நூரோந்து சாமிமலை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

நூரோந்து சாமிமலை தமிழ்நாட்டிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை வட்டம், கோட்டையூர் ஊராட்சியைச்[4] சேர்ந்த கிராமமாகும்.

நூரோந்து சாமிமலை
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ம. சரயு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வரலாறு

தொகு

சுமார் 230 வருடத்திற்கு முன்பு நூரோந்துசாமி என்ற ஒரு சன்னியாசி ஒரு மடத்தினை கட்டி இங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு உணவு, உடை, கல்வி ஆகியவற்றினை அளித்தார். காலப்போக்கில் அப்பகுதியில் ஜங்கமர் என்ற சிவனை வழிபடும் மக்கள் குடிபெயர்ந்தனர். தற்பொழுது அந்தப் பகுதியைச் சுற்றிலும் உள்ள சிவபுரா, தொட்டி பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள மலையின் மீதிருந்து காணும் போது காவிரி ஆறு பாய்ந்தோடுவதனைக் காணலாம்.

சிறப்பு

தொகு

இக்கிராமம் சுமார் 3600 மீட்டர் உயரம் கொண்ட மலையின் மீது அமைந்து உள்ளது. மேலும் இது பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க தலங்களை கொண்டுள்ளது. இங்கு சுமார் 800 வருடங்கள் பழைமைவாய்ந்த சிவன் கோவில் ஒன்று காணப்படுகிறது. இங்கு ஏற்றப்படும் தீபம் இளநீரால் ஏற்றப்படுவது சிறப்பாகும்.

உணவு முறை

தொகு

இங்கு ராகி, தேன், காட்டுக் கிழங்கு, மலைக் கீரை வகை உணவுகளை உணவாக உட்கொள்கின்றனர்.

சிறப்பு பண்டிகைகள்

தொகு

மாகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். மேலும் இங்கு தைப்பொங்கல், தசரா போன்ற பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூரோந்து_சாமிமலை&oldid=3560990" இலிருந்து மீள்விக்கப்பட்டது