வாருங்கள், Kadheab!

வாருங்கள் Kadheab, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 04:16, 23 டிசம்பர் 2009 (UTC)

வேண்டுகோள்

தொகு

தயவு செய்து நேரடியாக விக்கியில் இருந்து மற்ற பங்களிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பங்களிக்க முன்வாருங்கள். ஏற்கனவே விக்கியில் உள்ள சில கட்டுரைகளை நீங்கள் தமிழாக்குவதால் உங்கள் உழைப்பும் வீணாகக் கூடும். பார்க்க: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம். நன்றி.--ரவி 04:16, 23 டிசம்பர் 2009 (UTC)

உங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (1/3)

தொகு
வணக்கம் Kadheab. தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவது குறித்து முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் பங்களிப்பு குறித்து சில கருத்துகள், வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகிறோம்:

தமிழ் விக்கிப்பீடியா என்பது பள்ளி மாணவர்களும் கூட அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம். எனவே, இங்குள்ள கட்டுரைகள் சீரான, நல்ல தமிழ் நடையில் இருப்பதும் பக்கங்கள் பிழையின்றி முழுமையாக இருப்பதும் முக்கியம் ஆகும். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால் அனைத்துப் பங்களிப்பாளர்களும் கூடி உரையாடிச் செயல்பட்டால் தான் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த இயலும்.

  • கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் எழுதப்படும் சில கட்டுரைகளில் ஒரு வகையான வறண்ட, எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு உள்ளதாக உணரப்படுகிறது. ஒருவேளை, இது கருவியின் பிழையாகவோ கருவி உங்களின் செயல்திறனை மட்டுப்படுத்துவதாகவோ உணர்ந்தால், தயவு செய்து உங்கள் கருத்தை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கக் குழுவுக்குத் தெரிவியுங்கள். அல்லது, இக்கருவியை விடுத்து நேரடியாக கைப்பட மொழிபெயர்க்கலாம்.
  • கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் அளிக்கப்பட்ட கட்டுரைகளில் தேவைப்படும் மேம்பாடுகளைக் காணுங்கள். புதிய கட்டுரைகளை உருவாக்கும் முன் தாங்கள் ஏற்கனவே மொழிபெயர்த்த கட்டுரைகளில் இக்குறைகள் இருந்தால், தயவு செய்து திருத்தத் தொடங்குங்கள். இவை பொதுவான குறைகள் என்பதால் இவற்றைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. நீங்கள் விக்கிப்பீடியாவில் புகுபதிந்த பிறகு விக்கிப்பீடியாவின் வல மேற்புறத்தில் "என் பங்களிப்புகள்" என்று ஒரு இணைப்பு இருக்கும். இந்தப் பக்கத்தில் இருந்து உங்கள் பழைய கட்டுரைகளை இனங்கண்டு திருத்தத் தொடங்கலாம்.
  • தங்கள் பயனர் பேச்சுப் பக்கத்திலும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் நிகழும் உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியர்களிடையே கூடிய புரிந்துணர்வு ஏற்படவும், கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியம்.

இது கூகுள் கருவி மூலம் பங்களிக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் விடுக்கப்படும் பொதுவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளில் உள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனவே கவனத்தில் எடுத்திருக்கலாம். சில விசயங்கள் பொருந்தாமல் இருக்கலாம். எனினும், இப்பொதுவான வேண்டுகோளை ஏற்று, தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வேண்டுகோள் குறித்த அடுத்தடுத்த நினைவூட்டல்கள் மே 3, 2010 அன்றும் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

--ரவி 17:12, 26 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி ரவி. பழைய கட்டுரைகளைத் திருத்தும் பணிகள் தொடங்கியாயிற்று.

அவ்வப்போது திருத்தம் செய்த பழைய கட்டுரைகளைப் பற்றியும் புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளைப் பற்றியும் அவ்வப்போது விக்கி சமூகத்திற்கு தெரியப்படுத்துகிறேன். தாங்கள் எங்கள் கட்டுரைகளை மேம்படுத்த பரிந்துரைகளையும் கருத்துகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். --அப்துல்காதர் 07:28, 12 மே 2010 (UTC)Reply

உதவிக் குறிப்புகள்

தொகு

வணக்கம்,

நீங்கள் நேரடியாக விக்கியிலேயே செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. உங்களுக்கு உதவக் கூடிய சில பக்கங்கள்:

கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கூகுள் மொழிபெயர்ப்பு வார்ப்புருவை நீக்க வேண்டாம். கூகுள் கட்டுரைகளைத் தரப்படுத்த இவ்வார்ப்புரு தேவை. நன்றி--ரவி 11:24, 12 மே 2010 (UTC)Reply


நீங்கள் தந்துள்ள இணைப்புகள் எனக்கு தகுந்த நேரத்தில் உதவியாய் இருக்குமென நம்புகிறேன். நன்றி ரவி. --அப்துல்காதர் 11:28, 12 மே 2010 (UTC)Reply

மகிழ்ச்சி

தொகு

நீங்கள் கூகுள் கட்டுரைகளில் செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. நன்றி--ரவி 18:53, 11 ஜூலை 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kadheab&oldid=554936" இலிருந்து மீள்விக்கப்பட்டது