நுண்ட்கோல் ஏரி

நந்தி குணடு, கலோடகா ஏரி என அழைக்கப்படும் நுண்ட்கோல் ஏரி அல்லது நுண்ட்கோல் ஏரி (Nundkol Lake) இந்தியாவின் சம்மு-காசுமீரில் உள்ள காசுமீர் பள்ளத்தாக்கின் காந்தர்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அல்பைன் ஏரி ஆகும். இந்த ஏரி இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது.[1]

நுண்ட்கோல் ஏரி
View of Nundkol Lake
சம்மு காசுமீரில் நுண்ட்கால் ஏரி அமைவிடம்
சம்மு காசுமீரில் நுண்ட்கால் ஏரி அமைவிடம்
நுண்ட்கோல் ஏரி
அமைவிடம்காந்தர்பல் மாவட்டம், சம்மு காசுமீர், இந்தியா
ஆள்கூறுகள்34°25′04″N 74°56′08″E / 34.417855°N 74.935663°E / 34.417855; 74.935663
ஏரி வகைஊட்டச்சத்து குறைந்த ஏரி
முதன்மை வரத்துகாங்பால் ஏரி
முதன்மை வெளியேற்றம்சிந்து ஆறு
அதிகபட்ச நீளம்1.2 கிலோமீட்டர்கள் (0.75 mi)
அதிகபட்ச அகலம்0.5 கிலோமீட்டர்கள் (0.31 mi)
மேற்பரப்பளவு1.5 km2 (0.58 sq mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,505 மீட்டர்கள் (11,499 அடி)

சொற்பிறப்பியல்

தொகு

நுண்ட்கோல் ஏரி முதலில் நந்தி குண்டு என்று அழைக்கப்பட்டது. அதாவது நந்தி ஏரி. "நுண்ட்கோல்" என்ற சொல்லுக்கு நந்தி ஏரி என்றும் பொருள். நந்தி என்பது இந்துக் கடவுளான சிவனின் காளை வாகனமாகும்.[1]

புவியியல்

தொகு

நுண்ட்கோல் ஏரி ஹரமுக் மலையில் 5,142 மீட்டர் (16,870 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. கங்காபால் ஏரி பெரியதாகவும், அதிக உயரத்திலும் ஏரியின் வடக்கே ஒன்றரை கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. பசுமையான புல்வெளிகளால் சூழப்பட்ட நுண்ட்கோல் ஏரியின் கரைகள் கோடைக்காலத்தில் சுற்றுலா முகாம் இடமாகச் செயல்படுகின்றன. நரனாக் அருகிலுள்ள குடியேற்றமாகும். ஏரிப்பகுதி மலையேறுவதற்கான அடிப்படை முகாமாகச் செயல்படுகிறது.

நுண்ட்கோல் ஏரிக்கு கங்காபால் ஏரி மற்றும் ஹரமுக் மலையின் உருகும் பனிப்பாறைகள் மூலம் நீர் கிடைக்கிறது. இது சிந்து நதியின் முக்கிய வலது கிளை ஆறானா வாங்க நல்லாவை உருவாக்குகிறது.[2]

மத முக்கியத்துவம்

தொகு

நுண்ட்கோல் ஏரி இந்துக்களுக்குப் புனிதமானது. புராண வழக்கத்தின் படி, இந்த ஏரிக்கு அருகில் பெரும் தவம் செய்த சிலாத் முனிவரின் மகனாக நந்தி பிறந்தார். சிலாத்தின் தவத்தின் பின்னர், சிவன் தனது நிரந்தர இருப்பிடத்தை எடுத்துக் கொண்டார். ஏரியின் உட்புற நீல நிறம், சிவன் இருப்பதைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது. ஏரியின் வெளிப்புறப் பச்சை ஒளிப் பகுதி நந்தியின் இருப்பைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது. இங்கு நந்திசா என்ற பெயரிலும் சிவன் வணங்கப்படுகிறார்.[3][1]

தாவரங்களும் விலங்குகளும்

தொகு

குளிர்காலத்தில், நுண்ட்கோல் ஏரி உறைந்து பனியால் மூடப்பட்டிருக்கும். கோடைக்காலத்தில், ஏரியின் படுகை ஆல்பைன் மலர்களால் சூழப்பட்டுக் காணப்படும். கியூம், நீல கசகசா, பொட்டென்டில்லா மற்றும் ஜென்டியன் ஆகியவை ஒப்பீட்டளவில் பொதுவானவை. கெடிசாரம் மலர்கள் வசந்த காலத்தின் பிற்பகுதியில் ஏரியைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் காணப்படுகின்றன.

நுண்ட்கோல் ஏரியில் ட்ரவுட் மீன் உள்ளது. இதில் பழுப்பு நிற ட்ரவுட் மீனும் அடங்கும். உரிமம் பெற்ற மீனவர்கள், மீன்களைப் பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அணுகல்

தொகு

கோடைக்காலத்தில் மட்டுமே நுண்ட்கோல் ஏரிக்குச் செல்ல முடியும். குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மலையேற்றங்கள் மூடப்படுகின்றன. சிறீநகரிலிருந்து 65 கி. மீ. தூரத்திற்குச் சாலையின் மூலம் வாகனங்களில் சென்றடையலாம். இது கந்தர்பால் மற்றும் வாயில் வழியாக நரனாக் மலையேற்ற முகாமுக்குச் செல்கிறது. ட்ருனாகுலில் உள்ள ஆல்பைன் புல்வெளிகள் மற்றும் பட்பத்ரியில் உள்ள மலைப்பகுதி, இந்த ஏரியின் இரண்டு நாள் மலையேற்றப் பயணத்தின் பாதியில் அமைந்துள்ளது. நரனாக்கிற்கு மேற்கே 10 கி. மீ. தொலைவில் உள்ள சாட்டர்குல் கிராமத்திலிருந்து ஒரு மாற்று மலையேற்ற வழி தொடங்குகிறது, இது மக்லிசின் புல்வெளிகள் வழியாகச் செல்கிறது. பந்திபோரா வழியாகவும் இந்த ஏரியை அணுகலாம். ஐந்து நாள் மலையேற்றத்தின் தொடக்க இடம் அரின் ஆகும். சுற்றுலாப் பயணிகள் நாரனாக் மலையேற்றத்தை விரும்புகிறார்கள். கட்சர் ஏரி, விசன்சர் ஏரி மற்றும் சோன்மார்க் ஏரிகள் காணப்படும் வழியாகத் திரும்பி வர விரும்புகின்றனர்.[4]

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Siudmak, John (2013-01-01). "Appendix: Kashmirian Literary Evidence for Multi-Headed Śiva Images" (in en). Handbook of Oriental Studies (Brill). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-24832-8. https://brill.com/view/book/9789004248328/B9789004248328_012.xml.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "BRILL" defined multiple times with different content
  2. "Sacred Shrines of Haramukh". dailyexcelsior.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-09.
  3. Excelsior, Daily (2012-08-17). "Sacred Shrines of Haramukh" (in en-US). https://www.dailyexcelsior.com/sacred-shrines-of-haramukh/. 
  4. "Naranag-Gangabal Trek". KashmirTreks. பார்க்கப்பட்ட நாள் 27 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ட்கோல்_ஏரி&oldid=4089644" இலிருந்து மீள்விக்கப்பட்டது