பயனர்:Maiyarasi Selladurai/மணல்தொட்டி
2018 கோடை இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டில் பெற்ற வெள்ளி பதக்கம் (10 மீட்டர் ஏர் ரைஃபிள் | ||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியன் | |||||||||||||||||||||||||||||||
குடியுரிமை | இந்தியன் | |||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 20 நவம்பர் 2000 கல்யாணி, நாடியா, மேற்கு வங்கம் | |||||||||||||||||||||||||||||||
வசிப்பிடம் | பைத்யாபதி, ஹூக்லி மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||
கல்வி | டெக்னோ இந்தியா குழும பொதுப் பள்ளி, கூக்ளி-சூச்சுரா | |||||||||||||||||||||||||||||||
தொழில் | துப்பாக்கி சுடுதல் | |||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் செயலில் | 2014– | |||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் | |||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | ஏர் ரைஃபிள் | |||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||||||||
உலக இறுதி | செக் குடியரசில் மே 2017 இல் நடந்த இளையோர் துப்பாக்கி சுடும் போட்டியில் 7 வது இடத்தைப் பிடித்தார். 2018 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பையில் 2 வெண்கலப் பதக்கத்தை வென்றார். | |||||||||||||||||||||||||||||||
தேசிய இறுதி | 2016-2 தங்கம்; 7 வெள்ளி .2017– 8 தங்கம், 3 வெண்கலம் | |||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மெகுலி கோஷ் (Mehuli Ghosh) (பிறப்பு:20 நவம்பர் 2000) ஓர் இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் தனது 16 வயதில், 2016 தேசிய துப்பாக்கி சுடுதல் வாகைப்போட்டியில், ஒன்பது பதக்கங்களை வென்றார். இவர் 2017 ஆம் ஆண்டு, யப்பானில் நடந்த ஆசிய 'ஏர்கன்' வாகைப்போட்டியில், தனது முதல் பன்னாட்டுத் தங்கப் பதக்கத்தை வென்றார்.[1] மேற்கு வங்காத்தில் பிறந்து வளர்ந்த இவர், இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியின் இளைய உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
வாழ்க்கைப் பின்னணி
தொகுதொடக்கக் காலங்களில், சிஐடி போன்ற, புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களாலும், பல்வேறு அதிரடி திரைப்படங்களைப் பார்த்தும், இவர் துப்பாக்கிகள் மீது ஈர்க்கப்பட்டார். 2008 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் விளையாட்டை, பார்த்தபின் துப்பாக்கிச் சுடுதலைத் தொழிலாக தொடர முடிவு செய்தார். இவரது தொடக்ககாலத்தில், பயிற்சி செய்வதற்கான சரியான வரம்பும் மின்னணு இலக்குகளும் இல்லாமல் போனது. வரம்புகளில் தனது இலக்குகளை மாற்ற இவர் ஒரு கை கம்பியை மட்டுமே பயன்படுத்தினார்.
இவர், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தினசரி கூலி தொழிலாளி. இவரது தாயார் ஒரு இல்லத்தரசி. ஆரம்ப காலத்தில், இவரின் பயிற்சிக்காக இவரது குடும்பத்தினர் பெரும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டனர், ஆனால், பிற்காலத்தில் இவரால், பிறருக்கு ஆதரவளிக்க முடிந்தது. [2]
2014ஆம் ஆண்டில், தற்செயலாக இவரது குண்டு ஒரு நபரைத் தாக்கி காயப்படுத்திய போது, இவரது ஆட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இவர் மன அழுத்தத்திற்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து, இவரது பெற்றோர், இவரை அருச்சுனா விருது பெற்ற ஜாய்தீப் கர்மாகரின் பயிற்சிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.[3] இதன் காரணமாக, இவர் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்ததுடன் பெரும்பாலும் நள்ளிரவிலேயே தனது பயிற்சி அமர்வுகளிலிருந்து திரும்புவார்.
வெற்றிகள்
தொகு2016ஆம் ஆண்டின் தேசிய சாம்பியன்ஷிப் இவருக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக இருந்தது. அந்த போட்டியில், ஒன்பது பதக்கங்களை வென்று இளையோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், யப்பானில் நடந்த ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் இவர் தனது முதல் சர்வதேச தங்கத்தை வென்றார். 2018 ஆம் ஆண்டில், பியூனஸ் அயர்ஸில் நடந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இவர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும்,[4] அந்த ஆண்டு உலகக் கோப்பையில் வெண்கலத்தையும் வென்றார். இது மூத்தோர் உலகக் கோப்பையில் இவரது அறிமுகமாகும். மேலும், பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் வெண்கலம் வெல்ல உலக இளையோர் சாதனைப் புரிந்தார். 2019 ஆம் ஆண்டில், நேபாளத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், இவர் தற்போதைய உலக சாதனையை முறியடித்துத் தங்கம் வென்றார். [5] கோஷ் 2020 ஆம் ஆண்டில், 'ஸ்போர்ட்ஸ்-ஸ்டார் ஏசஸ்' விருதுகளில், அந்த "ஆண்டின் சிறந்த இளம் தடகள வீராங்கனை" விருதைப் பெற்றார்.[6] [7]
பதக்கங்கள்
தொகு- வெள்ளிப் பதக்கம்: 2019 ஐ.எஸ்.எஸ்.எஃப் இளையோர் உலகக் கோப்பை, சுஹ்ல்
- தங்கப்பதக்கம்: 2019 தெற்காசிய விளையாட்டுகள் காட்மாண்டு
- வெண்கல பதக்கம்: 2019 ஆசிய சாம்பியன்ஷிப் (இளையோர்) தைவான்
- வெள்ளிப் பதக்கம்: 2018 ஒலிம்பிக் விளையாட்டு (இளைஞர்) பியூனஸ் அயர்ஸ்
- வெண்கல பதக்கம்: 2018 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை குவாடலஜாரா
- வெள்ளிப் பதக்கம்: 2018 காமன்வெல்த் விளையாட்டு கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து
- வெண்கல பதக்கம்: 2018 உலகக் கோப்பை குவாடலஜாரா
- தங்கப் பதக்கம்: 2017 ஆசிய சாம்பியன்ஷிப் (இளைஞர்) வகோ நகரம்
- 2 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள்: 2016 தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் புனே
- 10 மீ ஏர் ரைஃபிள் கலப்பு குழு
மேற்கோள்கள்
தொகு- ↑ "ISSF - International Shooting Sport Federation - issf-sports.org". www.issf-sports.org. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ "பிபிசி தமிழ்".
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Commonwealth Games 2018: Mehuli Ghosh wins silver in 10 air rifle, Apurvi Chandela bags bronze". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
- ↑ "South Asian Games 2019: Mehuli Ghosh wins gold in 10m air rifle with world record score of 253.3, effort to not be recognised by ISSF - Sports News , Firstpost". Firstpost. 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
- ↑ Sportstar, Team. "Mehuli Ghosh wins Sportstar Aces 2020 Young Athlete of the Year (Female)". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
- ↑ Dey, Santadeep. "Shooting star, counting medals - the Mehuli Ghosh story". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
புற இணைப்புகள்
தொகு- Maiyarasi Selladurai/மணல்தொட்டி பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பில்