vote for tamil wikipedia related bugs தொகு

விக்கிபீடியா:வழு நிலவரங்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழுக்களின் இணைப்புகளை பின்பற்றி பக்சில்லா தளத்தில் சென்று ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஓட்டளிப்பதின் மூலம் இந்த வழுக்களை பக்சில்லா காரர்கள் முன்னுரிமை கொடுத்து சரி செய்வர். அது தமிழ் விக்கிபீடியா திட்ட வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு ஓட்டளிப்பதற்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து நீங்கள் அத்தளத்தில் பயனர் கணக்கு உருவாக்க வேண்டியிருக்கும். இந்த வழுக்களின் நிலவரம் குறித்த தொடர் மின்மடல்களை நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத மின் மடல் முகவரியைக்கொடுத்து பயனர் கணக்கு உருவாக்கலாம். மேற்கொண்டு விளக்கம் தேவைப்பட்டால் தயவு செய்து என் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். நன்றி--ரவி (பேச்சு) 10:34, 12 ஆகஸ்ட் 2005 (UTC)

பாராட்டுக்கள் தொகு

நீங்களும் ஸ்ரீநிவாசனும் இணைந்து நடப்பு நிகழ்வுகள் பக்கத்தை மீண்டும் இற்றைப்படுத்த தொடங்கியுள்ளதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.--ரவி (பேச்சு) 10:34, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

clarification தொகு

தங்கள் மற்றும் இன்ன பிற இலங்கை கட்டுரையாசிரியர்களின் ஆக்கங்களில் இவ் விளையாட்டுக்கு, இவ் நாட்டுக்கு, இப் படிமம் போன்ற சொற்புணர்வுகளை காண்கிறேன். இலங்கையில் இது போன்ற பயன்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவையா என அறிய விழைகிறேன். தமிழ் நாட்டில் இவ்விளையாட்டுக்கு, இந்நாட்டுக்கு , இப்படிமம் என்று சேர்த்து எழுதுவது தான் வழக்கம். அதுவும் -வுக்கு முன் வ் ஒற்று கண்டிப்பாக வராது. இது குறித்து விளக்கவும். தங்கள் பயன்பாடு கவனக்குறைவால் வந்த பிழை என்றால் தங்கள் கட்டுரையை திருத்தலாம்--ரவி (பேச்சு) 13:02, 22 ஆகஸ்ட் 2005 (UTC)

Todo வார்ப்புரு தொகு

நற்கீரன், மிகவும் பயனுள்ள வார்ப்புரு ஒன்றை ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி. ஆனால், அதை வேலை செய்ய வைப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது :) எவ்வளவோ முயன்றும் என்னால் அதை அழகாக கட்டம் கட்ட முடியவில்லை. சுந்தர் உதவுவார் என எதிர்பார்க்கிறேன். மற்றபடி இந்த வார்ப்புரு எல்லா பக்கங்களிலும் நன்றாக வேலை செய்யும்--ரவி (பேச்சு) 09:50, 7 செப்டெம்பர் 2005 (UTC)Reply


ரவிக்கு சில தன்நிலை விளக்கங்கள் தொகு

  • முதலில் "நிலுவையில் உள்ள பணிகள்" வார்ப்புரு கட்டுமானங்களுக்கு நன்றிகள்.
  • "இவ்" தொடுத்தெழுத்வது பிரித்தெழுவது பற்றிய இலக்கணம் தெரியாது. சில வேளைகளில் இலங்கை வழக்குக்கு ஏற்றதாக இருக்கலாம். நீங்கள் இலக்கண வழக்குக்கும் பொது வழக்குக்கும் மாறாக இருப்பதாக சுட்டியபடியால் இயற்றவரை தவிர்க்க முயல்கின்றேன்.
  • சில தலைப்புக்கள் (உ+ம்: இயற்கை அனர்த்தங்கள்) நான் பொது வழக்கிலிருந்து மாறுபட்டு எழுதினால், அதனை சுட்டுங்கள். நான் தகுந்த மாற்றங்கள் செய்ய முனைவேன். இதுற்கு தமிழில் எனக்கு பொதுவாக பாவிக்கப்படும் சொற் தொடர்கள் பற்றிய பரிச்சியம் இன்மையே காரணம். அதேவேளை சில பதிவுகளில் நான் உபயோகிக்கும் சில எண்ணகருக்களுக்கு தமிழில் ஒரு பரந்த கருத்து பின்புலம் இல்லை.
  • தமிழ் விக்கிபீடிய நடை பற்றி சீரிய பண்பில் நோக்கி வருகின்றேன். (பின்னர் விபரம் தருகின்றேன்.) எனது சில பதிவுகளில் பேச்சு நடை, பாட புத்தக நடை இருப்பதாக நீங்களும் சுந்தரும் சுட்டி இருக்கின்றீர்கள். அதை சீர் செய்ய பின்னர் முயல்கின்றேன்.
  • வெளி இணைப்புகள் எனக்கு முக்கியமாக தெரிகின்றது. இக் கருத்தையே சில பிற பயணர்களும் கொண்டிருக்கின்றார்கள் என்பது நான் அறிவேன். நீங்கள் சுட்டியது போல், யாரும் கூகிள் சென்று தேடிக்கொள்ளலாம்தான். ஆனால், கூகிள் எவ்ளவுதான் சிறந்த தேடி என்றாலும், எது நல்ல இணைப்பு என்பதை தெரிவதற்க்கு நேரமும், சற்று புலமையும் வேண்டும். குறிப்பாக தமிழில் நல்ல பக்கங்களை கண்டுபிடுப்பது சற்று கூடிய சிரமம். தமிழில் அங்கும் இங்குமாக சில நல்ல தளங்கள் ஒளிந்து கிடக்கின்றன. ஆகவேதான், விக்கியை ஒரு இணைப்பு தொகுப்பியாகவும் பார்க்கின்றேன். தமிழில் வேறு இணைப்பு தொகுப்பிகள் (அனைத்து துறைகளுக்கும்) இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நீங்கள் வெளி இணைப்புகள் நோக்கி ஒரு தனிப்பட்ட சார்பு பார்வை கொண்டிப்பதாக தெரிகின்றது. எவை நல்ல வெளி இணைப்புகள் என்று சற்று விளக்கினால் நன்று.
  • எனது கருத்தில்:
தமிழில் இருக்கும் அலசப்படும் விடய தளங்களுக்கு முன்னுருமை
தகவல் செறிவுடன் இருக்கும் பிற மொழி தளங்களையும் தரலாம்
தமிழில் வலைப்பதிவாளர்கள் ஒரு விடயத்தை தமிழில் எழுதியிருந்தால், அவ் விடயம் தமிழில் பரவலாக எழுப்படாத விடயம் என்றால் அவ் பதிவையும் இணைப்பது நன்று என்பது என் கருத்து.
  • இறுதியாக, நீங்கள் மற்றும் பயணர்கள் தரும் கருத்துக்கள், உதவிகள் மிகவும் பயனுள்ளவை. மிகவும் அவதானத்துடன் நீங்கள் மேற்கொண்டுவரும் பணிகள் பாரட்டுக்குரியவை. தொடர்க உங்கள் நற்பணிகளை.

--Natkeeran 06:37, 10 செப்டெம்பர் 2005 (UTC)Reply

மன்னிக்கவும், நற்கீரன்..இன்று எதேச்சையாக உங்கள் பேச்சுப்பக்கம் வந்த பொழுது தான் மேற்கண்ட உங்களு விளக்கத்தை காண நேர்ந்தது. வெளி இணைப்புகளை பொருத்த வரை, தமிழில் நல்ல தளங்கள் (கட்டுரை தலைப்பு குறித்து அதிக, நேரடி தொடர்புடைய பக்கங்கள் ) எவ்வளவு இருந்தாலும் அவை அத்தனையையும் இங்கு தருவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆங்கில தளங்களுக்கான வெளி இணைப்புகளை பொருத்த வரை அதிகாரப்பூர்வ தளங்களுக்கு முன்னுரிமையும், அதற்கடுத்து நம்பகத்தன்மையும் தகவல் செறிவும் உள்ள தளங்களுக்கும் இணைப்பு தர வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால், ஒரு அளவுக்கு மேல் ஏகப்பட்ட இணைப்புகள் கொடுத்தால், பயனர்கள் எதையுமே பார்க்காமல் போய் விடக்கூடிய வாய்ப்புண்டு. இல்லை, சில முக்கியமான இணைப்புகளை மற்ற இணைப்புகள் மறைக்கவும் கூடும். பக்கமும் clutter ஆனது பொல் இருக்கக்கூடும். இதனாலேயே வெளி இணைப்புகள் விடயத்தில் நான் கொஞ்சம் கவனம் எடுத்து செய்கிறேன். காமராஜர் பற்றிய கட்டுரையில் நீங்கள் ஒர் வலைப்பதிவு இணைப்பை கொடுத்திருந்ததாக ஞாபகம். ஆனால், அதில் காமராஜர் பற்றிய overview இல்லாமல் அவரது வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவம் தான் இருந்தது. இது போன்ற இணைப்புகளை தருவதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. எனினும், இந்த விடயத்தில் கொள்கை முடிவு எடுப்பது குறித்து திறந்த மனதுடன் தான் இருக்கிறேன்.
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. விக்கிபீடியா பற்றிய முழுமையான பார்வையுடன் நீங்கள் தரும் ஆலோசனைகள், விமர்சனங்கள் மிக்க பயனுள்ளவையாக உள்ளன. நன்றி--ரவி (பேச்சு) 09:08, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நிர்வாகியாக விருப்பமா? தொகு

நீங்கள் விரும்பினால், உங்களை முறைப்படி தமிழ் விக்கிபீடியா நிர்வாகியாக தேர்ந்தெடுக்கச் சொல்லி மயூரநாதன் அவர்களிடம் பரிந்துரைக்க விரும்புகிறேன். நிர்வாகியாவதின் மூலம் மேலும் சில பக்கங்களை இன்னும் எளிமையாக உங்களால் தொகுக்க இயலும். தள பராமரிப்பில் உதவவும் ஏதுவாக இருக்கும். --ரவி (பேச்சு) 08:57, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply


நிர்வாகி ஆவதை ஏற்றுக்கொள்கின்றேன். எனது தப்பான தலைப்புக்களை நானே நீக்கிவிடலாம் அல்லவா :-) ரவி, சுந்தர், மயூரநாதன், மற்றும் அனைவரின் வேண்டுகோளுக்கும் நன்றிகள்.--Natkeeran 07:11, 23 செப்டெம்பர் 2005 (UTC)Reply

Natkeeran, sundar has nominated u for admin. please visit the nominations page and accept it. it is required formally for u to accept it. I am sure that u will continue to work for the improvement of Tamil wikimedia projects in this new capability. u need not worry whether this adminships and bureaucratships will create power hierarchy in TWpedia. as far as Twpedia is concerned these are just added responsibilities entrusted on reliable users. thats all.--ரவி (பேச்சு) 08:55, 23 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நன்றி தொகு

ஆதரவளித்தமைக்கு நன்றி கீரரே. -Sivakumar 08:07, 23 செப்டெம்பர் 2005 (UTC)Reply

அதிகாரி தேர்தலில் எனக்கு வாக்களித்தமைக்கு நன்றி. -- Sundar \பேச்சு 06:12, 27 செப்டெம்பர் 2005 (UTC)Reply

அன்புள்ள நற்கீரரே, தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. உண்மையில் நான் தமிழகம் தாண்டி வேறெங்கும் தொலைவாகச் சென்றதில்லை. எனினும் ஆஙில விக்கிபீடியா மூலம் கிட்டத்தட்ட இந்தியச் சுற்றுலா முடித்து விட்டேன்.:-) -- சிவகுமார் 04:41, 4 அக்டோபர் 2005 (UTC)Reply

நிர்வாகி பொறுப்பு தொகு

வாழ்த்துக்கள், நற்கீரன். இங்கே செய்யப்பட்ட வேண்டுகோள் மீதான வாக்கெடுப்பில் உங்களை நிர்வாகியாக்குமாறு எடுக்கப்பட்ட முடிவின் இறுதியில் நான் உங்களுக்கு நிர்வாகிகளுக்குறிய அணுக்க உரிமைகளை ஏற்படுத்தியுள்ளேன். நீங்கள் இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி விக்கிபீடியாவை மேலும் செம்மைப்படுத்த உதவுவீர்கள் என்று நம்புகிறேன். :-) -- Sundar \பேச்சு 09:55, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

வாழ்த்துக்கள் தொகு

வாழ்த்துக்கள், நற்கீரன். இனி நீங்கள் அழிக்க விரும்பும் பக்கங்களை நீங்களே அழித்து விடலாம் :)--ரவி (பேச்சு) 11:15, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

நற்கீரன், வாழ்த்துக்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் நிர்வாகி அணுக்க உரிமையைப் பயன்படுத்தித் தமிழ் விக்கிபீடியா மேலும் வளர உதவுவீர்கள் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 18:21, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

இலக்கு தொகு

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி, நற்கீரன். உங்களைப் போன்ற பல பயனர்களின் வரவால் விரைவில் பல கட்டுரைகளைத் தரமுயர்த்தி, புதிய பல கட்டுரைகளை உருவாக்கி பத்தாயிரம் தரமான கட்டுரைகள் என்ற இலக்கினை அடைவோமென நம்பிக்கை வந்துள்ளது. -- Sundar \பேச்சு 04:00, 4 அக்டோபர் 2005 (UTC)Reply

வாழ்த்துக்கள் தொகு

நற்கீரன் அவர்களே, நிர்வாகியானதற்கு என் வாழ்த்துக்கள். என் வலைப்பதிவை வாசித்ததற்கும், அதைப்பற்றிய தங்கள் குறிப்புகளுக்கும் நன்றி. தங்கள் வலைப்பதிவையும், வலைபக்கங்களையும் பார்த்தேன். சற்று பொறுமையாக வாசித்தால் உங்கள் எழுத்துக்களில் சில ஆழ்ந்த உண்மைகள் வெளிப்படுவதை காணமுடிகிறது. விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு சிறந்த முறையில் உதவும் தங்கள் பங்களிப்புகள் தொடரட்டும் என வாழ்த்துகிறேன். -ஸ்ரீநிவாசன் 11:38, 4 அக்டோபர் 2005 (UTC)Reply

சில குறிப்புகள் தொகு

கணனி என்பதும் பலரும் தேடக்கூடிய கட்டுரை தலைப்பு தான். இது போன்ற பலரும் தேடாத ஆனால் பிழையில்லாத கட்டுரைப் பக்கங்களை நீக்க வேண்டியதில்லை. பெயரிடல் மரபுக்கு உட்படாத பக்கங்களை மட்டும் நீக்கலாம். பக்கத்தை நீக்குவதில் உங்களுக்கு தயக்கம் இருக்குமானால் பேச்சுப் பக்கத்தில் பதிந்து விட்டு யாராவது ஆட்சேபம் தெரிவிக்காவிட்டால் 2, 3 நாட்கள் கழித்து நீக்கலாம். கணினி பக்கத்தை உருவாக்கி விட்டு அதற்கு கணனி பக்கத்தில் இருந்து வழிமாற்று கொடுத்திருந்தால் கணனி கட்டுரையை எழுதியவர் கோபித்துக்கொள்ளாமல் இருப்பார் அல்லவா :)? அப்புறம், பயனர் manjithkaniயின் பயனர் பக்கத்திலும் வரவேற்பு வார்ப்புருவை மறந்து விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன் :) பேச்சுப் பக்கத்தில் மட்டும் வார்ப்புரு இட்டால் போதுமானது. --ரவி (பேச்சு) 18:17, 4 அக்டோபர் 2005 (UTC)Reply

Ravi I did not delete the contents, I just copied under a more suitable or standard heading. Yes, I should have first discussed the issue before arbitrarily changing the name. In the above case, the opportunity for further discussion was there as Mauran has raised the pointed out the naming convention conflicts. Anyway, I will be more careful in the future. Also, I still have to figure out exactly how the redirection exactly works.
Yes, you are right Ravi, If I left a welcoming message in User page of someone else, it was probably an oversight on my part :-[ --Natkeeran 20:18, 10 அக்டோபர் 2005 (UTC)Reply
Natkeeran, while copying contents to another article, the edit history is lost. That's why we should use the நகர்த்து link whenever the target page is not present. If, however, the target page is present, it makes it complicated. We've to first put a en:Template:merge notice and then administrators (like you) can merge the edit histories (though, frankly, I haven't tried it yet). Oversights do happen and you need not worry for the first time. :-) -- Sundar \பேச்சு 04:08, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

சொல் பரிந்துரை உதவி வேண்டும் தொகு

நான் சில மொழிபெயர்ப்பு பரிந்துரைகளை இட்டுள்ளேன். எனினும், இவற்றை .இங்கே கேட்டால் மேலும் பலர் பார்க்க ஏதுவாக இருக்கும். -- Sundar \பேச்சு 04:23, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

  • Extropy - ஒருமையியல்
  • Extropian
  • Exploration - ஆய்வுப் பயணம்
  • Singularity - வழுவிடம், வழுப்புள், சிறப்பொருமை (from TVU)
  • Complexity - பலக்கிய, சிக்கலான
  • System - ஒழுங்கு, அமைப்பு
  • Trans humanism
  • Acceleration - வேக அதிகரிப்பு வீதம், துரித விரைக்கம், வேக வளர்ச்சி, ஆர்முடுகல்.
  • Catalysis - வினைவேக மாற்றம்?
  • Futurists
  • Futurology
  • Memome
  • Fault Tolerant Design - வழு தாங்கும் மாதிரி? (Design என்பது வடிவமைப்பு)
  • Extraterrestrial - புவிக்கு அப்பால்?, புவி கடந்த?
  • Pluralism - பன்மையியம்?
  • Egalitarianism - சமத்துவம்? ; சமுதாயச் சமத்துவம்
  • Meme
  • Integral Life System - முழுமை தரும் வாழ்க்கை முறைமை ?
  • Matrix - அச்சு
  • Complex Systems சிக்கல் முறைமைகள் ?
  • Immortality - முடிவிலி? - நன்றி: திரைப்படப் பாடல்; அழிவின்மை, அழியாப்புகழ், அழிவற்ற வாழ்வு ?
  • Redundancies - அளவுக்கதிகமானவை
  • Alien - அன்னியன்
  • asteroid collision - சிறுகோள் மோதல்
  • mass media - மக்கள் ஊடகங்கள்
  • humanism - மனிதநலக் கோட்பாடு, மனிதநேயம்
  • diversity - பல்வேறுவகை, பன்முக
  • Catastrophes - பேரழிவுகள்
  • Synergy -
  • Fusion -
  • Synthesis - கூட்டிணைவு?

கணினியியல் தொகு

ஆம், நற்கீரன். நீங்கள் சொல்வது சரிதான். எனினும் தொழில்நுட்ப வார்த்தைகளில் அவ்வளவு பரிச்சயமில்லாததால் அவ்வாறு நேர்ந்திருக்கலாம். இனி நாம் கலந்துரையாடி சரியாகச் செய்வோம். -சிவகுமார் 07:58, 18 அக்டோபர் 2005 (UTC)Reply

உங்கள் அண்மைய பங்களிப்புகள் தொகு

தொழில்நுட்பம் தொடர்பான உங்கள் அண்மைய பங்களிப்புகள் மிக அருமை. -- Sundar \பேச்சு 06:05, 14 நவம்பர் 2005 (UTC)Reply

நன்றி சுந்தர். --Natkeeran 11:53, 14 நவம்பர் 2005 (UTC)Reply

சிறு குறிப்பு தொகு

நற்கீரன், ஒரு சிறு குறிப்பு. பொதுவாக சில மாற்றங்கள் (பெரிதோ சிறிதோ) வேண்டி, பேச்சுப் பக்கத்தில் கருத்து கோரும்போது மறுமொழிகளை அப்பக்கத்தில் எதிர்ப்பார்த்து ஒரு வாரம் வரை காத்திருக்கலாம். இது குறித்து ஒவ்வொரு பயனரின் பக்கத்திலும் தெரிவிக்க அவசியமில்லை. பிற்காலத்தில் பயனர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இவ்வாறு அதிகப் பயனர்களிடமிருந்து கருத்துக்களை வேண்டி நிற்பது மாற்றங்களை செயற்படுத்துவதில் தாமதத்தை உண்டாக்கும். எப்பொழுதும் மாற்றங்களை முன்னிலைப்படுத்த இயலும் என்பதால் நீங்கள் தயங்காமல் மாற்றங்களை செயற்படுத்தலாம். அது போக தற்பொழுது உள்ள அனைத்து பயனர்களும் sportiveஆக உள்ளது நமக்கு சாதகமான விடயம். சில வழமையான பயனர்கள் சுணங்கி உள்ள போதும் நீங்களும் சிவகுமாரும் தொடர்ந்து அளவும் தரமும் குறையாமல் பங்களிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி--ரவி 14:37, 15 டிசம்பர் 2005 (UTC)

Your contribution to thamizh wiki is really motivating. Keep the good work. you are a gem :-) -- சிவகுமார் 04:04, 19 டிசம்பர் 2005 (UTC)
Natkeeran, Thanks for the information. We'll follow the same. -- சிவகுமார் 03:50, 20 டிசம்பர் 2005 (UTC)

varying day template தொகு

u can see en:Help:Variable#Varying with time. This may help u to update dates in the current events page--ரவி 14:48, 22 டிசம்பர் 2005 (UTC)

அருமை தொகு

நற்கீரன் தங்களின் சமுதாய வலைவாசல் பக்க வடிவமைப்பு மிகவும் அருமை. :-) -- சிவகுமார் 17:16, 23 டிசம்பர் 2005 (UTC)

பாராட்டு தொகு

தங்கள் அண்மைய மின்னணுவியல் கட்டுரைகள் நன்று. பொதுவானத் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதோடு இப்படி அவரவர் துறை சார் தலைப்புகளிலும் எழுதுவது மிக அவசியம். இந்த நோக்கிலேயே நானும் உயிரியல் கட்டுரைகளில் கவனம் செழுத்தி வருகிறேன். அப்புறம், உங்கள் பேச்சுப் பக்கத்தை தொகுப்பாக்கலாமே..ரொம்ப நீளமாய் போகிறது :)--ரவி 14:05, 5 ஜனவரி 2006 (UTC)

Thanks Ravi. Yes, I do need to achieve my Talks. I will do that shortly. I am trying to clarify how the memory system in Wikipedia works, so that I am NOT adding any unnecessary burden on it. --Natkeeran 20:02, 5 ஜனவரி 2006 (UTC)
Please see en:Wikipedia:How to archive a talk page, particularly the section on "Monolithic discussion file" if you're concerned about disk usage. But, there is a problem in that uninitiated users might carelessly edit the older versions. -- Sundar \பேச்சு 04:27, 6 ஜனவரி 2006 (UTC)
Return to the user page of "Natkeeran/தொகுப்பு02".