பனையேறிக் கெண்டை
பனையேறிக் கெண்டை[3], பன்னீர் கெண்டை , சன்னக் கெண்டை ( Anabas testudineus ) என்பது ஒரு நன்னீர் மீன் இனமாகும். இது அனபாண்டிடே ( ஏறும் கௌரமிஸ் ) குடும்பத்தைச் சேர்ந்தது. இது தொலை கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. இது மேற்கில் பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம் இலங்கை வரையும், கிழக்கில் தெற்கு சீனா, யப்பான், தென்கிழக்காசியா வரையிலும், தெற்கில் வாலசுக் கோடு வரை நன்னீர் பகுதிகளில் வாழ்கிறது. இதைக் குறிப்பிடப் பயன்படுத்தபடும் அனபாஸ் டெஸ்டுடினியஸ் என்ற சொல் ஒரு சிக்கலான சொல்லாகும். இது உண்மையில் பல்வேறு இனங்களைக் குறிப்பிடும் இருசொல் பெயரீடாக பயன்படுத்தப்படுகிறது. மேலதிக ஆய்வின் மூலம், இந்த மீன்களை தனித்தனி இனங்களாகப் பிரித்து புதிய பெயர்களைக் கொடுக்க வாய்ப்புள்ளது. [1] இந்த மீன் அதன் கில் தட்டுகளைப் பயன்படுத்தி மரங்களில் ஏறும் திறன் கொண்டது என்ற கூறப்படுகிறது.
பனையேறிக் கெண்டை Climbing perch | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Anabas |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AnabasA. testudineus
|
இருசொற் பெயரீடு | |
Anabas testudineus (Bloch, 1792) | |
வேறு பெயர்கள் [2] | |
|
பனையேறி கெண்டை மீனாது உவர் நீரிலும் வழத்தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியது. இந்த மீன் மொத்தம் 25 செமீ (9.8 அங்குலம்) வரை வளரக்கூடியது. இதன் பூர்வீக எல்லைகக்கு வெளியே, இது ஒரு ஆக்கிரமிப்பு இனமாக உள்ளது. இது 6-10 மணிநேரம் தண்ணீரின்றி வாழக்கூடியது. [4] இது தன் முன் துடுப்புகளைக் கொண்டு தரையில் ஊர்ந்தும் செல்லக்கூடியது. இந்த மீன் மீன்பிடி படகுகளில் இருந்து நழுவி வெளியேறுவதன் மூலம் புதிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு கிழக்கு இந்தோனேசியா, பப்புவா நியூ கினிவில் வாலஸ் கோட்டிற்கு கிழக்கே உள்ள சில தீவுகளிலும் இந்த மீன் பரவியுள்ளது. மேலும் வடக்கு ஆஸ்திரேலியாவை நோக்கி முன்னேறி வருவதாகவும் நம்பப்படுகிறது. 2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சைபாய் தீவு மற்றும் குயின்ஸ்லாந்தின் வடக்கே டொரெஸ் நீரிணையில் உள்ள மற்றொரு சிறிய ஆஸ்திரேலிய தீவில், பப்புவா நியூ கினியாவிற்கு தெற்கே மூன்று முதல் நான்கு மைல் தொலைவில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டது. [5]
உணவாக
தொகுதெற்கு ஆசியா, தென்கிழக்காசியாவின் சில பகுதிகளில் இது ஒரு முக்கியமான உணவு மீனாக உள்ளது. ஈரப்பதமாக இருந்தால் நீண்ட நேரம் தண்ணீருக்கு வெளியே உயிர்வாழும் திறன் கொண்டதாக இருப்பது, இதன் சந்தைத்தன்மையைக்கு சாதகமாக இருக்கிறது. [2]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Ahmad, A.B.; Hadiaty, R.K.; de Alwis Goonatilake, S.; Fernado, M.; Kotagama, O. (2019). "Anabas testudineus". IUCN Red List of Threatened Species 2019: e.T166543A174787197. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T166543A174787197.en. https://www.iucnredlist.org/species/166543/174787197. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Anabas testudineus" in FishBase. August 2019 version.
- ↑ Mitchell, Jesse (1864). "On the climbing habits of Anabas scandens". Annals and Magazine of Natural History. 13 (74): 117–119. doi:10.1080/00222936408681585
- ↑ Hughes, G. M.; B. N. Singh (1970). "Respiration in an Air-Breathing Fish, the Climbing Perch Anabas Testudineus Bloch". Journal of Experimental Biology 53: 265–280. https://jeb.biologists.org/content/53/2/265.short. பார்த்த நாள்: 17 June 2020.
- ↑ Jonathan Pearlman, Aggressive 'walking' fish is heading south towards Australia, scientists warn, The Telegraph, Tuesday 02 June 2015 from telegraph.co.uk, accessed June 2, 2015.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Anabas testudineus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.