நெகிழி மறுசுழற்சி
நெகிழி மறுசுழற்சி என்பது ஸ்கிராப் அல்லது கழிவுநெகிழியை மீட்டெடுத்து அசல் வடிவத்தில் இருந்து, சில நேரங்களில் முற்றிலும் வேறுபட்ட பயனுள்ள மறுசெயல்பாடு பொருள்களை தயாரிக்கும் செயல்பாடு ஆகும். உதாரணமாக குளிர்பானம் பாட்டில்களை உருக்கி பின்னர் நெகிழி நாற்காலிகள் மற்றும் மேசைகள் உருவாக்குதல். பொதுவாக ஒரு நெகிழி அதே வகை நெகிழியாக மாற்றப்படுவதில்லை, மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பெரும்பாலும் மறுசுழற்சி செய்ய இயலாது.[சான்று தேவை]
சவால்கள்
தொகுகண்ணாடி மற்றும் உலோகம் போன்ற மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில், நெகிழி பாலிமர்களின் மறுசுழற்சிக்கு அதிக செயலாக்கம் தேவைப்படும். பெரிய பாலிமர் சங்கிலிகளின் உயர்ந்த மூலக்கூறு எடை காரணமாக குறைந்த என்ட்ரோபி கொண்டிருக்கும். ஒரு மேக்ரோ மூலக்கூறு அதன் முழு நீள அளவும் சூழலுடன் இடைவினைபுரிகிறது. அதனால் அது போன்ற ஒரு அமைப்பை கொண்ட கரிம மூலக்கூறுடன் ஒப்பிடுகையில் (அடக்கவெப்பம் பார்க்க) அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. தனியாக வெப்பம் மட்டும் பெரிய மூலக்கூறுவை கலைக்க போதாது, அதனால் நெகிழியை திறமையாக கலந்திட அவை கிட்டத்தட்ட ஒரே அமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும். பல்வேறு வகையான நெகிழிகளை ஒன்றாக உருக்கும் போது, அவை எண்ணெய் மற்றும் தண்ணீர் போன்ற நிலைகளில் பிரிந்து, தனி அடுக்குகளில் அமைக்கின்றன. கட்ட எல்லைகள் காரணமாக பாலிமர் கலவைகள் பலவீனம் அடையும். இதன் விளைவாக இந்த பொருள்கள் குறைந்த பயன்பாடுகளில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
நெகிழிகளை மறுசுழற்சி செய்ய மற்றொரு தடை சாயங்கள், கலப்படங்கள், நிரப்பிகள் மற்றும் சேர்ப்பான்களின் பரவலான பயன்பாடு ஆகும். பாலிமர் பிசுபிசுப்பாக இருப்பதால் மலிவாக நிரப்பிகளை நீக்க இயலாது, மற்றும் கூடுதல் சாயங்களை நீக்கும் செயல்முறைகளினால் பாலிமர் சேதமடைந்துவிடும். கூடுதல் சேர்ப்பான்கள் குறைவாக சேர்ப்பதால் பான கன்டெய்னர்கள் மற்றும் நெகிழிப் பைகள் அடிக்கடி மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் கழிவுகளிலிருந்து மற்றும் குப்பைகளில் இருந்து நெகிழி அதிக அளவில் அகற்ற மற்றொரு தடையாக இருப்பது, சிறிய நெகிழி பொருட்களுக்கு உலகளாவிய முக்கோணம் மறுசுழற்சி சின்னம் மற்றும் அதனுடன் இணைந்த எண் இல்லாதே காரணம். இதற்கு ஒரு சரியான உதாரணம் பொதுவாக துரித உணவு உணவகங்களில் விநியோகம் பயன்படும் அல்லது பிக்னிக்களில் பயன்பாட்டுக்கு கோடிக் கணக்கில் விற்கப்படும் நெகிழி பாத்திரங்கள் ஆகும்.[சான்று தேவை]
மக்கும் நெகிழிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.[1] இந்த நெகிழிகள் மறுசுழற்சி செய்யப்படும் பிற நெகிழியுடன் கலந்து இருந்தால், மீட்டெடுத்து நெகிழியின் பண்புகள் மற்றும் உருகும் நிலை மாறுவதால் மீண்டும் மறுசுழற்சி செய்ய இயலாது.[சான்று தேவை]
செயல்முறைகள்
தொகுமறுசுழற்சிக்கு முன், நெகிழி தங்கள் பிசின் வகையை பொறுத்து வரிசைப்படுத்தப்படுகின்றன. நெகிழியை மிட்பவர்கள் 1988இல் நெகிழி தொழில் சங்கம் மூலம் உருவாக்கப்பட்ட பிசின் அடையாள குறியீட்டை பயன்படுத்தினர். இது பாலிமர் வகைகளை வகைப்படுத்தும ஒரு முறை. பாலியெத்திலின் டேரேப்தலேட் பொதுவாக பிஇடி என குறிப்பிடப்படுகிறது. இதன் பிசின் குறீயிட்டு எண் 1. நெகிழி மீட்பாளர்கள் இப்போது [ரிஐசி] பதிலாக தானியங்கி அமைப்புகளை பயன்படுத்துகிறார்கள். அகச்சிவப்பு தொழில்நுட்பம் இதற்கு எடுத்துக்காட்டு. சுழற்சிக்கு முன்னர், நெகிழி பொருட்கள் நிறத்தின் அடிப்படையில் பிரிக்கப்படும். மறுசுழற்சி செய்யபடவேண்டிய நெகிழி துண்டு துண்டாகப்படும். இந்த துண்டு துண்டுகளாக ஆக்கப்பட்ட நெகிழியில் இருந்து பின்னர் காகித அடையாளங்கள் போன்ற அசுத்தங்கள் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . இந்த துண்டுகள் பின்னர் துகள்கள் வடிவத்தில் உருகப்பட்டு மற்ற பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும்.
மோனமர் மறுசுழற்சி
தொகுமறுசுழற்சி சவால்களை பாலிமர் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பாலிமெரிஷேஹன் என்பதற்கு எதிர்மறையான செயல்பாடன மோனமர் மறுசுழற்சி முறையை பயன்படுத்தி தீர்க்க முடியும். இந்த முறையின் மூலம் பாலிமர்களை உருவாக்கிய இரசாயனங்களின் கலவையை பெற முடியும். இதை சுத்திகரித்து அதே வகை புதிய பாலிமர் சங்கிலிகளை ஒன்றிணைக்க முடியும். தியு பாண்ட் மீதநோலைசிஸ் மூலமாக பிஇடி மறுசுழற்சி செய்யும் ஒரு முன்னோட்ட ஆலையை கேப் ஃபியர், வடக்கு கரோலினா, யுஎஸ்ஏவில் திறந்தார். இந்த ஆலை பொருளாதார அழுத்தங்கள் காரணமாக மூடப்பட்டது.[2][3]
வெப்ப பலபடியாக்கமகற்றல்
தொகுமற்றொரு மிகவும் துல்லியம் இல்லாத முறை வெப்ப பலபடியாக்கமகற்றல். இந்த செயல்முறை பெட்ரோலியமாக பாலிமர்களை மாற்றுதலாகும். இநத செயல்முறை மூலம அனல் இறுகுமங்கள் ஆகிய வல்கனைஸ் செய்த ரப்பர்,டயர்கள் போன்ற பொருட்கள், மற்றும் இறகுகளில் உள்ள பாலிமர்கள், மற்றும் பிற விவசாய கழிவுகளில் உள்ள பாலிமர்கள் ஆகியவற்றை மாற்ற இயலும். இயற்கை பெட்ரோலியம் போல இந்த செயல்முறை மூலம் உற்பத்தியான இரசாயனங்களைக் கொண்டு எரிபொருள்கள் மற்றும் பாலிமர்கள் தயாரிக்கப்படுகின்றன. வான்கோழி கழிவை உள்ளீடுப் பொருளாக பயன்படுத்தி கார்தேஜ் மிசோரி, அமெரிக்காவில் ஒரு முன்னோட்ட ஆலை உள்ளது. வளிமயமாக்கல் இதே போன்ற செயல்முறை, ஆனால் அது தொழில்நுட்ப ரீதியான மறுசுழற்சி இல்லை. ஏனெனில் பாலிமர்கள் இதன் விளைவாக கிட்ட வாய்ப்பு இல்லை.
வெப்ப அழுத்துதல்
தொகுஇந்த முறையைக் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனங்கள் குறிப்பாக ஆஸ்திரேலியா,அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பிரசித்தி பெற்று வருகிறது.[சான்று தேவை] வெப்ப அழுத்த செயல்முறையில் மென்மையான நெகிழிப் பைகள் முதல் கடின தொழில்துறை கழிவுகள் வரை வகைப்படுத்தப்படாத, சுத்தம் செய்யப்பட்ட அனைத்து நெகிழிகளும் டம்பிலர்களில் (பெரிய சுழலும் டிரம்ஸ்) (பெரிய துணி உலர்த்திகள் போன்றது) கலக்கிறது . இந்த முறையில் வடிவப்பொருந்தும் இல்லாத அனைத்து நெகிழிகளும் மறுசுழற்சி செய்யப்படும். எனினும், டிரம்ஸ் சுழல்வதற்கும் மற்றும் உருக்கிய குழாய்களை வெப்பமூட்டுவதற்கும் ஆற்றல் செலவுகள் உயர்கிறது.
பிற செயல்முறைகள்
தொகுமற்றொரு முறையில், நெகிழி பல வகையான ஸ்கிராப் எஃகு போன்றவற்றை மறுசுழற்சி செய்ய ஒரு கார்பன் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடுகள்
தொகுபிஇடி
தொகுஉபயோகிக்கப்பட்ட பாலியெத்திலின் டேரேப்தலேட் (பிஇடி) அல்லது (பிஇடிஇ) கொள்கலன்கள் வண்ணங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தபட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பிஇடி மறுசுழற்சி செய்பவர்கள் அவற்றை மேலும் வரிசைப்படுத்தி, கழுவி தூளாக்குகிறார்கள். இத்தகைய வரையறைகள் மற்றும் பிஇடி அல்லாத லேபிள்கள், மூடிகள் ஆகியவை இந்த செயல்முறையின் போது நீக்கப்படும். தூய்மையான துகள்கள் உலர்த்தப்படும். மேலும் இவை உருக்கி வடிகட்டி துகிளாக்கப்பட்டு உணவு தொடர்புக்கு-அங்கீகரிக்கப்பட்ட பிஇடி ஆக உருவாக்கப்படுகின்றன.
ரிபிஇடி பரவலாக பாலியஸ்டர் இழைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. நுகர்வோர்களிடம் இருந்து பெறப்படும் பிஇடி கழிவு நசுக்கப்பட்டு துகில்களாக வெட்டப்படுகின்றன. பின்பு பேல்களாக உருட்டி அழுத்தப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படுகிறது.
இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிஇடியின் ஒரு பயன்பாடு ஆடை தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் துணிகளை உருவாக்குவது.[4] இது சமீபத்தில் பிரபலமடைய தொடங்கி உள்ளது. பிஇடி செதில்களில் இருந்து துணிகள் மற்றும் நூல்கள் நூற்கப்படும். இதிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.[5] இது புதிய பிஇடியில் இருந்து பாலியஸ்டர் உருவாக்குவதை போலவே எளிதாக செய்யப்படுகிறது. மறுசுழற்சி பிஇடி நூல் அல்லது துணிகள் தனியாக அல்லது மற்ற இழைகளுடன் சேர்த்து பல்வேறு ஆடைகள் உருவாக்க பயன்படுத்தபடுகின்றன. இந்த துணிகள் ஜாக்கெட்டுகள், கோட், காலணிகள், பைகள், தொப்பிகள், மற்றும் வலுவான நீடித்து உழைக்கும் பொருட்களை உருவாக்க பயன்படும். எனினும் இந்த துணிகளின் தன்மை கடினமாக இருப்பதால் தோலுக்கு எரிச்சல் ஏற்படுத்தலாம். எனவே, தோலுக்கு மென்மையான ஆடை செய்ய பயன்படுத்தப்படுவதில்லை.[6] ஆனால் இன்றைய புதிய சூழல் உணர்வினால் உலகில் "பச்சை" பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது . இதன் விளைவாக மறுசுழற்சி பிஇடியில் செய்யப்பட்ட துணி பயன்பாட்டிற்கு புதிய சந்தை இருப்பதால் பல ஆடை நிறுவனங்கள் இதை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் புதியவழிமுறைகளை கண்டுபிடிக்க தொடங்கி உள்ளன. புதிய துணிகளை உருவாக்குவதில் புதிய வழிகளையும் துணிகளுக்கு புதிய பயன்பாடுகளையும் , பிற பொருட்களுடன் துணியை கலக்கும் புதிய வழிமுறைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த துறையில் புதிய உத்திகளை கொண்டு உருவாகப்பட்டு முன்னணியில் இருக்கும் துணிகளில் சில பில்லபாங்கின் இகோ சுப்ரீம் சூயூட்,[7], லிவிட்டியின் ரிப்-டைட் III, வெல்மேன்னின் இகோ ப்பி, (முன்னர் இகோ ஸ்பன் என அழைக்கப்பட்டது) மற்றும் ரிவேரின் ரிவோவன். சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் மறுசுழற்சி பிஇடி பயன்படுத்தி கிரேசி சட்டைகள் மற்றும் ப்லேபாக் போன்ற ஆடைகளை உருவாகுகிறார்கள்.[8], Crazy Shirts[9]
பிவிசி
தொகுஐரோப்பாவில், பிவிசி கழிவு மேலாண்மை வளர்ச்சி வினைல் 2010 என்ற நிறுவனத்தால் கண்காணிப்படுகிறது.[10] இது 2000இல் நிறுவப்பட்ட ஒரு சட்ட நிறுவனம். வினைல் 2010, ஒரு கண்காணிப்பு குழுவை நிருவி வருடாந்திர விமர்சனங்களை வெளியிடும்.மறுசுழற்சி செயல்பாடுகள் ஒன்று வினிலூப் டெக்சிலூப். இது கரைப்பான் அடிப்படையிலான இயந்திர மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.[11]
எச்டிபி
தொகுமிகவும் அடிக்கடி மறுசுழற்சி செய்யப்படும் நெகிழி எச்டிபி(உயர் அடர்த்தி பாலியெத்திலின்).[சான்று தேவை]இது மறுசுழற்சிக்குப் பின் நெகிழி மேசைகள், அட்டவணைகள், சாலையோர தடைகள், பெஞ்சுகள், லாரி சரக்கு லயனர்கள், குப்பை வாங்கிகளை, எழுதுபொருட்கள்(எ.கா. அளவு கோல்கள்) மற்றும் பிற நீடித்து உழைக்கும் நெகிழிகள் முதலியன தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்ரது.
பிஸ்
தொகுபெரும்பாலும் பாலியெஸ்டரின் தயாரிப்புகள் தற்போது போதிய ஊக்கத்தொகை இல்லாத காரணத்தினால் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதன் விளைவாக, உற்பத்தியாளர்கள் போதுமான ஸ்கிராப் பெற முடியாது. விரிவாக்கப்பட்ட பாலியெஸ்டரின் ஸ்கிராப் இபிஎஸ் காப்பு தாள்கள் மற்றும் பிற இபிஎஸ் பொருட்கள் போன்ற பொருட்களுடன் எளிதாக சேர்க்க முடியும். இது இபிஎஸ் செய்ய பயன்படுத்தாத போது, உடை தொஙவிடும் கொக்கிகள் , பூங்கா பெஞ்சுகள் , பூந்தொட்டிகள் , பொம்மைகள், அளவுகோல்கள், பட சட்டகங்கள் மற்றும் கட்டிட அச்சுகள் செய்யப் பயன்படுகின்றது.[12]
மறுசுழற்சி இபிஎஸ் பல உலோக வார்ப்பு செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகிறது. ரச்தர இபிஸ்சில் இருன்து தயரிக்கப்படுகின்ரது. சிமெண்டுடன் இணைந்து உறுதியான அடித்தளங்கள் மற்றும் சுவர்கள் செய்யும் ஒரு காப்பீட்டு பொருளகப் பயன்படுத்தப்படுகின்றது. 1993ல் இருந்து, அமெரிக்க உற்பத்தியாளர்கள் சுமார் 80% மறுசுழற்சி இபிஎஸ் கொண்ட கான்கிரீட் காப்பீட்டு வடிவங்களை தயாரித்துவருகின்றனர்.
மற்ற நெகிழிகுகள்
தொகுவெள்ளை நெகிழி பாலியெஸ்டரின் நுரைகள் பொருள்களை பத்திரபடுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் கப்பல்களில் மறுபயன்பாட்டிற்கு ஏற்கப்படுகின்றன.
இஸ்ரேலில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் விளைவாக நகராட்சி கழிவுகளில் இருந்து மீக்கப்பட்ட நெகிழிகள் வாளிகள் போன்ற பயனுள்ள வீட்டு பொருட்களாக மறுசுழற்சி செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.[13]
இதேபோல்,விவசாய கழிவுகளிலிருந்து கிடைக்கும் நெகிழிகள் வெற்றிகரமாக தொழில்துறை பயன்பாடுகளில் உபயோகிகப்படும் மிக பெரிய பொருட்களாக மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக, இந்த விவசாய நெகிழிகளை நிலத்தில் நிரப்பியும் அல்லது தளம் மீது எரித்தும் வந்தன.[14] Historically, these agricultural plastics have primarily been either landfilled or burned on-site in the fields of individual farms.[15]
மாசுபாட்டைத் தவிர்க்க, 220 டிகிரி செல்சியஸ் கீழ் துண்டாக்கப்பட்ட உருகிய மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியை பிடுமண்ண்டன் இணைத்து ஒரு சாலை பரப்பை முறைப்படுத்தும் உத்தியை இந்தியாவின் கேரளா நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த, டாக்டர் எஸ்.மது உருவாகியுள்ளார் என்று சிஎன்என் அறிவித்துள்ளது. இந்த சாலை மேற்பரப்பு மிகவும் நீடித்து இருப்பதுடன் பருவ மழையை எதிர்கொள்ளும். நெகிழி இந்தியாவில் கைகளால் பிரித்து எடுக்கபடுகிறது. தோராயமாக 500மீ நீளமும் ,8மீ அகலமும் கொண்ட இரண்டு வழிப்பாதை சாலையாக 60 கிலோ நெகிழி கொண்டு ஒரு சோதனை சாலை அமைக்கப்பட்டது. மெல்லிய ஏடுகளாக்கப்பட்ட சாலை கழிவுகளை புழுதி போன்ற சிறிய செதில்களாக்கி வெப்ப ஆலையில் சீராக பிசுபிசுப்பு பிடுமண்ணுடன் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பெங்களூர் மற்றும் இந்திய சாலை ஆராய்ச்சி மையம் ஆகிய இரண்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 'கே.கே. செயல்முறை' பயன்படுத்தி கட்டப்பட்ட சாலைகள் வெடிப்பு, குளிர், வெப்பம் ஆகியவற்றிற்கு எதிராக மூன்று பங்கு எதிர்ப்பு திறனும், நீண்ட நாள் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
மறுசுழற்சி விகிதங்கள்
தொகுமறுசுழற்சி செய்யப்படும் நெகிழிகுகளின் அளவு 1990 முதல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் விகிதம் செய்தித்தாள்(80%) மற்றும் நெளி இழையட்டை(70%)[16] போன்ற பிற பொருட்களை விட குறைவாக உள்ளது . 2008 அமெரிக்க நெகழி கழிவுகள் ஒட்டுமொத்தமாக 33.6 மில்லியன் டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; 2.2 மில்லியன் டன்(6.5%) மறுசுழற்சி செய்யப்பட்டது மற்றும் 2.6 மில்லியன் டன்(7.7%) ஆற்றலுக்காக எரிக்கப்பட்டது. 28.9 மில்லியன் டன், அல்லது 85.5%, நிராகரிக்கப்பட்ட, குப்பைகள் நிலத்தை நிரப்ப பயன்படுத்தபடுகிறது.[17]
பொருளாதார மற்றும் எரிசக்தி திறன்
தொகுநவம்பர் 2008இல், அமேரிக்காவில் பிஇடி ஆகியவற்றின் விலை டன்னுக்கு 370 டாலரில் இருந்து 20 டாலராக குறைந்தது.[18] மே 2009இல் நிலையான விலையை அடைந்தது.[19]
நெகிழி அடையாள குறியீடு
தொகுஐந்து வகையான நெகிழி பாலிமர்கள் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றது(கீழே அட்டவணையை பார்க்கவும்). அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பண்புகள் உடையவை. மேல் சொன்ன ஐவகை நெகிழி பாலிமர்களை நெகிழி அடையாள குறியீடு (பிஐசி) மூலம் அடையாளப்படுத்தலாம். அந்த குறியீடு பொதுவாக ஒரு எண் அல்லது ஒரு எழுத்தாக இருக்கும். உதாரணமாக, குறைந்த அடர்த்தி பாலித்தின் எண் "4" அல்லது "LDPE" என்ற எழுத்துக்கள் மூலம் அடையாளம்காணலாம். பிஐசி மூன்று-அம்புகுறிகளுக்கு நடுவே தோன்றும். இச்சின்னம் நெகிழி புதிய தயாரிப்புகளாக மறுசுழற்சி செய்ய முடியும் என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
நெகிழி அடையாள குறியீடு நெகிழி தொழில் சங்கத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. வெவ்வேறு பாலிமர் வகைகளை ஒரு சீரான முறையில் அடையாளம் காணவும் மற்றும் மறுசெயல்பாடு நிறுவனங்கள் பல்வேறு நெகிழிகளை மறு சுழற்சி செய்ய உதவுகிறது , நெகிழி பொருட்கள் உற்பத்தியாளர்கள் சில நாடுகளில் பகுதிகளில் PIC அடையாளங்கள் பயன்படுத்த வேண்டும் மற்றும் தேவைகள் உள்ளன தன்னார்வமாக PIC தங்கள் தயாரிப்புகளை குறிக்க முடியாது. [74] வாடிக்கையாளர்கள் பொதுவாக தளத்தில் அல்லது உணவு / ரசாயன பேக்கேஜிங் மற்றும் கொள்கலன்கள் உள்ளிட்ட நெகிழி பொருட்கள், பக்கத்தில் காணப்படும் குறியீடுகள் அடிப்படையில் நெகிழி வகைகளை அடையாளம் காணலாம். அது கழிவு இந்த வகை மிக சேகரிக்க மற்றும் மறுசுழற்சி செய்யும் நடைமுறை அல்ல என PIC, வழக்கமாக பேக்கேஜிங் திரைப்படங்களில் இல்லை.
நெகிழி அடையாள குறியீடு | நெகிழி பாலிமர் வகை | தன்மைகள் | பொது பொதியிடல் பயன்பாடுகள் | கண்ணாடி நிலைமாற்றம் மற்றும் உருகும் வெப்பநிலைகள் (°C) | யங்ச் மொடுலஸ் (GPa) |
---|---|---|---|---|---|
பாலியெத்திலின் டேரேப்தலேட்(பிஇடி,பிஇடிஇ) | தெளிவு, வலிமை, கடினத்தன்மை, வாயு மற்றும் ஈரப்பததிற்குத் தடை | குளிர்பானம்,தண்ணீர்,பச்சைக்காய்கறிக்கலவையை அலங்கரிப்பு பாட்டில்கள்,வேர்க்கடலை வெண்ணெய்,ஜாம் ஜாடிகளை | டிஎம் = 250;[20] டிஜி = 76[20] | 2-2.7[21] | |
உயர் அடர்த்தி பாலியெத்திலின் | விறைப்பு, வலிமை, கடினத்தன்மை, ஈரப்பததிற்கு எதிர்ப்பு, எரிவாயு ஊடுருவவிடும் தன்மை. | தண்ணீர் குழாய்கள், ஐந்து கேலன் வாளிகள், பால், பழச்சாறு மற்றும் தண்ணீர் பாட்டில்கள், மளிகை பைகள், சில ஷாம்பு பாட்டில்கள் | டிஎம் = 130;[22] டிஜி = -125[23] | 0.8[21] | |
பாலிவைனைல் குளோரைடு(பிவிசி) | எளிமையான கலப்புத்த்ன்மை , வலிமை, கடினத்தன்மை | உணவு அல்லாத பொருட்களை பேக்கேஜிங் செய்யப்பயன்படுஇன்றது. அழுத்தமான பிவிசியை நெகிழ்வு செய்ய தேவைப்படும் இளக்கிகள் நச்சுதன்மை உடையவை எனவே உணவு கடட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. கடுமையான குழாய்கள், வினைல் பதிவுகள், மின் கேபிள் காப்பு முதலியவைகுப் பயன்பாடுகின்றது. | டிஎம் = 240;[24] டிஜி = 85[24] | 2.4-4.1[25] | |
குறைந்த அடர்த்தி பாலியெத்திலின்(LDPE) | எளிமையானசெயலாக்கம், வலிமை, கடினத்தன்மை, நெகிழ்வுத்தன்மை, ஈரப்பதத் தடை. | உறைந்த உணவுக்கான பைகள். பிழியும் தன்மையுடைய தேன், கடுகு, பாட்டில்கள்; நெகிழ்வு கொள்கலன் மூடிகள், ஒட்டி கொள்ளும் உறைகள் . | டிஎம் = 120;[26] டிஜி = -125[27] | 0.17-0.28[25] | |
பாலிப்ரொப்பிலீன் (பிபி) | வலிமை,கடினத்தன்மை, வெப்பம், இரசாயனங்கள், கிரீஸ் மற்றும் எண்ணெய் எதிர்ப்பு, பல்துறை பயன்பாடுகள், ஈரப்பதத் தடை. | மீண்டும் பயன்படுத்தக்கூடிய சமையலறைபொருட்கள், தயிர் கொள்கலன்கள், ஓரே முறை பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் கொள்கலன்கள், கப் மற்றும் தட்டுக்கள். | டிஎம் = 173;[28] டிஜி = -10[28] | 1.5-2[21] | |
பாலியெஸ்டரின் (பிஸ்) | பல்துறை பயன்பாடு, தெளிவு, எளிதாக உருவாதல். | முட்டை அட்டைப்பெட்டிகள், வேர்கடலை மூட்டைகள், ஒரேமுறை உபயோகிக்கும் கப், தட்டுகள் மற்றும் கொள்கலன்கள்; | டிஎம் = 240 (ஐசோடாக்டிக் மற்றும்);[23] டிஜி = 100 (அடாக்டிக் மற்றும் ஐசோடாக்டிக்)[23] | 3-3.5[21] | |
மற்ற நெகிழிகள் (பெரும்பாலும் பாலிகார்பனேட் அல்லது ஏபிஎஸ்) | பாலிமர்கள் அல்லது பாலிமர்களின் கலவையை சார்ந்தது | மது பாட்டில்கள்; குழந்தை பால் பாட்டில்கள்.கருப்பு கண்ணாடிகள், லென்ஸ்கள், கண்ணாடிகள், வாகன ஹெட்லேம்ப்கள், கலகம் தடுப்பு கவசங்கள், கருவிகளின் உரைகள்[29] | பாலிகார்பனேட்: Tg = 145;[30] Tm = 225[31] | பாலிகார்பனேட்: 2.6;[21] ஏபிஎஸ், நெகிழிகுகள்: 2.3 [21] |
காண்க
தொகு- நெகிழி
- தண்ணீர் பாட்டில்களின் மறுசுழரற்சி
- நெகிழி 2020 சவால்
- நெகிழி தொழினுட்பம்
சான்றுகள்
தொகு- ↑ Hatti-Kaul, Rajni. "Industrial biotechnology for the production of bio-based chemicals – a cradle-to-grave perspective". Trends in Biotechnology. Lund University. பார்க்கப்பட்ட நாள் 26 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "DUPONT ENDS RECYCLING EXPERIMENT. | Chemicals > Chemicals Overview from". AllBusiness.com. Archived from the original on 2010-01-07. பார்க்கப்பட்ட நாள் 2010-08-21.
- ↑ "DUPONT ENDS TRIAL". Waste&Recycling News. பார்க்கப்பட்ட நாள் 2012-09-08.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 10:24 AM PT, November 13, 2009 (2009-11-13). "Trashy Chic: Recycled clothing from Playback - Brand X". Thisisbrandx.com. பார்க்கப்பட்ட நாள் 2010-08-21.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Reware's REWOVEN Technology Info: The Eco Narrative - Recycled PET". Rewarestore.com. பார்க்கப்பட்ட நாள் 2010-08-21.
- ↑ "Billabong ECO Supreme Suede Boardshorts: Sustainable is Good Eco Products". Sustainableisgood.com. 2008-04-09. Archived from the original on 2011-03-19. பார்க்கப்பட்ட நாள் 2010-08-21.
- ↑ "Rip-Tide "Eco Tech" Fabric Made From Hemp, Recycled PET". TreeHugger. Archived from the original on 2010-03-27. பார்க்கப்பட்ட நாள் 2010-08-21.
- ↑ "Garbage Fashion: T-Shirts Made From Recycled Bottles". http://www.businessweek.com. 2012-20-03.
{{cite web}}
: Check date values in:|date=
(help); External link in
(help)|publisher=
- ↑ 3 September 2009 (2009-09-03). "Eco Friendly Recycled Board Shorts". Gogreenstreet.com. Archived from the original on 2011-01-04. பார்க்கப்பட்ட நாள் 2010-08-21.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Home – Vinyl 2010 The European PVC industry commitment to Sustainability. Vinyl2010.org (2011-06-22). Retrieved on 2011-10-06.
- ↑ Texyloop : recyclage de textiles PVC பரணிடப்பட்டது 2012-07-17 at the வந்தவழி இயந்திரம். Texyloop.com. Retrieved on 2011-10-06.
- ↑ Polystyrene recycling.[தொடர்பிழந்த இணைப்பு] Polystyrene packaging council. Retrieved on 2009-03-06.
- ↑ Plastic trial procedure பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் Oaktech Environmental website. Retrieved 9.11.06.
- ↑ Plastic Composite Railroad Tie Facts பரணிடப்பட்டது 2008-05-14 at the வந்தவழி இயந்திரம் Plastic Composite Railroad Ties website. Retrieved 01.21.08.
- ↑ Recycling Used Agricultural Plastics James W. Garthe, Paula D. Kowal, PennState University, Agricultural and Biological Engineering
- ↑ The Self-Sufficiency Handbook: A Complete Guide to Greener Living by Alan Bridgewater pg. 62--Skyhorse Publishing Inc., 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-60239-163-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60239-163-5
- ↑ ""Energy and Economic Value of Non-recycled Plastics and Municipal Solid Wastes" at Journalist's Resource.org". http://journalistsresource.org/studies/environment/energy/energy-non-recycled-plastics-landfill/.
- ↑ Page, Candace, Waste district raises recycling fees, Burlington Free Press, November 12, 2008
- ↑ Financial Times, May 15, 2009 (article by Max Hogg)
- ↑ 20.0 20.1 [1] PolymerProcessing.com
- ↑ 21.0 21.1 21.2 21.3 21.4 21.5 [2] The Engineering Toolbox
- ↑ [3] பரணிடப்பட்டது 2015-03-10 at the வந்தவழி இயந்திரம் Dyna Lab Corp
- ↑ 23.0 23.1 23.2 [4] பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம் Sigma Aldrich
- ↑ 24.0 24.1 [5] PolymerProcessing.com
- ↑ 25.0 25.1 Modern Plastics Encyclopedia 1999, p B158 to B216.(Tensile Modulus)
- ↑ [6] பரணிடப்பட்டது 2011-09-21 at the வந்தவழி இயந்திரம் Dyna Lab Corp
- ↑ [7] பரணிடப்பட்டது 2010-01-11 at the வந்தவழி இயந்திரம் Wofford University
- ↑ 28.0 28.1 [8] PolymerProcessing.com
- ↑ "What is Polycarbonate (PC)?".
- ↑ "polycarbonate information and properties". Polymerprocessing.com. 2001-04-15. பார்க்கப்பட்ட நாள் 2012-10-27.
- ↑ [9] PolymerProcessing.com
வெளி இணைப்புகள்
தொகு- West, Larry. "Recyclable Plastic: Why are So Few Food Containers Made of Recyclable Plastic?". About.com. Archived from the original on 2010-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.
- Plastic Packaging Resin Codes பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம் data from the American Chemistry Council
- ISF's Plastics Recovery Manual
- American Chemistry Council Statement on Plastic Recycling[தொடர்பிழந்த இணைப்பு]
- Technology for plastic recycling
- Mike Biddle we can recycle plastic பரணிடப்பட்டது 2013-09-23 at the வந்தவழி இயந்திரம்
- Visit Earth911 to find locations to drop off plastics that are not recycled by your municipality