பட்லூர் (Patlur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு கிராமமாகும். இது சுமார் 8100 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பட்லூரின் முக்கிய தொழில் விவசாயமாகும்.

பட்லூர்
பாடலூர்
கிராமப் பஞ்சாயத்து
பட்லூர் is located in தமிழ் நாடு
பட்லூர்
பட்லூர்
Location in Tamil Nadu, India
பட்லூர் is located in இந்தியா
பட்லூர்
பட்லூர்
பட்லூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°36′N 77°36′E / 11.6°N 77.6°E / 11.6; 77.6
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்கள்தொகை
 • மொத்தம்8,100
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
638314
வாகனப் பதிவுதநா33, தநா36
அருகிலுள்ள நகரம்அந்தியூர்
பவானி
பாலின விகிதம்1000(ஆ):936(பெ) /
கல்வியறிவு72%
மக்களவைத் தொகுதிதிருப்பூர்
சட்டப் பேரவைத் தொகுதிபவானி
காலநிலைவெப்பமண்டலம் (கோப்பன்)
இணையதளம்patlur.blogspot.com
கிராமக் குறியீடு 16, தொகுதி குறியீடு 12 (அம்மாபேட்டை), மாவட்ட குறியீடு 10.

அமைவிடம்

தொகு

இந்த ஊர் தென்னிந்தியாவின் மத்திய பகுதியில் பவானி சாலை, அந்தியூர் சாலை, மேட்டூர் சாலை மற்றும் வெள்ளிதிருப்பூர் சாலை ஆகிய நான்கு சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. அருகிலுள்ள நெடுஞ்சாலை மையம் அந்தியூர் நகரம், மாநில நெடுஞ்சாலை 175 இல் மேற்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது. பட்லூர் தமிழக பீடபூமியில் அமைந்துள்ளது. மேற்கில் நீலகிரி மலைத்தொடர் உயர்ந்துள்ளது.


நீர் ஆதாரங்கள்

தொகு
 
ஈரோடு நகரத்தில் பாயும் காவிரி ஆறு

பட்லூரின் முக்கிய நீர் ஆதாரம் காவிரி ஆறாகும். சுமார் 8 கி.மீ கிழக்கே பாய்கிறது. இது பட்லூர் ஏரி மற்றும் தடுப்பணை ஆகியவற்றையும் கூடுதலாககொண்டுள்ளது. [1]

ஆளுகை

தொகு

2006 வரை, பட்லூரை அந்தியூர் தொகுதியின் சபை நிர்வகித்தது. 2011 முதல், இது பவானி சட்டமன்றத் தொகுதியின் (104) கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. [2] நாடாளுமன்றத் தொகுதி எண் 18, திருப்பூர். இந்த ஊரின் ஏராளமான வாக்குப்பதிவு பகுதிகள் உள்ளன, அவை 1 முதல் 14 வரை உள்ளன. அவற்றில் பின்வருவன அடங்கும்: கெம்மியம்பட்டி, பூசாரியூர், மக்கல்லூர், காளிப்பட்டி, கரட்டூர், நான்கு சாலை, காட்டு கோட்டைகல், மரவண்குட்டை, கட்டுகோட்டைகல், சொக்கநாதமலையூர், பொய்யான்குட்டை, பொம்மன்பட்டி புதுவலவு, முத்துக்கவுண்டனூர், மோசுகவுண்டனூர், வெங்காக்கல்லூர் (பூசாரியூரின் ஒரு பகுதி)

தொழில்

தொகு
 
நிலக்கடலை

பட்லூர் குடியிருப்பாளர்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொழில்களில் பணியாற்றுகின்றனர். குறிப்பாக வேர்க்கடலை ஆலைகளில் எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிலை செய்கிறார்கள்.

கரியகாளி அம்மன் திருவிழா

தொகு

வருடாந்திர கரியகாளி அம்மன் திருவிழா, தமிழ் மாதமான ஆனி மாதத்தில் பதினைந்து நாட்கள் கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ள கோவிலில் கொண்டாடப்படுகிறது. இது ஒரு புதன்கிழமை பூச்சாட்டுடன் பூ மிதித்தலுடன் தொடங்குகிறது. அபிசேகமும், பூசையும் செய்யப்படுகின்றன. திருவிழா மஞ்சள் நீராட்டு, மஞ்சள் அலங்கார விழாவுடன் முடிவடைகிறது. இந்த விழா தொழில்முறைக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சடங்கு நடவடிக்கைகளுக்கான காட்சிப் பொருளாகும்.

முத்துமாரி அம்மன் திருவிழா

தொகு
 
முத்துமாரி அம்மன்

பட்லூரின் மேற்கு பகுதியில் உள்ள நாதகாட்டு தோட்டத்தில் உள்ள கோவிலில் ஆண்டு முத்துமாரி அம்மன் திருவிழா பதினைந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான பங்குனியின் முதல் புதன்கிழமை பூச்சாட்டுடன் தொடங்குகிறது . பின்னர், புனித நீர் காவிரி ஆற்றிலிருந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு முத்துமாரி தெய்வத்தின் மீது ஊற்றப்படுகிறது. இது அபிசேகம், பூசை மற்றும் பொங்கல் ஆகியவற்றைக் கொண்டு தெய்வத்திற்கு வழங்கப்படுவதோடு திருவிழா முடிவடைகிறது. மாவிளக்கு வழிபாட்டுடன், மக்கள் பூக்களை ஒரு தட்டில் கொண்டு செல்கின்றனர். மாலையில், பாரம்பரிய நடனங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கருமலை ஆண்டவர் பங்குனி உத்திரம் திருவிழா

தொகு

வருடாந்திர கருமலை ஆண்டவர் பங்குனி உத்தரத் திருவிழா இரண்டு நாட்கள் இங்கு நடைபெறுகிறது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கடவுளான இரக்கியன்னசாமி முருகனுக்கு (கருமலை ஆண்டவர் என்றும் அழைக்கப்படுகிறது) வழங்கப்படுகிறது. அபிசேகமும், பூசையும் நடைபெறுகின்றன, அன்னதானம்பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது நாளில், மஞ்சள் நீராட்டும், ஊர்வலமும், வானவேடிக்கையும் நடைபெறுகிறது.

செம்முனீசுவரர் திருவிழா

தொகு

செம்முனீசுவரர் (செம்முனிச்சாமி என்றும் அழைக்கப்படுகிறது) கோயில் பட்லூரிலிருந்து 5 கி. மி. தூரத்திலுள்ள பூசாரியூரில் அமைந்துள்ளது. இதன் திருவிழா என்பது முப்பது நாள் கால வருடாந்திர நிகழ்வாகும். இது தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்குகிறது.

பிரதோச வழிபாடு

தொகு

சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாகீசுவரர், ஆலயம், வெள்ளி திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இங்கு பிரதோச வழிபாடு நோன்புடன் கொண்டாடப்படுகிறது. மேலும், சிவனின் வாகனமான நந்திக்கு சிறப்பு பூசை செய்யப்படுகிறது. [3]

அணைகள்

தொகு

மேட்டூர் அணை (33) கி.மீ தூரத்தில்), வரட்டுப்பள்ளம் அணை (16 கி.மீ தொலைவில்), பவானிசாகர் அணை (62) கி.மீ தொலைவில்) ஆகிய அணைகள் இந்த ஊரைச் சுற்றி அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்லூர்&oldid=3050550" இலிருந்து மீள்விக்கப்பட்டது