன்ஃபோசிஸில் மென்பொருள் பொறியாளராகத் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பின்னர் ஐபிஎம் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்தார். இங்கு இவர் வணிக விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டு மேலாளராக பணியாற்றினார்.[5]

போல், 2012-ல் பெருநிறுவன வாழ்க்கையை விட்டு வெளியேறினார். மேலும் கிராமப்புற இந்தியாவில் அடிமட்ட மட்டத்தில் அரசாங்கப் பள்ளிகளுடன் பணிபுரிந்தார். பள்ளி தலைமைத்துவத்தில் கவனம் செலுத்தினார்.[8]

2014ஆம் ஆண்டில், போல், இலாப நோக்கற்ற நிறுவனமான கேல் பிளானட் அறக்கட்டளையை நிறுவினார். இது குழந்தைகளின் முழுத் திறனையும் வளர்க்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[1][5] 2015-ல், சமூக தொழில்முனைவோர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு சுவீடனில் நடந்த சமூக தொழில்முனைவோர் மன்ற கூட்டத்தில் இவரைச் சிறந்த சமூக தொழில்முனைவோராகத் தேர்ந்தெடுத்தனர்.[9]

போல் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இந்தியாவுடனான புதுமை திட்ட நிபுணராகச் செயல்பட்டார். கடந்த காலங்களில் இவர் உலக வங்கியின் கல்வி ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். இங்குப் பீகார் அரசாங்கத்தின் ஆசிரியர்களின் செயல்திறனை மேம்படுத்தும் திட்டத்தின் ஆதரவைப் பெற்று தலைமை தாங்கினார். தேசிய உயர் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றும் மகாராட்டிர அரசின் புதுமை மற்றும் கொள்கை ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

போல் தகவமைப்புத் தலைமையின் பயிற்சியாளர் மற்றும் இளம் பட்டதாரிகளின் குழுவின் தலைமை வழிகாட்டியாக இருந்து இளைஞர்கள் சமூக மாற்ற முகவர்களாக மாற உதவுகிறார்.[7] பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கல்லூரிகளில் உரையாற்றியுள்ளார்.[10][11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Khel Planet Foundation | Devex". www.devex.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-26.
  2. 2.0 2.1 "Meet five women who say #MainBeautiful" (in en). femina.in. https://www.femina.in/women/meet-five-women-who-bring-out-the-inner-beauty-through-their-stories-5155-2.html. 
  3. "A Planet to Play on". www.redelephantfoundation.org. Archived from the original on 2018-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-11-26.
  4. "2014 Education Innovation Pitch Competition". Harvard Graduate School of Education (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  5. 5.0 5.1 5.2 "Neelam Pol | Changemakers". www.changemakers.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-11-26.
  6. "Neelam Pol". HuffPost India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-26.
  7. 7.0 7.1 "Pol_Neelam-e1385086219162 - Asia Leadership Trek". www.asialeadershiptrek.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-26.
  8. "About - Khel Planet - Play for 21st century life skills I An Education Non-profit" (in en-US). Khel Planet - Play for 21st century life skills I An Education Non-profit. http://khelplanet.org/about/. 
  9. "Neelam Pol". SE Forum (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-02. Archived from the original on 2019-07-07. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  10. "Vidyalankar Dnyanapeeth Trust". alumni.vidyalankar.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  11. "Ashoka India brings country's innovative schools & pioneering entrepreneurs together in its first Changemaker Conclave in India". News18. 6 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  12. "Entrepreneurship & Startup Opportunities for Professionals (IEEEBS ESOP)". IEEE Bombay Section (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-08-14. Archived from the original on 2020-10-01. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_போல்&oldid=4110141" இலிருந்து மீள்விக்கப்பட்டது