Miniberry
வாருங்கள்!
வாருங்கள், Miniberry, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--Commons sibi (பேச்சு) 16:03, 8 திசம்பர் 2014 (UTC)
பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி
வணக்கம், Miniberry!
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:55, 9 திசம்பர் 2014 (UTC)
புணர்ச்சி பிழையானால் பொருளும் பிழையாகும்
தொகுவணக்கம்!
என் பெயர் பொன்முடி. வயது 56. படித்தது எம்.பி.,பிஎஸ். இருப்பது காரைக்காலில். பணிபுரிவது திருநள்ளாறு அரசுமருத்துவமனையில்.
தமிழ் இன்று சீர்கெட்டுக்கிடக்கிறது. காரணமென்னவென்றால், புணர்ச்சி என்னும் இலக்கணம் அறிஞர்களாலும் சரியாக விளங்கிக்கொள்ளப்படாமலிருப்பதுதான். தமிழ்ப்பாடநூல்களிலேகூட பக்கத்துக்குப்பக்கம் புணர்ச்சிப்பிழைகள் மலிந்துகிடக்கின்றன. இன்றுள்ள +2 தமிழ்ப்பாடநூலின் ஆறாம்பாடத்துக்கான தலைப்பு, ' நீதி நூல்களில் இலக்கிய நயம்' என்றுள்ளது. இது, 'நீதிநூல்களில் இலக்கியநயம்' என்றுதானிருக்கவேண்டும். இந்த பாடத்தின் முதற்பத்தியில்மட்டும் புணர்ச்சிப்பிழைகள் அறுபதுக்குமேலுள்ளன!
இதையெல்லாம் விளக்கும்பொருட்டு ஒரு நூலை எழுதியுள்ளேன். அது விரைவில் வெளிவரவுள்ளது. ம்யிலாடுதுறை ஏவிசி கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவராயிருக்கும் திரு. துரை குணசேகரனவர்கள் அந்த நூலுக்கு அணிந்துரைவழங்கியுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
புணர்ச்சிபற்றிய என் கருத்துகளை விக்கிப்பீடியாவில் வெளியிடக்கருதி சிலவற்றை எழுதமுயன்றேன். அதில் பல சிக்கல்கள்வருகின்றன. இப்போதுகூட, 'புணர்ச்சி பிழையானால் பொருளும் பிழையாகும்' என்றதலைப்பில் ஒரு கட்டுரையை எழுதத்தொடங்கினேன். ஆனால், அதை நீக்கக்கோரி ஒருவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இதேதலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை இருப்பதாய்க்குறிப்பிட்டுள்ளார். ஆனால் விக்கியில் தேடினால், நானெழுதியதுமட்டுமேவருகிறது.
இந்த குழப்பங்களிலிருந்து விடுவித்து தொடர்ந்து நான் எழுதுவதற்கு வழிவகைசெய்துதருமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன், பொன்முடி.