வாருங்கள்!

வாருங்கள், Bharathy30Nov97, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 11:01, 6 பெப்ரவரி 2016 (UTC)

கணிப்பொறித் தரவாக்கம் (Data Digitization)

தொகு
     கணிப்பொறித் தரவாக்கம் என்பது பிற வடிவர்களில் உள்ள தகவல்களைக் கணிப்பொறியில் கையாள்வதற்கேற்ற தகவலாய் மாற்றியமைப்பதாகும். வரைபடங்கள், கையெழுத்து, நிகழ்படங்கள், ஒலி ஆகிய பல்வேறு வடிவங்களில் உள்ள தகவல்களைக் கணிப்பொறித் தகவலாக மாற்ற முடியும்.
     கணிப்பொறியில் தகவல்களைச் சேமித்து வைப்பதால் பயனாளர் பல்வேறு பலன்களைப் பெற முடியும்.தகவலை எளிதாக அணுக முடியும். தேவையான தகவலை எளிதாகத் தேடிக் கண்டறிந்து எடுத்தாள முடியும்.தகவல்களைத் திருத்திப் புதுப்பிக்க முடியும். எனினும்,கணிப்பொறியில் தகவல்களைச் சேமித்து வைப்பதை, நீண்டகாலத் தகவல்காப்பு நுட்பமாகப் பயன்படுத்துவது ஆபத்தில் முடியவும் வாய்ப்புண்டு. 
     தகவல் சேமக்காப்பு (preservation) என்பது நீண்டகாலச் செயல்நுட்பம்.ஆனால் இன்றைய பல தொழில்நுட்பங்கள் மிகக் குறுகியக் காலத்தில் பயனொழிந்து போகின்றன.இத்தகைய நிலையற்றத் தன்மை,கணிப்பொறித் தகவல்களின் இழப்பில் கொண்டுபோய் விட்டுவிடலாம்.

கணிப்பொறித் தரவாக்கத் தொழில்நுட்பம் பயன்படும் சில பிரிவுகள் :

  • ஆண்டறிக்கைகளும் விலைப்படியல்களும்
  • புத்தகங்கள்
  • தரவுத்தள ஆவணக்காப்பகம்
  • மின்னணு விவரப்பட்டியல்களும் துண்டு வெளியிடுகளும்
  • பொறியியல் மற்றும் வடிவக்கம்
  • நிலவியல் தகவல் முறைமை
  • திரைப்படங்கள்,இசைப்படல்கள்,மிகுதெளிவு படச் சேமிப்பு
  • செய்பொருள்/சேவைக்கான பயிற்சிக் குறிப்பேடுகள்
  • ஆய்விதழ்கள் மற்றும் கருத்தரங்குக் கட்டுரைகள்

கணிப்பொறித் தரவாக்கத்தின் படிநிலைகள் :

  • வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து கொள்ளல்.
  • ஒரு முன்னொட்டப் பயன்பாடு உருவாக்கப்படுகிறது.
  • முன்னொட்டப் பயன்பாடு ஏற்றுக்கொள்ளப்படுமாயின், வாடிக்கையாளர் வேண்டுகின்ற முழுமையான கணிப்பொறித் தரவாக்கப்பணி எடுத்துக்கொள்ளப்படும்.
  • வெவ்வேறு வகைப்பட்ட தரவுகளைக் கணிப்பொறித் தரவாக்க வெவ்வேறு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.முல

ஆவணங்களுடைய கணிப்பொறித் தகவல் வடிவத்தின் தரத்தை மேம்படுத்த பற்பல உயர்நுட்ப மென்பொருள் தொகுப்புகள் கிடைக்கின்றன.

  • கணிப்பொறித் தரவாக்கப்பட்ட தகவல்கள் வரிசைப்படுத்தப்பட்டு, எளிதாக அணுகும் வகையில், உள்ளடக்க அட்டவணைகள் தயாரிக்கப்படுகின்றன.கணிப்பொறித் தகவலைச் சேமித்து வைக்க மீவுயர் தொழில்நுட்ப மற்றும் நம்பகத்தன்மையுள்ள சேமிப்பு வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கணிப்பொறித் தகவலாக்கத்தின் பலன்கள் :

  • ஆவணங்களை நீண்டகாலம் பாதுகாக்க முடியும்.
  • முக்கியமான ஆவணங்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்க முடியும்.
  • தகவல்களை மிக எளிதாக அணுகி,எளிதாக பயன்படுத்த முடியும்.
  • தேவையான தகவல்களை, குறிப்பாக படங்கள் மற்றும் உரைப்பகுதிகளை விரைவாகவும், மிகச் சிறப்பாகவும் தேடிக் கண்டறிய முடியும்.
  • படங்கள் மற்றும் உரைத்தகவல்களை மிக எளிதாகப் பரிமாறிக்கொள்ள முடியும்.
  • குறுவட்டுகள்,இணையம் மற்றும் பிற மின்னணு ஊடகங்கள் மூலமாக மிக எளிதாகத் தகவல் பரிமாற்றம் முடியும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bharathy30Nov97&oldid=2017962" இலிருந்து மீள்விக்கப்பட்டது