பயனர்:ஹேமபாரதி.ப/மணல்தொட்டி

ரோகிணி ஆர்.பாசிபாகரே
பிறப்பு1986
தேசியம்இந்தியர்
பணிஆட்சிப் பணியாளர்
அமைப்பு(கள்)இந்திய ஆட்சிப் பணி

ரோகிணி ஆர்.பாசிபாகரே (Rohini R Bhajibhakare) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணியாளரும் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியரும் ஆவார்.[1]

வாழ்க்கை

தொகு

ரோகிணி ஆர். பாசிபாகரே மகாராட்டிரத்திலுள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் இராமதாசு மற்றும் கணவர் பெயர் விசயேந்திர பிடாரி. இவர் புனேவிலுள்ள பொறியியல் கல்லூரியில் இளங்கலை கணினிப் பொறியியல் முடித்தார்.[2] இவர் குடிமைப் பணி அதிகாரியாக தேர்ச்சிப் பெற்றபின் முதன் முதலில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியாற்றினார். பிறகு திண்டிவனத்தின் துணை ஆட்சியராக பணியாற்றிவிட்டு மீண்டும் மதுரைக்குக் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். இதன்பிறகு சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றார். இவர் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையைப் பெறுகிறார்.[3] மாவட்ட ஆட்சியராக பல சேவைகளைச் செய்து மக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றார். இவர், சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழக பதிவாளராக பணியாற்றிய பின் தற்பொழுது உயர்கல்வித்துறை இணைச்செயலராக பணியாற்றி வருகிறார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Aranha, Jovita. "How IAS Rohini Became Salem's 1st Woman District Collector in 170 Years!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
  2. src="https://secure-gravatar-com.cdn.ampproject.org/ii/AW/s/secure.gravatar.com/avatar/3b40ae9f3352c4a5408ec5653d2a78aa?s=22, <img alt="Chief Editor" height=22 loading=lazy; amp;d=mm; srcset="https://secure-gravatar-com.cdn.ampproject.org/ii/AW/s/secure.gravatar.com/avatar/3b40ae9f3352c4a5408ec5653d2a78aa?s=44, amp;r=g"; amp;d=mm; Editor, amp;r=g 2x" width=22>Chief. "Rohini (Salem Collector) Wiki, Biography, Age, Husband, Images". wikimylinks (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25. {{cite web}}: |first= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  3. "Collector's piece". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
  4. "Ms Rohini Bhajibhakare appointed Deputy Secretary, Higher Education". www.whispersinthecorridors.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help); Text "Whispersinthecorridors" ignored (help)