பனிஹால் தொடருந்து நிலையம்

பனிஹால் தொடருந்து நிலையம் (Banihal railway station) (நிலையக் குறியீடு: BAHL), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யின் இராம்பன் மாவட்டத்திலுள்ள பனிஹால் எனுமிடத்தில், பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 1702 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையம் 26 சூன் 2013 அன்று பயணியர் சேவைக்குத் திறக்கப்பட்டது. இது ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இந்நிலையத்திலிருந்து செல்லும் தொடருந்துகள், பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்த பானிகால் கணவாய் வழியாக 17.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரத்தை 12 நிமிடங்களில் கடக்கிறது.[1]

தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பனிஹால், இராம்பன் மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
இந்தியா
ஆள்கூறுகள்33°27′03″N 75°11′21″E / 33.4507°N 75.1892°E / 33.4507; 75.1892
ஏற்றம்1702 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுBAHL
மண்டலம்(கள்) வடக்கு மண்டலம்
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது26 சூன் 2013
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
Map
பனிஹால் தொடருந்து நிலையத்தின் வான்பரப்புக் காட்சி

தொடருந்து சேவைகள்

தொகு

3 நடைமேடைகள் கொண்ட பனிஹால் தொடருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் 10 பயணியர் வண்டிகள் இயக்கப்படுகிறது.[2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Hindu Newspaper". The Hindu. Archived from the original on 19 August 2014. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.
  2. Departures from BAHL/Banihal

வெளி இணைப்புகள்

தொகு