பத்மினி தேவி
பத்மினி தேவி[1] (Padmini Devi-பிறப்பு இளவரசி பத்மினி தேவி சிர்மூர் ; 21 செப்டம்பர் 1943) ஜெய்ப்பூரின் இராஜ மாதா ஆவார்.
பத்மினி தேவி | |
---|---|
செய்ப்பூர் மகாராணி | |
மகராணி-ஜெய்பூர் இராச்சியம் | |
முன்னையவர் | காயத்திரி தேவி |
பிறப்பு | 29 செப்டம்பர் 1943 நகான், சிர்மூர், இந்தியா |
துணைவர் | பாவாணி சிங் |
குழந்தைகளின் பெயர்கள் | தியா குமாரி |
தந்தை | இராஜேந்திரா பிரகாசு |
தாய் | இந்திரா தேவி |
மதம் | இந்து சமயம் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇனரீதியாக சிர்மூர் அரச குடும்பத்தில் பிறந்தார் பத்மினி தேவி. இவரது தந்தை, தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிர்மூரில் மகாராஜாவான இராசெந்திர பிரகாசு. இவர் 1933-1964 வரை சிர்மூர் ஆட்சியாளராக இருந்தார்.[2] பத்மினி தேவியின் தாயார் இந்திரா தேவி. இந்திராதேவி பாலிதானாவின் மகாராஜா தாகூர் பகதுர்சிங் மான்சின்ஜியின் மகள்[2] பத்மினி தேவி முசோரியில் கன்னிமாட பள்ளியில் கல்வியைப் பெற்றார். பின்னர் இலண்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் பள்ளி மேற்படிப்பினை முடித்தார்.[2][3]
இவர் மகாராஜா சவாய் மான் சிங் II அருங்காட்சியகத்தின் தலைவராக உள்ளார்.[4] இராசத்தானில் உள்ள ஜெய்ப்பூர் மக்களின் சமூக நடவடிக்கைகள் மற்றும் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதிருமணம்
தொகுபத்மினி தேவி, ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாம் சவாய் மன்சிங்கின் மூத்த மகன் பவானி சிங்கை மணந்தார். இத்திருமணம் 10 மார்ச் 1966 அன்று தில்லியில் நடைபெற்றது.[3]
குழந்தை
தொகுபத்மினி தேவியின் ஒரே மகள் தியா குமாரி ஆவார்.[5][6] இவர் வித்யாதர் நகர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இவர் இராசத்தானின் 6வது துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
பேரப்பிள்ளைகள்
பத்மினி தேவியின் மகள், இளவரசி தியா குமாரி, சாமானியரான மகாராஜா நரேந்திர சிங் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெய்ப்பூரின் தற்போதைய பெயரிடப்பட்ட மன்னரும், நிறுவப்பட்ட போலோ வீரருமான ஜெய்ப்பூரின் மகாராஜா சவாய் பத்மநாப் சிங், பெண்ணியவாதியான ஜெய்ப்பூரின் இளவரசி கௌரவி குமாரி மற்றும் பி. டி. கே. எப்/ பொதுச் செயலாளரும் மற்றும் சிர்மவுரின் மகாராஜா லக்ஷ்ராஜ் பிரகாஷ் சிங் ஆவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Inside Maharani Padmini Devi of Jaipur's 75th birthday celebrations". Vogue India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.
- ↑ 2.0 2.1 2.2 The Princely and Noble Families of the Former Indian Empire: Himachal Pradesh.
- ↑ 3.0 3.1 "Durga Diya Enterprises - Padmani Devi". 2009-01-23. Archived from the original on 23 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.
- ↑ 4.0 4.1 "The Royal Family : Present – Royal Jaipur- Explore the Royal Landmarks in Jaipur". royaljaipur.in. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.
- ↑ "Our Leadership | Princess Diya Kumari Foundation". princessdiyakumarifoundation.org. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.
- ↑ "Royal family member Diya Kumari wins Rajsamand seat by over 5 lakh votes". Zee News (in ஆங்கிலம்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.