பசிஸ்தா நரேன் சிங்
பசிஸ்தா நரேன் சிங் (Bashistha Narain Singh) என்பவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பீகார் மாநிலத்தின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின்மாநிலத் தலைவராக பணியாற்றினார். ஜனவரி 2021 இல், இவருக்குப் பிறகு உமேஷ் குஷ்வாஹா ஐக்கிய ஜனதா தளத்தின் பீகார் மாநிலத் தலைவர் பதவிக்கு வந்தார். [1] முன்னதாக, இவர் சமதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். (உதய் மண்டல் தற்போதைய தேசியத் தலைவர்) [2] முன்னதாக, இவர் 1995 முதல் 1998 வரை பீகார் சமதா கட்சியின் தலைவராக இருந்தார்.
பசிஸ்தா நரேன் சிங் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2012 | |
தொகுதி | பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 அக்டோபர் 1947 ஹாஜிப்பூர், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா கட்சி ஜனதா தளம் சமதா கட்சி |
துணைவர் | ஏவந்தி சிங் |
பிள்ளைகள் | ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் |
வாழிடம்(s) | லால்கஞ்ச், கார்வி, பி. ஓ. தும்்ராவ் டெக்ஸ்டைல்ஸ், பி.எஸ். தும்ராவ், பக்சர் மாவட்டம், பீகார் |
முன்னாள் கல்லூரி | முதுகலை வரலாறு பட்னா பல்கலைக்கழகம் |
தொழில் | விவசாயி |
அரசியல் வாழ்க்கை
தொகுசிங் பீகார் இயக்கத்தின் போது பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார் . இந்திய நெருக்கடி நிலையின் போது, பத்தொன்பது மாதங்கள் சிறையில் இருந்தார். 1977 ஆம் ஆண்டில், ஜேபி இயக்கத்துடன் தொடர்புடைய புதிதாக அமைக்கப்பட்ட பீகார் சட்டப் பேரவையின் உறுப்பினர்களுக்கு பாட்னாவின் சஹீத் ஸ்மாரக்கில் இவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 1980 முதல் 1985 வரை பீகார் ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். 1989 முதல் 1990 வரை பீகார் ஜனதா தளத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த இவர், 1990 முதல் 1994 வரை ஜனதா தளத்தின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராக இருந்தார். 1994-ஆம் ஆண்டில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட சமதா கட்சியில் சேர்ந்தார். 1995 முதல் 1998 வரை பீகார் சமதா கட்சியின் தலைவராக இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Umesh Kushwaha becomes Bihar JD(U) chief succeeds Vashishtha Narayan Singh". பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
- ↑ "Flaming torch a free symbol, EC can allot it to any other party: Delhi HC dismisses Samata Party's appeal". பார்க்கப்பட்ட நாள் 2022-11-26.