பட்டினப்பிரவேசம் (ஆதீனம்)

ஆதீனகர்த்தர் பல்லக்கில் நகர்வலம் வரும் நிகழ்வு

பட்டினப்பிரவேசம் என்பது சிறப்பு நாட்களின் போது தருமை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசிமடம் போன்ற சைவ சமய மடங்களின் தலைவர்களான ஆதீனகர்த்தர்கள் பல்லக்கில் ஏறி நகர்வலம் வருவதைக் குறிக்கும்.[1] இந்த நிகழ்வு பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி அவரது பக்தர்கள் சுமந்து, மடத்தைச் சுற்றி வலம் வருவர். பல்லக்கை தருமபுரம் ஆதீன திருமடத்தின் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுமந்து செல்வர். அவர்களில் 4 பேர்கோடி நாட்டாமை என அழைக்கப்படுகின்றவர்களின் மேற்பார்வையில் பல்லக்கு தூக்குகின்றனர்.[2] பல்லக்கில் வரும் ஆதினகர்த்தர் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் காட்சி அளிப்பதுடன், ஆசி வழங்குவார். நகர்வலம் வரும்போது ஆதீனத்தின் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்களும், பக்தர்களும் ஆதினத்திற்கு காணிக்கை வழங்குவார்கள்.

தடையுத்தரவு

தொகு

தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் மே மாதம் 22 ஆம் நாளன்று மயிலாடுதுறை நகரத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தது. இந்நிலையில் திராவிடர் கழகத் தொண்டர்கள் மனிதனை பல்லாக்கு மனிதர்கள் சுமப்பது காட்டுமிராண்டித்தனது, எனவே பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தடைவிதிக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

திராவிடர் கழகத்தவர் புகாரின் போரில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாச்சியர் தருமை ஆதினத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு ஏப்ரல் 27 ஆம் நாளன்று தடையுத்தரவு பிறப்பித்தார்.[3] பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குருவுக்கு பக்தர்கள் அளிக்கும் மரியாதையாகும். எனவே அதை மாற்றக் கூடாது என்று கூறி கோட்டாச்சியரின் உத்தரவை எதிர்த்து, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

தடைக்கு எதிர்ப்புகள்

தொகு

பல்லாண்டுகளாக நடந்து வரும் சைவ சமயம் சார்ந்த தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்தது குறித்து இந்து சமயத் தலைவர்கள் மற்றும் மக்களிடையே அரசுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.[4]மதுரை ஆதீனத்தின் குருமகா சன்னிதானம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருவதை தடை செய்யக் கூடாது என்றும், உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்தை நடத்துவோம் எனச்சூளுரைத்துள்ளார்.[5][6]

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மே 4 அன்று இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் அவர் பேசுகையில், “தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற வேண்டும்” என்று பக்தர்கள் விரும்புகின்றனர். இந்நிகழ்ச்சியில் மரியாதை குறைவு என எதுவும் கிடையாது என்று கூறினார்.பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், பட்டின பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.

தடை நீக்கம்

தொகு

கடந்த இரண்டு வாரங்களாக சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சைவ மடங்களை சேர்ந்த அடியார்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. பட்டினப்பிரவேசத்துக்கு தடை விதித்திருந்த கோடாட்டசியரே இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி அளித்து 8 மே 2022 அன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.[7]

பட்டினப்பிரவேச நிகழ்ச்சி 2022

தொகு

500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் சைவ ஆதின திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதி குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா ஞானபுரீஸ்வரர் கோயிலில் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் நாளான 22 மே 2022 அன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் துாக்கிச் சென்று ஆதின திருமடத்தின் நான்கு வீதிகளில் வலம் வந்தனர்.[8][9]

பின்னணி

தொகு

ஏப்ரல் மாதம் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் ஒரு விழாவிற்கு தருமை ஆதீனத்திற்கு வருகை தந்த போது, ஆளுநருக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.[10] இதுவே தருமை ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தடைசெய்வதற்கு காரணம் எனச்சுட்டிகாட்டப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. பட்டினப்பிரவேசம் என்றால் என்ன?
  2. "பல்லக்கு சுமக்க அனுமதி அளிக்க வேண்டும்: கோட்டாட்சியரிடம் பல்லக்கு சுமப்பவர்கள் கோரிக்கை மனு". Hindu Tamil Thisai. Retrieved 2022-05-08.
  3. Ban on 'Pattina Pravesam' of Adheenam kicks up row
  4. தருமபுர ஆதீனத்திற்கு பல்லாக்கு தூக்க தடை...பாரம்பரியத்தில் தலையிட்ட அரசுக்கு ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு
  5. தருமபுர ஆதீனத்துக்கு பல்லக்குத் தூக்க தடை: "உயிரே போனாலும் பல்லக்கு தூக்குவோம்" - மதுரை ஆதீனம்
  6. ஆதீனம் பட்டினப் பிரவேசம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. பட்டினப்பிரவேசம்: தடை ஆணையை விலக்கிய கோட்டாட்சியர்
  8. தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் கோலாகலம்!
  9. Pattina pravesam passes off amid tight security
  10. தருமபுர ஆதீனம் வந்த ஆளுநர் ரவிக்கு கறுப்புக்கொடி