நெரிகா

கருநாடக சிற்றூர்

நெரிகா (Neriga) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகர மாவட்டம், ஆனேகல் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது வர்த்தூருக்கு அருகில் அமைந்துள்ளது. [1] [2]

நெரிகா
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
வட்டம்ஆனேக்கல்
பரப்பளவு
 • மொத்தம்400 km2 (200 sq mi)
ஏற்றம்
1,426 m (4,678 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,345
 • அடர்த்தி3.4/km2 (8.7/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

நிலவியல்

தொகு

இந்த ஊர் பெங்களூர் மையத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஒயிட்ஃபீல்டில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கிராமம் வர்தூரிலிருந்து சர்ஜாபுரம் செல்லும் வழியில் அல்லது மாரத்தள்ளி முதல் மாலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. நெல், கேழ்வரகு, பட்டு வளர்ப்பு, உரோசா, கனகாம்பரம், காய்கறிகள் போன்றவை ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகின்றன. இந்த கிராமம் நீலகிரி தோப்புகளுக்கும், பால் உற்பத்திக்கும் மிகவும் பிரபலமானது. கிராமத்தில் ஐந்து செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன.[சான்று தேவை]

கல்வி

தொகு

பன்னாட்டுப் பள்ளி பெங்களூர் (டிஐஎஸ்பி), இன்வென்ச்சர் அகாடமி மற்றும் கிரீன் வுட் உயர் பன்னாட்டுப் பள்ளிகள் இங்கு அமைந்துள்ளன. கிராமவாசிகளின் கல்வியறிவு 70% உள்ளது.

நெரிகே ஒரு பன்பாட்டு செழுமை சார்ந்த கிராமம். நாட்டுப்புற கலாச்சாரம் இன்னும் இங்கு உயிர்ப்புடன் உள்ளது. நாடக ரங்கா, டோலு குனித்தா மற்றும் பிற கலைகளுக்காக இளைஞர்கள் அணிகளை உருவாக்கியுள்ளனர்.

நிதி

தொகு

ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் தேனா வங்கி பணிகள் 01.01.2014 முதல் துவங்கின. கிளையின் பெயர் நெரிகா, ஐஎம்எஸ் குறியீடு BKDN0611611. நெரிகா கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 15,000 ரூபாய்.

தொலைத் தொடர்பு

தொகு

இந்த ஊரில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் குறியீடு NRA, ஊரின் தொலைபேசி குறியீடு +9180 ஆகும். பி.எஸ்.என்.எல் தரைவழி தொலைபேசி எண்கள் 27851 XXX இலிருந்து தொடங்குகின்றன. அஞ்சல் துணை அலுவலகம் / ஜிப் குறியீடு 562125 இங்கு கிடைக்கும் செல்பேசி வலைபின்னல்கள் : ஏர்டெல் 4G, ஓடாபோன், பி.எஸ்.என்.எல், டாடா குழும வலைபின்னல்கள்.

வரலாறு

தொகு

கிழக்கு நேரிகாவில் அவிமுக்தபுரா என்றும் அழைக்கப்படும் ஒரு பிரபலமான மற்றும் மிகவும் பழமையான அவிமுக்தேஸ்வர சிவன் கோயில் மற்றும் ஜீவசமாதி உள்ளது.

போசளர் காலத்து சிலைகள் ( நடுகல், நாகக்கல் ) இந்தக் கிராமத்தில் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகள் பழமையான கிராம தேவதை ( மாரம்மா) சிலையும் உள்ளது. மேலும் பசவேஸ்வர நந்தி கோயில், பூஜம்மா தேவி கோயில், தவலம்மா கோயில், 10 முனீசுவரர் கோயில்கள், நவகிரகம், அஸ்வத்தா கோயில்கள் போன்ற கோயில்கள் ஊரில் உள்ளன. இந்த ஊருக்கு அருகில் நீலடபுரம் (நெரிகாவின் தென்மேற்கே 0.7கிமீ தூரம்), கொத்தூர் (நெரிகாவின் கிழக்குப்பக்கம் 0.9கிமீ தூரம்), சிக்ககலாபுரம் (நெரிகாவின் தெற்கே 1.3கிமீ தூரம்) இந்த மூன்று அண்டை கிராமங்களும் 16ஆம் அல்லது 17ஆம் நூற்றாண்டுகளில் அழிந்துவிட்டன.

போக்குவரத்து

தொகு

பெங்களூர் கே. ஆர். மார்க்கெட், கெம்பேகவுடா பேருந்து நிலையம் (மெஜஸ்டிக்), சிவாஜிநகரம் ஆகிய பகுதிகளிலிருந்து இந்த சிற்றூருக்கு 323,D,E,F,J,L ஆகிய எண்களைக் கொண்ட பேருந்துகளை பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

இந்த ஊரிலிருந்து கார்மேலாரம் தொடருந்து நிலையம் 7 கி.மீ. தொலைவிலும், பெல்லந்தூர் சாலை தொடருந்து நிலையம் 7 கி.மீ. தொலைவிலும், ஒயிட்ஃபீல்டு தொடருந்து நிலையம் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெரிகா&oldid=3750212" இலிருந்து மீள்விக்கப்பட்டது