தாயக் கட்டை

(பகடை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாயக் கட்டை அல்லது பகடைக்காய்,கவறுக்காய்,[1](dice), பிரஞ்சு; datumஇலத்தீன்; பகிர்தல் (அ) விளையாடுதல்.[2] இது ஒரு வகையான விளையாட்டுப் பொருளாகும்.[3] உருட்டி இடப்படுதல் மூலம் ஆடப்படுகிறது. கனசதுர வடிவிலான பகடைக்காயைச் சுற்றிலும் எண்கள் (புள்ளிகள்) பதிக்கப்பட்டிருக்கும். இது ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு புள்ளிகள் அமையப் பெற்றிருக்கும். பகடை தரையில் இடப்பட்டிருக்கும் போது, மேற்புறத்தில் உள்ள எண்கள் காய்களின் நகர்த்துதலுக்கு இலக்காகும். நிகழ்தகவுப்பரவல் மூலம் சீரற்ற தேர்வு முறையில் எண்கள் விழுகின்றன. இது மட்டுமல்லாது பகடைகள் கனசதுரமல்லாது பல வடிவங்களிலும் உள்ளன. பிரமிடு, அறுங்கணம், பன்முகம் போன்ற வடிவங்களுடன் ஆறு அல்லாது அதற்கும் அதிகப்படியான எண்ணிக்கையைச் சுட்ட பயன்படுகின்றன. சூதாட்டத்தில் நினைத்த எண் கொனற சில மாறுதல்களுடனும் பகடையில் ஏமாற்றுதலுக்காக எண்கள் இடப்படுகின்றன. பிளேமிய பாரம்பரிய பகடை விளையாட்டுகளில் பகடைத்தட்டு அருங்கோண வடிவிலும் துணியால் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். பகடைகளை உருட்டி இடுவதற்கு பகடைப்பெட்டிகளும், துணிப்பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலைதேய வடிவ,ஆசிய வடிவ மற்றும் சசினோ தாயக் கட்டை

வரலாறு

தொகு
 
ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட வரலாற்றுப் பழமைமிக்க தாயக் கட்டைகள்
 
Paschier Joostens, De Alea, 1642

தாயக்கட்டைகள் பதியப்பட்ட வரலாற்றுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தாய விளையாட்டு மிகப் பழைய விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் இல்லை. இதுவரை அறியப்பட்ட மிகப்பழைய தாயக்கட்டையானது 5,000 வருடங்கள் பழமையான பாக்கமன் விளையாட்டுத் தொகுதியில் ஓர் அங்கமாக தென்கிழக்கு ஈரானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமான எரிக்கப்பட்ட நகரில் கண்டெடுக்கப்பட்டது.[4] சிந்து சமவெளி நாகரிகத்தின் பண்டைய கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட ஏனைய அகழ்வாய்வுகள் தெற்கு ஆசிய தோற்றத்தைக் குறிக்கின்றன.[5] இருக்கு வேதம், அதர்வ வேதம், மற்றும் புத்த விளையாட்டுக்களின் பட்டியலில் தாயக் கட்டை ஒரு இந்திய விளையாட்டு எனக் குறிப்பிடப்படுகின்றது.[6]

இருப்பினும் இந்தியா வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு போன்றவை தமிழ் குறிப்பெயர்களாகும்.

  • மகாபாரதத்தில் பாண்டவ மன்னர்கள் நாட்டையும், பாஞ்சலியையும் பணையமாக்கிய சகுனியின் வஞ்சக விளையாட்டகவும்,
  • நளவெண்பாவில் நளன் கலியின் மூலம் புட்கரனால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
  • மேலும் அண்மைய ஆராய்ச்சிகளின் மூலம் மெக்ஸிகோவில் வாழ்ந்த மாயன்கள் இவ்விளையட்டை விளையாண்ட குகைச்சித்திரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

தாயம் கவறுக்காய் எனவும் சுட்டப்பட்டது, சான்றாக,

உலக மொழிகளில் பகடை

தொகு
மொழி பகடையின் பெயர்
எசுப்பானியம் dados(டடொஸ்)
அரபு لعبة النرد (லொஹபத் அர்பத்)
போர்த்துகீசியம் dados(டாடொஸ்)
சீனம் 骰子(ஸய்சி)
டச்சு dobbelen (டொப்லன்)
பிரஞ்சு de, cubes (க்யூப்)
செருமன் Würfel(வுவஃபெல்)
சப்பானியம் サイコロ (சைகொரொ)
இந்தி पासा(பசா)
கிரேக்கம் ζάρια(இஸாரியா)
இலத்தீன் dadi(டாடி)

மாறிலிகள்

தொகு

கனவுரு அல்லாதவை

தொகு

ஏழு மற்றும் எட்டு முகங்களைக் கொண்ட தாயக் கட்டைகள் 13 ஆம் நூற்றாண்டிலேயே பயன்பாட்டில் இருந்துள்ளன.[7][8] 1960 களில் கனவுரு அல்லாத தாயக் கட்டைகள் போர் விளையாட்டு வீரர்களிடையே பிரசித்தமடைந்தன.[9] பல தாயக் கட்டைகளை உருட்டி அதன் மதிப்புகளைக் கூட்டுதல் சாதாரண வழங்கல்களினும் மேலான தோராயத்தன்மைகளை உருவாக்கும்.[10]

நான்முக தாயக் கட்டை

தொகு

நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.

அறுமுக தாயக் கட்டை

தொகு

அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்.

புளியங்கொட்டைகள்

தொகு

ஆறு புளியம் பழ விதைகள் (அ) புளியங்கொட்டைகள் ஒரு புறமாகத் தேய்க்கப்பட்டு, குலுக்கி தரையில் இடப்படும், வெளிறிய பகுதிகள் எண் அடையாளங்களைக் குறிக்கின்றன.

பலகறை (அ) சோழி

தொகு

கடல்வாழ் மெல்லுடலிகளின் ஓடுகள், பலவறைகள் அல்லது சோழிகள் எனப்படுகின்றன. இவையும் தாயங்களாக குலுக்கி தரையில் இடப்படும். ஆறு முதல் பன்னிரு சோழிகள் பயன்படுத்தப்படுகின்றன. [11]

 
சோழிகள்

விளையாட்டு முறை

தொகு

பொதுவாக தாயக் கட்டைகள் மரத்திலோ அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோ செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும்.

  • சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும்.
  • சில பகுதிகளில் குறிப்பாக 7×7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர்.
  • நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச்சிரட்டையில்போட்டு உருட்டிவிடுவர்.
  • ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம்காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும்.
  • மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம்காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம்.

எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.

இவற்றையும் காண்க

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு

தாயம் - ரிதன்யாவின் தொகுப்புகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "பகடைக்காய்". பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Definition of dice in English பரணிடப்பட்டது 2014-03-20 at the வந்தவழி இயந்திரம், Oxford Dictionaries
  3. "die". AskOxford. Archived from the original on 2007-04-08. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  4. "presstv.ir". presstv.ir. Archived from the original on 2012-10-12. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  5. Possehl, Gregory. "Meluhha". In: J. Reade (ed.) The Indian Ocean in Antiquity. London: Kegan Paul Intl. 1996a, 133–208
  6. 2.3, 4.38, 6.118, 7.52, 7.109
  7. "games.rengeekcentral.com". games.rengeekcentral.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  8. "wwmat.mat.fc.ul.pt" (PDF). Archived from the original (PDF) on 2011-03-02. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  9. Jon Peterson (July 2012). Playing at the World: A History of Simulating Wars, People and Fantastic Adventures, from Chess to Role-Playing Games. Unreason Press. pp. 315–318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-615-64204-8.
  10. Michelle Paret and Eston Martz (2009). "Tumbling Dice & Birthdays: Understanding the Central Limit Theorem" (PDF). Minitab. Archived from the original (PDF) on 2013-11-01. பார்க்கப்பட்ட நாள் 2013-09-29.
  11. "Game" (PDF). பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயக்_கட்டை&oldid=3632445" இலிருந்து மீள்விக்கப்பட்டது