நீல நாசி சின்னான்

நீல நாசி சின்னான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகெலும்பி
வகுப்பு:
பறவை
வரிசை:
பாசெரிபார்மிசு
குடும்பம்:
பைக்னோனோடிடே
பேரினம்:
பிராக்கிபோடியசு
இனம்:
பி. நியுவென்குயிய்சு
இருசொற் பெயரீடு
பிராக்கிபோடியசு நியுவென்குயிய்சு
பிஞ்ச், 1901
வேறு பெயர்கள்
  • பைக்கோனோனோடசு நியுவென்குயிய்சு
  • யூப்பிடியோலசு நியுவென்குயிய்சு
  • போலியோலொபசு நியுவென்குயிய்சு

நீல நாசி சின்னான் (Blue-wattled bulbul)(பிராக்கிபோடியசு நியுவென்குயிய்சு) என்பது குருவி வரிசையில் பறவைகளின் கொண்டைக்குருவி குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். குறிப்பிட்ட அடைமொழியானது இடச்சு ஆய்வாளர் ஆண்டன் வில்லெம் நியுவென்குயிசை நினைவுகூருகிறது. இந்த பறவை போர்னியோ மற்றும் சுமாத்திரா தீவுகளில் மட்டுமே வாழ்கின்றது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்

தொகு

அரிதாகக் காணப்படும் இந்தப் பறவையின் நிலை தெரியவில்லை, ஏனெனில் இது உண்மையில் ஒரு தனித்துவமான சிற்றினமா அல்லது கருப்பு-தலை சின்னான் மற்றும் சாம்பல் வயிற்று சின்னான் அல்லது பிற நெருங்கிய தொடர்புடைய சின்னான்களுக்கிடையே உள்ள இயற்கையான கலப்பினமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நீல நாசி சின்னானின் மாற்றுப் பெயர்களில் மலேசிய சின்னான், நியுவென்குயி சின்னான் ஆகியவை அடங்கும்.

துணையினங்கள்

தொகு

இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

  • பி. நி. இனெக்சுபெடேடசு- (சேசன், 1939) : சுமாத்திரா
  • பி. நி. நியுவென்குயிய்சு- (பின்ஷ், 1901) : போர்னியோ

காப்புநிலை

தொகு

இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படலாம் ஆனால் 1900 மற்றும் 1937-இல் சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகள் மற்றும் சில அவதானிப்புகளிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. 1992-ல்[2] அபோய் வனப் பகுதியில் நீல நாசி சின்னானின் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_நாசி_சின்னான்&oldid=3878014" இலிருந்து மீள்விக்கப்பட்டது