பயனர்:எஸ்ஸார்/அறிமுகம்

எஸ்ஸார் என்ற பெயரில் பங்களித்து வரும் எஸ்.ஆர். சசிக்குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் சமூகவியல் துறையில் இளங்கலை பட்டமும், மதுரை காமராசர் பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மதுரையிலுள்ள செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழ் விக்கிக்கு பங்களிக்க தொடங்கினார். மதுரைத் தமிழ், தி டைம்ஸ், டைம்ஸ் சதுக்கம், ஜன் லோக்பால் மசோதா, திருமங்கலம் சூத்திரம், லா எசுப்பானியோலா, ரெசொல்யூட் மேஜை, நோபல் பரிசு சர்ச்சைகள், இழிவான போர் (அர்ஜென்டினா), ஸ்டீவ் வாஸ்னியாக், அவகாதரோவின் விதி, ஜேம்ஸ் பாண்ட் தீவு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நெப்போலியப் போர்கள் போன்றவை இவர் தொடங்கிய முக்கியக் கட்டுரைகள் ஆகும். புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடைய இவர் தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கி காமன்சிலும் பங்களித்து வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:எஸ்ஸார்/அறிமுகம்&oldid=1113951" இலிருந்து மீள்விக்கப்பட்டது