நீல கூவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கூவா
இனம்:
கூ. கேருலே
இருசொற் பெயரீடு
கூவா கேருலே
லின்னேயஸ், 1766

நீல கூவா (Blue coua-கூவா கேருலே என்பது குக்குலிடே என்ற குயில் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது மடகாசுகர் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

வகைப்பாட்டியல் தொகு

இந்த சிற்றினத்தை 1766-ல் கரோலஸ்ல் லின்னேயஸ் விவரித்தார். ஒரு காலத்தில் பன்னிரண்டு வகையான கூவா சிற்றினங்கள் இருந்தன. ஆனால் இன்று எட்டு அல்லது ஒன்பது இனங்கள் மட்டுமே உள்ளன.[2] கூவா பேரினமானது கோஆ என்பதிலிருந்து உருவானது.[3] இது குயிலின் மலகசி பெயராகும். பிரெஞ்சு மொழியில் இந்த பறவை கூவா ப்ளூ என்று அழைக்கப்படுகிறது.[4]

விளக்கம் தொகு

பறவையின் இறகுகள் அடர் நீலத்திலும் கண்ணைச் சுற்றி இறகுகள் இல்லாத தனித்துவமான நீல முட்டை வடிவப் பகுதியும் உள்ளது. எல்லா குயில்களைப் போலவே, இவை பெரிய பாதங்களைக் கொண்டுள்ளன. மீளக்கூடிய மூன்றாவது கால்விரல்களும் கொண்டுள்ளன. இது ஒரு பருமனான நிழல் மற்றும் குறுகிய, பரந்த இறக்கைகள் மற்றும் நீண்ட வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பறவைகளின் சராசரி உடல் நீளம் 48 முதல் 50 cm (18.9 முதல் 19.7 அங்) ்வரையும், உடலின் எடை 30 முதல் 60 கிராம்கள் (1.1 முதல் 2.1 அவுன்சுகள்) வரையிலும், பெண் பறவையின் எடை சற்று அதிகமாகவும் காணப்படும். இதன் ஓசை சம இடைவெளியில் ″கோஓ கோஓ கோஓ″ எனவும் சுருக்கமாக ″ப்ரீஇ″ எனவும் ஒலிக்கும்.

சூழலியல் தொகு

நீலக் கூவா என்பது பூச்சிகள், பழங்கள் மற்றும் சிறிய ஊர்வனவற்றை உண்ணும். மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக்காடுகளில் காணப்படும் பூச்சிகள், பழங்கள் மற்றும் சிறிய ஊர்வனவற்றை உண்ணும் ஒரு அனைத்துண்ணி வகையினைச் சார்ந்தது. ஒரு மரக்கிளையில் இலைகள் மற்றும் கிளைகளால் கட்டப்பட்ட கூட்டில் பெண் பறவை வெள்ளை முட்டையை இடுகின்றன.[5][6]

பரவல் தொகு

இந்த சிற்றினம் மடகாசுகரின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள காடுகளில் காணப்படுகிறது மற்றும் பொதுவானதாகக் கருதப்படுகிறது.[7]

நிலை மற்றும் பாதுகாப்பு தொகு

இந்த சிற்றினம் பொருத்தமான வாழ்விடங்களில் பொதுவானதாகவும், இதன் மக்கள்தொகை நிலையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்தப் பறவையின் பாதுகாப்பு நிலையை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தியுள்ளது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Coua caerulea". IUCN Red List of Threatened Species 2018: e.T22684188A130094715. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22684188A130094715.en. https://www.iucnredlist.org/species/22684188/130094715. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Madagascar - Part 5". Vladimir Dinets. பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
  3. Jobling, James A. (2005). A Dictionary of Scientific Bird Names. Oxford University Press. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854634-3.
  4. "Coua caerulea — Common names Blue Madagascar Coucal". Encyclopedia of Life. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
  5. "Blue Couas or Blue Madagascar Coucals". Beauty of Birds. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
  6. Nathan. "Wild Fact #242 – Why the Blue Face? – Blue Coua". WildFacts. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
  7. Sinclair, Ian; Langrand, Olivier (2003). Birds of the Indian Ocean Islands (new ed.). Cape Town: Struik Publishers. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86872-956-7.[தொடர்பிழந்த இணைப்பு]Sinclair, Ian; Langrand, Olivier (2003).
  8. "Blue Coua Coua caerulea". BirdLife International. பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_கூவா&oldid=3652802" இலிருந்து மீள்விக்கப்பட்டது