பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், நயா ராய்ப்பூர்
பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (International Institute of Information Technology, Naya Raipur) (IIIT-NR), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான ராய்ப்பூர் அருகே நயா ராய்ப்பூரில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் சத்தீசுகர் அரசு மற்றும் தேசிய அனல் மின் நிறுவனம் வழங்கும் நிதியில் செயல்படுகிறது. இது பல்கலைக்கழக மானியக் குழு மற்றும்அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுடன் இணைவு பெற்றுள்ளது.[2]
படிமம்:International Institute of Information Technology, Naya Raipur logo.png | |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | அறிவு நமக்கு ஆழ்ந்த அமைதியைத் தருகிறது |
---|---|
வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2015 |
சார்பு | பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு |
தலைவர் | சௌரப் சிறீவஸ்தவா[1] |
துணை வேந்தர் | பிரதீப் குமார் சின்கா |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்புறம் |
இணையதளம் | www |
மாணவர் சேர்க்கையும், இட ஒதுக்கீடும்
தொகுஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மையில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இந்நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முதலாமாண்டு பி. டெக் வகுப்பின் மூன்று பாடப்பிரிவிகளில் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுகின்றனர். சத்தீஸ்கர் மாநில மாணவர்களுக்கு 50% மற்றும் தேசிய அனல் மின் நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 35% இடங்கள் இணை இட ஒதுக்கீடு குழுவால் நிறைக்கப்படுகிறது.
பாடங்கள்
தொகுஇந்நிறுவனத்தில் இளநிலை பி. டெக் பட்டப் படிப்பில் கணிப்பொறி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மிண்ணுவியல் & செய்தித் தொடர்பு பொறியியல் பாடப்பிரிவுகள் கொண்டுள்ளது. முதுநிலை எம். டெக் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளும் கொண்டுள்ளது. [3]
விடுதி வசதிகள்
தொகுமாணவ-மாணவியர்களுக்கு 4 தங்குமிட விடுதிகள் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Administration". Iiitnr.ac.in. Archived from the original on 2017-03-31. பார்க்கப்பட்ட நாள் 2024-06-28.
- ↑ "University". Archived from the original on 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 4 January 2018.
- ↑ "Institute Brochure" (PDF).
வெளி இணைப்புகள்
தொகு