நேரலகிரி
நேரலகிரி (NERALAGIRI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
நேரலகிரி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,453 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635121 |
பெயராய்வு
தொகுநேரல என்ற தெலுங்குச் சொல்லுக்கு நாவல் பழம் என்பது பொருளாகும். நாவல் மரங்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[2]
அமைவிடம்
தொகுவேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு இந்த ஊரானது, வேப்பனப்பள்ளியில் இருந்து 10 கிலோமீட்டரும், இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 272 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 299 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1453 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 767, பெண்களின் எண்ணிக்கை 686 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 56.2% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 100.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Veppanapalli/Neralagiri