பனசங்கரி கோயில், அமர்கோல்

பனசங்கரி கோயில் ( Banashankari Temple ) [1] தேவி பனசங்கரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்காலக் கோயிலாகும். இக்கோயில் திராவிட பாணிக்குரிய கலை அம்சங்களுடன் திகழ்கிறது.

பனசங்கரி கோயில் அமர்கோல், கர்நாடகா

அமைவிடம்

தொகு

அமர்கோல், கர்நாடகாவின் தார்வாடு-ஹூப்ளி இடையில் ஹூப்ளி நகர மையத்திலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் நவநகரை ஒட்டி அமைந்துள்ளது. அமர்கோலில் உள்ள இக்கோயிலிருந்து [1][2]உன்கால் ஏரியும் சந்திரமௌலீசுவரர் கோயிலும் அருகில் உள்ளது.

கோயில் அமைப்பு

தொகு
 
பனசங்கரி கோயில் அமர்கோல், கர்நாடகா
 
பனசங்கரி கோயில் அமர்கோல், கர்நாடகா

கோயிலுக்கு அருகில் புகழ்பெற்ற சிற்பி ஜெகனாச்சாரியால் கட்டப்பட்ட சங்கரலிங்கர் கோயில் உள்ளது.

13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கட்டப்பட்ட இக்கோயில் இந்துக் கோயில் கட்டிடக்கலை பாணியிலுள்ளது. செவ்வக வைர வடிவத்தைக் கொண்ட ஒரு சதுர அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அருகிலுள்ள ஹங்கல் பிள்ளையார் கோயில், இட்டகி மகாதேவர் கோயில் போன்றவையும் இதே போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. கோயிலில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மூலம் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. [3]

மேலும் காண்க

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "TEMPLES BEING MANAGED BY THE UNION GOVERNMENT". பார்க்கப்பட்ட நாள் 2008-09-15.
  2. "ABOUT TWIN CITY, Amargol". Archived from the original on 4 July 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-15.
  3. "Alphabetical List of Monuments - Karnataka - Dharwad, Dharwad Circle, Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2008-09-15.