பங்சார் பார்க்

பங்சார் பகுதியில் உருவாக்கப்பட்ட முதல் குடியிருப்பு பகுதி

பங்சார் பார்க் அல்லது பங்சார் பூங்காமனை (மலாய்: Bangsar Park; ஆங்கிலம்: Bangsar Park) என்பது மலேசியா, கோலாலம்பூர், பங்சார் பகுதியில் உருவாக்கப்பட்ட முதல் குடியிருப்பு பகுதியாகும். இது கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகவும் விரும்பப்படும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாகும்.[1]

பங்சார் பார்க் பகுதியில் மழைக் காடுகள்

கோலாலம்பூர் நகர மையத்தில் இருந்து தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் பங்சார் பகுதியில் அமைந்துள்ளது. கோலாலம்பூர் மாநகராட்சியின் (Dewan Bandaraya Kuala Lumpur) கட்டுப்பாட்டில் உள்ளது. பங்சார் பார்க் குடியிருப்பு பகுதி, லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் (Lembah Pantai Constituency) ஒரு பகுதியாகவும் உள்ளது.[2]

பொது தொகு

இலங்கைத் தமிழர்கள் தொகு

 
பங்சார் சாலையில் பங்சார் எல்ஆர்டி தொடருந்து நிலையம்

மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் பங்சார் பார்க் ஒரு பிரபலமான குடியிருப்பு பகுதியாகும். இங்கு பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். பங்சார் பார்க்கின் தொடக்கக்காலக் குடியிருப்பாளர்கள் பிரிக்பீல்ட்ஸைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள். அவர்கள் பெரும்பாலும் அரசாங்க அதிகாரிகளாக இருந்தனர்.

பங்சார் பார்க்கில் பெரிய அளவில் எந்த வணிகப் பகுதியும் இல்லை. இது முற்றிலும் குடியிருப்பு பகுதி. பங்சார் பார்க் பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள கடை வீடுகளின் வரிசையில்; கடைகள், உணவகங்கள் மற்றும் சலவைக் கடைகள் உள்ளன.

குஜராத்திகள் தொகு

இருப்பினும், பங்சார் பூங்காவில் வசிப்பவர்கள் அதை ஒரு பிரச்சனையாகக் கண்டுகொள்வதில்லை. அவர்கள் பங்சார் பார்க் பகுதியின் அமைதியை விரும்புகின்றனர். இதன் விளைவாக பங்சார் பார்க் முற்றிலும் ஒரு குடியிருப்பு பகுதியாக விளங்குகிறது. தவிர, வணிகப் பகுதிகளான பங்சார் பாரு, லக்கி கார்டன் மற்றும் பங்சார் உத்தாமா ஆகியவை நடந்து செல்லும் தூரத்தில் உள்ளன.

பங்சார் பார்க்கில் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கின்றனர். சிலாங்கூர் & கூட்டரசு பிரதேச குஜராத்தி சங்கத்தின் கட்டிடம் (Gujarati Association WP & Selangor); மற்றும் ஜெயின் கோயில் (Jain Mandir) ஆகியவையும் பங்சார் லோரோங் மாரோப் சாலையில் (Lorong Maarof) அமைந்துள்ளன.

பங்சார் பார்க் அமைவு தொகு

  1. தாமான எஸ்ஏ - Taman SA
  2. புக்கிட் பண்டாரயா - Bukit Bandaraya
  3. பங்சார் பாரு - Bangsar Baru
  4. பங்சார் பார்க் - Bangsar Park
  5. புக்கிட் பங்சார் - Bukit Bangsar
  6. பங்சார் உத்தாமா - Bangsar Utama
  7. லக்கி கார்டன் - Lucky Garden
  8. பந்தாய் இல்ஸ் - Pantai Hills
  9. ஜாலான் பங்சார் - Off Jalan Bangsar
 

    பங்சார் வரலாறு தொகு

    பங்சார் எனும் சொல் பங்கே-கிரிசார் (Bunge-Grisar) ரப்பர் தோட்டம் அல்லது பங்சார் தோட்டம் (Bangsar Estate) எனும் சொல்லில் இருந்து உருவானது. எட்வார்ட் பங்கே (Edouard Bunge) எனும் பெல்ஜியம் நாட்டவர்; ஆல்பிரட் கிரிசார் (Alfred Grisar) எனும் பிரெஞ்சுக்காரர்; இவர்களின் பெயர்களில் இருந்துதான் பங்சார் எனும் சொல் (Bungsar) உருவாக்கப் பட்டது.

    1906-ஆம் ஆண்டில், மலாயா நாடு பிரித்தானியா நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அந்த வேளையில், 19 மே 1906-இல், லண்டன் மாநகரைத் தளமாகக் கொண்ட கோலாலம்பூர் ரப்பர் நிறுவனம் (Kuala Lumpur Rubber Company Limited (“KLRC”) மலாயாவில் உருவாக்கப்பட்டது.

    கோலாலம்பூர் ரப்பர் நிறுவனம் தொகு

    1900-ஆம் ஆண்டுகளில், ஐக்கிய அமெரிக்காவில் குதிரை வண்டிகளுக்குப் பதிலாக நவீன மகிழுந்துகள் அறிமுகமாயின. அதனால் காற்றடைத்த ரப்பர்ச் சக்கரங்களுக்கு (Pneumatic Rubber Tyres) கிராக்கி ஏற்பட்டது. ஆகவே ரப்பருக்கு ஏற்பட்ட உடனடித் தேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள கோலாலம்பூரைச் சுற்றிலும் ரப்பர் மரங்களை நடுவதற்கு திட்டமிடப் பட்டது.[3][4]

    பிரித்தானிய பவுண்டு £ 180,000 மூலதனத்துடன், கோலாலம்பூர் ரப்பர் நிறுவனம், 640 ஹெக்டேர் நிலத்தில், 5 தோட்டங்களைக் கையகப் படுத்தியது. அந்தத் தோட்டங்களில் ரப்பர் மற்றும் காபி பயிரிடப்பட்டன. கோலாலம்பூர் ரப்பர் நிறுவனத்தின் பங்குகள், 1907-இல் லண்டன் பங்குச் சந்தையில் (London Stock Exchange) பட்டியலிடப்பட்டன.[5]

    பங்கே கிரிசார் ரப்பர் தோட்டம் தொகு

    அந்த வகையில் கோலாலம்பூரில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ரப்பர் தோட்டம் தான் பங்கே கிரிசார் (Bunge Grisar) ரப்பர் தோட்டம். கோலாலம்பூர் ரப்பர் நிறுவனத்தின் முதல் குழு உறுப்பினர்களில் பெல்ஜியம் நாட்டவர் எட்வார்ட் பங்கே; மற்றும் பிரான்சு நாட்டவர் ஆல்பிரட் கிரிசார் ஆகியோர் அடங்குவர். இவர்கள் இருவரின் பெயர்களில் இருந்துதான் பங்சார் எனும் சொல் உருவானது.[6]

    பங்சார் தோட்டம் ஒரு குடியிருப்புப் பகுதியாக உருவாக்கப் படுவதற்கு முன்பு, அது பிரெஞ்சு தோட்ட நிறுவனமான சொக்பின் (Société Financière des Caoutchoucs (Socfin) குழுமத்திற்குச் சொந்தமானது. 1969-ஆம் ஆண்டில், பங்சார் தோட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் வீட்டுமனைப் பகுதி பங்சார் பார்க் (Bangsar Park) ஆகும்.

    அதன் பின்னர் சொக்பின் குழுமம், தனது நிலத்தைத் தனியார்களுக்கு விற்கத் தொடங்கியது. அதிலிருந்து பங்சார் விரைவான வளர்ச்சியைக் கண்டது.[7]

    மேலும் காண்க தொகு

    மேற்கோள்கள் தொகு

    1. support@webtempleasia.com, Web Temple Development Team. "Inspired by resort-living experiences, Bangsar Hill Park is designed with facilities that are built to impress. This distinguished lifestyle destination is situated on Lorong Maarof, placing future residents near the vibrancy, convenience, and lifestyle of Bangsar — the perfect spot for the urban spirit". Bangsar Hill Park (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 December 2022.
    2. "Bangsar Hill Park, a resort-living inspired condominium situated in Bangsar". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 December 2022.
    3. Kuala Lumpur Kepong Berhad, Annual Report, 2005.
    4. Van, Lea Pham (February 2020). "Unravelling the Socfin Group". Profundo.nl.
    5. "With a capital of £180,000, KLRC acquired 5 estates totalling 640 hectares of land planted mainly with rubber and coffee, located in Kuala Lumpur. KLRC shares were listed on the London Stock Exchange in 1907". NUMISTORIA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 December 2022.
    6. French Memories in Malaysia, an exhibition at National Museum (Malaysia)]], Department of Museums and Antiquities, the French Embassy and the Ecole Francaise d'Extreme – Orient, September 2002.
    7. "History & Origins". Bangsar Community Portal. 2 December 2008. Archived from the original on 3 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 1 June 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

    வெளி இணைப்புகள் தொகு

    "https://ta.wikipedia.org/w/index.php?title=பங்சார்_பார்க்&oldid=3633165" இலிருந்து மீள்விக்கப்பட்டது