பகவத் சிங் (திரைப்படம்)

1998 திரைப்படம்

பகவத் சிங் (Bhagavath Singh) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். இதை சந்திரகுமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நெப்போலியன், சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் துணை வேடங்களில் தோன்றினர். இப்படத்திற்கான தேவா இசை அமைத்தார். படமானது 31 திசம்பர் 1998 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1][2]

பகவத் சிங்
இயக்கம்ஏ. சி. சந்திரகுமார்
தயாரிப்புகே. கலியமூர்த்தி
கதைஏ. சி. சந்திரகுமார்
இசைதேவா
நடிப்புநெப்போலியன்
சங்கவி (நடிகை)
ஒளிப்பதிவுஆர். இராஜரத்தினம்
படத்தொகுப்புபி. லெனின்,
வி. டி. விஜயன்
கலையகம்கவிக்குயில் சினி ஆர்ட்ஸ்
வெளியீடு31 திசம்பர் 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

திரைப்பட தயாரிப்பாளர் சந்திர குமாரின் இரண்டாவது தயாரிப்பாக இந்த படம் குறிக்கப்பட்டது, நெப்போலியன், சங்கவி, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வானார்கள். சங்கீதாவின் முதல் படமான பூஞ்சோலை நிறுத்தப்பட்டதால், இது சங்கீதாவின் அறிமுகப் படமாக ஆனது.[3][4]

இசை தொகு

படத்திற்கு தேவா இசையமைக்க, பாடல் வரிகளை காளிதாசன் எழுதினார்.[5]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 ஆத்துக்காரி ஒடம்பு சுவர்ணலதா காளிதாசன் 05:09
2 அவன் காங்கலை 04:59
3 கையிலே செல்லுலார் மனோ, சுரேகா கோத்தாரி 05:13
4 கோகிலா கோகிலா மனோ, கிருஷ்ணராஜ், சுஷ்மிதா 04:39
5 நாடு நம்ம நாடு தேவா 04:25

வெளியீடு தொகு

படம் நவம்பர் 1997 இல் வெளியிடத் தயாராக இருந்தது. ஆனால் அச்சமயத்தில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால் வெளியீடு தாமதமானது.[6] இந்த படம் டிசம்பர் 1998 இல் வெளியானது. இந்தோலிங்க்.காமின் விமர்சகர் இப்படத் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை வெளியிட்டார். இந்த படம் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயரைக் கெடுப்பதாகக் குறிப்பிட்டது. அதே நேரத்தில் படத்தின் முன்னணி நடிகர் "ஒரு காவல் துறை அதிகாரியின் உடலமைப்பைக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரது பேச்சும் தொனி அதற்கு ஒத்துவராமல் உள்ளது ".[7]

குறிப்புகள் தொகு

  1. "1998-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்- Lakshman Sruthi - 100% Manual Orchestra -". lakshmansruthi.com. Archived from the original on 18 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  2. Jeevan Technologies. "Welcome to ActorNapoleon.com - List of Films". actornapoleon.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  3. "A-Z (I)". indolink.com. Archived from the original on 31 March 2009. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  4. "Bhagavath Singh, Movie Director by A. C. Chandrakumar, Movie producer name, Music Director name Deva, Hero name Napolean, Heroine name Sanghavi - akkampakkam.com". akkampakkam.com. Archived from the original on 24 November 2015. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  5. https://itunes.apple.com/in/album/bhagavath-singh-original-motion-picture-soundtrack-ep/1330150188
  6. "Guess List". indolink.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  7. "Bhagath Singh (revised): Movie Review". indolink.com. Archived from the original on 1 June 2017. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவத்_சிங்_(திரைப்படம்)&oldid=3941504" இலிருந்து மீள்விக்கப்பட்டது