ந. கி. சிங்

இந்திய பொருளாதார வல்லுனர்

நந்த் கிஷோர் சிங் (Nand Kishore Singh) ஓர் இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமாவார். இவர் பீகாரிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கான நாடாளுமன்ற உறுப்பினராக (2008-2014) பணியாற்றிய பிறகு, மார்ச் 2014 [2] முதல் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினராக உள்ளார்.[3] [4] இவர் ஒரு மூத்த அதிகாரியாகவும், திட்டக்குழுவின் உறுப்பினராகவும், (நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது) ஒன்றிய செலவுகள் மற்றும் வருவாய் துறையில் செயலாளராகவும் பணிகளைக் கையாண்டார். இவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாச்பாயின் சிறப்பு அதிகாரியாக இருந்தார்.

நந்த் கிஷோர் சிங்
பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 நவம்பர் 2017[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சனவரி 1941 (1941-01-27) (அகவை 83)
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பிரேம் குமாரி சிங்
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிபுனித இசுடீவன் கல்லூரி, தில்லி
தில்லி பொருளியல் பள்ளி
வேலைபொருளாதார நிபுணர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி
கையெழுத்து
இணையத்தளம்http://web.nksingh.com/

27 நவம்பர் 2017 அன்று, மோடி அரசு இவரை இந்தியாவின் பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவராக நியமித்தது.

இவர் தற்போது இந்துஸ்தான் டைம்ஸ், ஐசிஆர்ஐஇஆர், ஐஎம்ஐ, நாளந்தா பல்கலைக்கழகம்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், இலண்டன் பொருளியல் பள்ளி, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆலோசனைக் குழு ஆகியவற்றுடன் இணைந்திருக்கிறார். இவர், குருகிராம் மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவராவார். இவர் தற்போது நிதி பொறுப்பு மற்றும் வரவுசெலவு மேலாண்மை சட்டம், 2003ன்படி, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட மறுஆய்வுக் குழுவின் தலைவராக உள்ளார்.[5] [6]

இந்திய அரசின் தோல்வியுற்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் என நம்பப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "N K Singh appointed chairman of 15th Finance Commission". Ties of India. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019.
  2. Deepak Nagpal (2014-03-23). "Elections 2014: MJ Akbar, NK Singh join BJP | Zee News". Zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2017-11-23.
  3. "ECI - Press Note" (PDF).
  4. Flying with BS: Nitish Kumar
  5. "Press Information Bureau". Pib.nic.in. 2012-09-13. பார்க்கப்பட்ட நாள் 2017-11-23.
  6. "Discipline yourself". The Indian Express. 2017-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-11-23.
  7. "Ex-RAW chief wasn't totally honest with us in his book: Here's what Dulat didn't tell us about IC-814-India News, Firstpost". 11 July 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._கி._சிங்&oldid=3266488" இலிருந்து மீள்விக்கப்பட்டது