விக்கிப்பீடியா:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள்

தனி ஒரு கட்டுரை சாராத பொதுவான கலைச்சொல் மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள் இந்தப் பக்கத்தில் இடம் பெறும்.

உயிரியல் குறித்து பல விரிவான கட்டுரைகள் எழுதும் ஆர்வமிருக்கிறது. எனினும் இத்துறைக்கான சரியான கலைச்சொல் அகராதி இல்லாதது பெருந் தடையாக இருக்கிறது. பின் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான நல்ல தமிழ் சொற்களுக்கான உங்கள் ஆலோசனைகளைத் தாருங்கள். நன்றி.

chromosome தொகு

Chromos = color , some = body

ஒரு குரோமோசோம் பல மரபணுக்களை உள்ளடக்கியது என்பதால் மரபணுச் சரம் என அழைக்கலாம் என்பது என் கருத்து. அல்லது, ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழ்ப்டுத்தி வண்ணமெய் என்று அழைக்கலாமா?

வண்ணமெய் என்பது அதன் பண்பை சரியாக விளக்கவில்லை. ஆகையால் அது வேண்டாம் என எண்ணுகிறேன். இதுவரை எவரும் மொழிபெயர்த்திருக்கவில்லை என்றால் மரபணுச் சரம் என்று பயன்படுத்தலாம். மிகவும் பொருத்தமாக உள்ளது இரவியின் இச்சொற்கொடை. :-) -- Sundar \பேச்சு 6 ஜூலை 2005 04:36 (UTC)
Chromosomeகளில் மரபணுக்கள் தவிர்த்து இன்னும் பல விடயங்களும் உள்ளன. அவை எல்லாம் இருந்தால் தான் மரபணுக்களால் வேலை செய்ய முடியும். அதனால், மரபணுச்சரம் என்னும் சொல் பொருந்தி வருவது போலத் தோன்றினாலும்,Chromesomeகளின் மற்ற பண்புகளை மறைத்துவிடுமோ என்ற தயக்கமும் இருக்கிறது. உயிரியல் கலைச்சொற்களை உருவாக்கும் முன்னோடிகள் எவரையைனும் உங்களுக்கு தெரியுமானால், தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்--ரவி (பேச்சு) 09:29, 9 ஆகஸ்ட் 2005 (UTC)
இவர் ஒருவேளை உதவலாம். -- Sundar \பேச்சு 10:00, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

In the LIFCO english-tamil dictionary, chromosomes are called 'அணுக் கோல்கள்' --முரளி மோகன் 15:55, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

நிறமூர்த்தம் என்ற சொல்லே இலங்கை பாடப்புத்தகங்களிலும் கல்வித்திட்டத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள உயிரியல் மாணவர்களுக்கு அந்த சொல்லே பரிச்சயமானது. --மு.மயூரன் 16:17, 12 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

நான் பார்லி கட்டுரை மொழி மாற்றம் செய்யும் போது மரபுத்தாங்கி என்ற சொல்லை பயன் படுத்தினேன். மரபனுத்தாங்கி என்ற சொல் சரியாக இருக்குமா? ஆங்கில பெயர் சூட்டிய போது அவற்றின் உண்மையான செயல் அறியப்பட்டிருக்க வில்லை. எனவே, அதன் உருவத்தை வைத்து பெயர் சூட்டினர். தற்போது அதை அப்படியே நிர மூர்த்தம் என்று மொழி மாற்றம் செய்வது சரியல்ல என்பது எனது கருத்து. நன்றி. Pappadu Pappadu 04:57, 7 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

genome தொகு

கை ரேகை ஒருவனை அடையாளம் காட்டவல்லது போல Genomeம் ஒரு உயிரினத்தை அடையாளம் காட்டவல்லது என்பதால் மரபு ரேகை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அனைவரின் கருத்தையும் அறிய ஆவல்.

ரேகை ஒரு வடமொழிச்சொல்லாக இருப்பினும் தமிழில் வெகுவாகப் பயன்படுத்தப்படுவதால் வைத்துக் கொள்ளலாம். மரபுத்தகவற்கோள் நன்றாக இருக்குமா? -- Sundar \பேச்சு 6 ஜூலை 2005 04:36 (UTC)
மரபுத்தகவற்கோள் முழுப்பொருளையும் விளக்கும் நல்ல சொல்லாகத் தோன்றுகிறது. ஆனால், பயன்படுத்த எளிமையாகத் தோன்றவில்லை :) மேலும் கோள் என்ற விகுதியும் செயற்கைக்கோள் போன்ற சொற்களோடு தொடர்பு படுத்தி சிலரை குழம்ப வைக்கக்கூடும்--ரவி (பேச்சு) 09:29, 9 ஆகஸ்ட் 2005 (UTC)
ஆம். எனக்கும் அவ்வாறே தோன்றியது. -- Sundar \பேச்சு 10:00, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

மரபு ரேகை என்பது genetic fingerprint என்று பொருளாகி விடுமல்லவா? மொத்த மரபுப்பொருள் அல்லது மரபுப் பொருளடக்கம் சரியாக இருக்குமா? நன்றி - Pappadu

மரபுத்தகவற்ச்சுருள்/மரபுத்தகவற்ச்சரம் என்பது பொருந்துமா? ஏனென்றால் genome is nothing but a long stretch of the genetic material made of DNA.so I guess it might fit.எனவே இங்குள்ள நண்பர்களின் கருத்துக்காக காத்திருக்கிரேன்[User:அனபாயன்]

eukaryote தொகு

மெய்க்கருத்திசுளினம்? -- Sundar \பேச்சு 6 ஜூலை 2005 04:38 (UTC)

நல்ல சொல். Eu என்றால் நல்ல என பொருள் தரும். எனவே உங்கள் ஆலோசனையை கொஞ்சம் மாற்றி நற்கருத்திசுளினம் என நிச்சயம் பயன்படுத்தலாம். நன்றி சுந்தர். இப்பொழுது Prokaryoteக்கு சொல் கண்டுபிடிப்பதும் எளிமையாகி விட்டது :)--ரவி (பேச்சு) 09:29, 9 ஆகஸ்ட் 2005 (UTC)
-) Sundar \பேச்சு 10:00, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

prokaryote தொகு

முற்கருத்திசுளினம் என்பது என் பரிந்துரை. மாற்றுக்கருத்து இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்--ரவி (பேச்சு) 09:29, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

exon தொகு

வெளிப்படுமரபுப்பொருள்? conveys the meaning of "expression", the reason Walter Gilbert termed them "exons"; adapted fm the suggestion for intron.

how about வெளிபடு மரபணுக்கூறு? The word மரபணுப்பொருள் seems to indicate something like a gene rather than part of a gene to me! --Pappadu 21:19, 11 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]


intron தொகு

இடைபடுமரபுப்பொருள்? -- Sundar \பேச்சு 6 ஜூலை 2005 09:30 (UTC) exon - செயல்படுமரபுப்பொருள்? புருனோ மஸ்கரனாஸ் 01:49, 21 ஜூலை 2008 (UTC)ி "இடைபடுமரபுச்சரம்",இதன் பொருள் intronனுக்கு இணையாக உள்ளது போல தோன்றுகிறது?[User:அனபாயன்] 19 நவம்பர் 2008

Schema தொகு

வரை மாதிரி ?--ரவி (பேச்சு) 09:29, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

நன்றாக உள்ளது -- Sundar \பேச்சு 10:00, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

Parse tree தொகு

விடை தெரிந்தால் வெண்பா கட்டுரையில் மாற்றவும்

Metabolism தொகு

?

விடை தெரிந்தால் ஒளிச்சேர்க்கை கட்டுரையில் மாற்றவும்

இதற்கான சொல் கண்டிப்பாக தமிழ் நாட்டு உயிரியல் பாடப்புத்தகத்தில் இருக்கும். TVUவில் வளர்சிதை மாற்றம், சேர்க்கையெறிகை ஆகிய சொற்கள் தரப்பட்டுள்ளன--ரவி (பேச்சு) 09:29, 9 ஆகஸ்ட் 2005 (UTC)
சேர்க்கையெறிகை நன்றாக உள்ளது. -- Sundar \பேச்சு 10:00, 9 ஆகஸ்ட் 2005 (UTC)


in the list of scientific terms in lifco english-tamil dictionary, metabolism is termed as "உபசய அபசயம், வளர்சிதை மாற்றம்" --முரளி மோகன் 16:22, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

Cellular respiration தொகு

திசுள் மூச்சு?

விடை தெரிந்தால் ஒளிச்சேர்க்கை கட்டுரையில் மாற்றவும்

திசுள் சுவாசம் சரியாக இருக்குமா?--ரவி (பேச்சு) 09:29, 9 ஆகஸ்ட் 2005 (UTC)
மூச்சு என்பது மூக்கின் வழியான வளி மாற்றத்தைக் குறிக்கும். சுவாசம் வடமொழியாயினும் இந்த இடத்தில் மூச்சைவிட சரியாக இருக்கும் என நினைக்கிறேன். -- Sundar \பேச்சு 10:00, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

சொல் பரிந்துரை உதவி வேண்டும் தொகு

 • Extropy - புறத்தகவியக்கம் (புவிக்குப் புறத்தே வாழும் தகவமைப்புள்ள உயிரியக்கம்)
 • Extropian - புறத்தகவர் (அத்தகைய தகவமைப்பு உடையவர்)
 • Exploration - ஆய்வுப் பயணம் (புறத்தேட்டம், புற ஆய்வு)
 • Singularity - வழுவிடம், வழுப்புள், சிறப்பொருமை (from TVU), ஒருமையியல்
 • Complexity - பலக்கிய, சிக்கலான
 • System - ஒழுங்கு, அமைப்பு, முறைமை
 • Trans humanism -
 • Acceleration - வேக அதிகரிப்பு வீதம், துரித விரைக்கம், வேக வளர்ச்சி, ஆர்முடுகல், முடுக்கம்
 • Catalysis - வினைவேக மாற்றம்? வினையூக்கி
 • Futurists - எதிர்காலவியலாளர்? (Pappadu)
 • Futurology - எதிர்காலவியல்? (Pappadu)
 • Memome -
 • Fault Tolerant Design - வழு தாங்கும் மாதிரி? (Design என்பது வடிவமைப்பு)
 • Extraterrestrial - புவிக்கு அப்பால்?, புவி கடந்த?, வேற்றுக்கிரக ?
 • Pluralism - பன்மையியம்?
 • Egalitarianism - சமத்துவம்? ; சமுதாயச் சமத்துவம்
 • Meme
 • Model - மாதிரி
 • Integral Life System - முழுமை தரும் வாழ்க்கை முறைமை ? தொகுப்பு வாழ்முறை
 • Matrix - அச்சு, அணி
 • Complex Systems - சிக்கல் முறைமைகள் ?
 • Immortality - முடிவிலி? - நன்றி: திரைப்படப் பாடல்; அழிவின்மை, அழியாப்புகழ், அழிவற்ற வாழ்வு ? சாகா வரம்? இறவாத்தன்மை
 • Redundancies - அளவுக்கதிகமானவை
 • Alien - அன்னியன் புறத்தோன்,மாற்றான்
 • asteroid collision - சிறுகோள் மோதல், விண்கல் மோதல்
 • mass media - மக்கள் ஊடகங்கள், பொது ஊடகம்
 • humanism - மனிதநலக் கோட்பாடு, மனிதநேயம், மனிதம்?
 • diversity - பல்வேறுவகை, பன்முக
 • Catastrophes - பேரழிவுகள்
 • Synergy - ஒருங்கிணையாற்றல், கூட்டியக்கம்
 • Reductionism -
 • Fusion - கூட்டு, பிணைப்பு
 • Ontology -
 • Synthesis - கூட்டிணைவு? செயற்கை தயாரிப்பு?, கூட்டாக்கம்
 • system ஒருங்கியம், அமைப்பு, தொகுதி, முறைமை --செல்வா 17:43, 3 ஏப்ரல் 2010 (UTC)
 • ergonomics * பணிபுரிபவர்கள் அவர்கள் வேலைகளைச் செய்ய எளிமையாகவும்,பலமுறை ஒரே வகையான பணிகளைச் செய்யும் பொழுது ஊறுகள் விளையாமல், பணியாளர்களின் உடலியலுகளுக்கு ஏற்றவாறு செய்கருவிகள்,துணைக்கருவிகள், இட ஒழுக்கப்பாடுகள் ஆகிவற்றைச் தேர்ந்து வகுத்து அமைக்கும் பொறியியல் துறை. இதனைத் தமிழில் பணியிணக்கவியல் அல்லது பணியிணக்கவகுதி எனலாம். வகுதி = design. --செல்வா 17:43, 3 ஏப்ரல் 2010 (UTC)
 • fluidised = பாய்மமாக்கல் (மணல், துகள், குருனை போன்ற வடிவில் உள்ளவற்றை பாய்மம் போல் நகரச் செய்யும் தன்மை. காற்று நீர் போன்றவற்றைக் கலந்து பாய்மப்பண்பூட்டுவர். --செல்வா 17:43, 3 ஏப்ரல் 2010 (UTC)

நன்று செல்வா. என்னுடைய சில பரிந்துரைகள்.

 • Trans humanism - மாந்தக் கடவு, மாந்த எல்லைக்கடவு, மாந்தவீறு கடத்தல் (ஈறுகடத்தல்), மாந்தவுச்சிமீறல், மாந்த அத்துமீறல் (அத்துமீறலின் சுட்டுபொருள் வேறாக இருப்பதால் சிறிது குழப்பம் நேரலாம்), மனித அளப்புதாண்டல், மாந்தரிகல் தாண்டல் (இகல் = எல்லை), மாந்தவிடங்கழி, மனித ஏண்தாண்டல், மனித ஒல்கடத்தல், மனித ஏணிக்கரைதாண்டல், மனிதக்கங்குதாண்டல்

இந்த எல்லை எனும் பொருளைப் பல கோணங்களில் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களால் வழங்கியுள்ளதைக் கண்டு புல்லரித்துப் போனேன். -- சுந்தர் \பேச்சு 06:07, 29 நவம்பர் 2013 (UTC) -- சுந்தர் \பேச்சு 06:07, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

Alphabetic list தொகு

வணக்கம், நாம் அனைவரும் (அல்லது பெரும்பாலோனோர்) ஒரு இணக்க முடிவுக்கு வந்ததும், ஒரு அகரவரிசை பட்டியல் தயாரித்தால் அனைவரும் ஒரே மாதிரியான அறிவியல் தமிழ் சொற்களை பயன் படுத்த ஏதுவாக இருக்கும்.

குறைந்தது நாம் மொழி பெயர்ப்பில் பயன் படுத்திய சொற்களை ஒரு பட்டியலிட்டால் மற்றவர்கள் அதை தொடர்ந்து கவனித்து வரலாம். நானே துவங்குகிறேன்.

 • A - D
  • Breeding - கலப்புவிருத்தி
  • Chromosome - மரபணுத் தாங்கி
 • E - H
  • Fermentation - நுண்ணுயிர் பகுப்பு
  • Flavo(u)r - சுவைமணம்
  • Heart attack -இதய செயலிழப்பு
 • I - L
 • M - P
  • Malt - முளைக்கூழ்
  • Metabolism - வளர்சிதை மாற்றம்
  • Polymer - பல்கூறு
 • Q - T
  • Reproduction - இனவிருத்தி
  • species -சிற்றினம்
 • U - Z

இலத்திரனியல் சொற்குழப்பங்களும் தரப்படுத்தல் தேவையும் தொகு

இலத்திரனியல் துறையில் பல ஆங்கில சொற்கள் வரலாறு காரணமாகவோ, அல்லது பாவிப்பு பரிச்சியம் காரணமாகவோ கணித விபரிப்புக்கு அல்லது பயன்பாட்டின் உண்மை அடிப்படைக்கு மாறக உபயோகிக்கப்படுவதுண்டு. உதாரணம், கரண்ட்டை (Current) மின்காந்த சத்தி ஓட்டம் என்ற பிழையான கருத்துநிலை உண்டு. மேலும், மின் திறனையும் (Power) மின்சத்தியையும் (Energy) ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துவோரும் உண்டு. தமிழ் விக்கிபீடியாவில் ஆரம்பத்தில் இருந்து சற்று கவனமாக இருந்தால் ஒரு சீரான, தரப்படுத்தப்பட்ட ஒரு சூழலை தோற்றுவிக்கலாம். ஆனால், இதற்கு தமிழில் ஏற்கனவே நன்கு பாவிப்பில் இருக்கு சொற்களை தவிர்ப்பது கூடாது. எனவே, சொற் தெரிவுக்கு பிற பயனர்களின் தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்தால், அக் கருத்துக்களையும் உள்வாங்கி தரப்படுத்தலாம்.

--Natkeeran 00:42, 19 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

பொருள் விளக்கம் தேவை! பகுப்பாய்வு எதிர் பகுத்தாய்வு தொகு

 • Reason - பகுத்தறி
 • Rationalize - பகுத்தறி
 • Deduction - பகுத்தாய்வு
 • Analysis - பகுப்பாய்வு
 • Analysis - பகுத்தாய்வு
 • Deduce - உய்த்துணர்
 • Induction - விதிவரு முறை
 • Categorize பாகுபடுத்து, வகையிடு

Analysis and Categorization are two different acts, yet, often in Tamil same words are used. Also, Rationlization and Reasoning can have two different and even opposing meaning, yet Tamils often use it to mean Reasoning. What is the proper usage? --Natkeeran 18:15, 20 ஜனவரி 2006 (UTC)

Suggest traslation for Deterministic Finite Automaton and Non-DFA தொகு

--Natkeeran 23:42, 23 ஜனவரி 2006 (UTC)

பௌதீகவியல் vs இயற்பியல்: For Records தொகு

இப்பக்கங்களை உருவாக்கி வரும் அன்பர்களே! பௌதீகவியல் என்பது கிட்டத்தட்ட ஒரு வழக்கிழந்த சொல். தமிழ்நாட்டின் தமிழ்வழிக் கல்வி-பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் இது "இயற்பியல்" என்றே வழங்கப்படுகிறது. இந்த வழக்கோடு ஒத்துப்போக, அன்பர்கள் இச்சொல்லாட்சியை "இற்றைப்படுத்த" வேண்டுகிறேன்!

பௌதிகவியல் (பௌதீகவியல் அல்ல!) என்பதே இன்றும் இலங்கையில் வழக்கிலுள்ளது. அவ்வாறே பயன்படுத்தலாம். --மதனாஹரன் 03:25, 26 பெப்ரவரி 2012 (UTC)

அன்புடன் விக்கிபீடியர்களுக்கு,

தமிழ் விக்கிபீடியாவில் portal என்ற பெயர்வெளிக்கான தமிழ் சொல்லாக நுழைவாயில் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என அறிகிறேன். அய்யாவழி நுழைவாயிலில், நுழைவாயில்:அய்யாவழி என்றே இருக்கிறது. ஆனால் முகப்பில் சமுதாய வலைவாசல் என்றவாறான மொழி பெயர்ப்பு காணப்படுகிறது. என்னுடைய கருத்துப்படி வலைவாசல் என்பதே சதியானதும், பொருத்தமானதுமான சொல்லாகும். இதனையே நாம் பெயர்வெளிக்கும் பயன்படுத்தலாமே?

--மு.மயூரன் 17:12, 11 ஏப்ரல் 2006 (UTC)

பெரும்பாலான கலைச்சொல் அகராதிகளில் வலைவாசல் என்றுதான் உள்ளது. நுழைவாயில் என்பதும் பொருத்தமில்லாமல் இல்லை. மற்றப் பயனர்களும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் நல்லது. Mayooranathan 17:34, 11 ஏப்ரல் 2006 (UTC)


நுழைவாயில் என்பதை விட வலைவாசல் என்பதை நான் விரும்புவதற்கு காரணம், நுழைவாசல் எனும் போது ஒரு பெரும் வெளிக்கான, வாசல், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இரு வெளிகளுக்கிடையேயான வாயில் போன்ற கருத்தை தருகிறது. வலைவாசல் என்பது, பெரும் வலையமைப்புக்குள், வலையமைப்போடு வலையமைப்பாக, அதே நேரம் வாசலாகவும் இயங்கும் பக்கம் என்கிற உணர்வை தருகிறது. விக்கி பீடியாவின் வலைவாசலின் பணியும் இதுதான்.. --மு.மயூரன் 17:46, 11 ஏப்ரல் 2006 (UTC)

வலைவாசல் பொருத்தமானதாகவே படுகின்றது. நுழைதல், வாசல் இரண்டும் ஒரே பொருளை நோக்குகின்றன. வலை கூடிய தகவலை தருகின்றது. --Natkeeran 17:53, 11 ஏப்ரல் 2006 (UTC)

I too prefer வலைவாசல் for all the reasons mentioned above--ரவி 18:50, 11 ஏப்ரல் 2006 (UTC)

தமிழக அரசின் கையேடு தொகு

சென்னையில் வசிக்கும் அன்பர்கள் யாராவது தமிழக அரசின் அதிகாரபூர்வ கையேட்டை பெற்றால் பல சொற்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் புருனோ மஸ்கரனாஸ் 17:33, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

என்ன கையேடு என்பது குறித்த மேலதிகத் தகவலகளைத் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்--ரவி 23:23, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

திரு தமிழ்குடிமகன் அவர்கள் தமிழ் அமைச்சராக இருந்த பொழுது ஒரு கையேட்டை வெளியிட்டார். தற்பொழுது அது இனையத்தில் உள்ளது. உதாரணம் [1] பெரும்பாலான ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொல் இங்கு உள்ளது. இதிலிருந்து நமது பணியை தொடங்கலாம் புருனோ மஸ்கரனாஸ் 17:15, 25 ஆகஸ்ட் 2006 (UTC) http://www.tamilvu.org/library/o33/html/o3300001.htm

இந்த இணைப்பு இயங்கவில்லை வேறு ஏதேனும் இணையதளம் உள்ளதா?? சிவகார்த்திகேயன் (பேச்சு) 05:02, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சொல்லாக்கக் கேள்விகள் தொகு

1. மீள்வரு தொடர்பு (Recurrence relation). மீண்டும் மீண்டும் வரும் தொடர்புக்கு மீள்வரு தொடர்பு என்று பெயர். இதை மீள்வருத்தொடர்பு என்று எழுதினால் அதே பொருள் வருமா?

த் - தேவை இல்லை என்று நினைக்கிறேன். த் இட்டால் பொருள் சிதையலாம்--ரவி 09:45, 20 ஜூன் 2007 (UTC)

2. induction: உய்த்தறிதல் Deduction : பிரமாணித்தறிதல். இது சரியா?

பிரமாணித்தல் - தமிழ் போலும் தெரியவில்லை. பொருளும் புரியவில்லை. வேறு சொல் முயலலாம்--ரவி 09:45, 20 ஜூன் 2007 (UTC)

3. A stick of unit length: ஓர் ஒருமை நீளமுள்ள கழி. இது எனக்கு சரியாகவே படவில்லை. இதற்கு மாற்று மொழிபெயர்ப்பு என்ன? பார்க்கவும் : கேடலான் எண்கள், மூன்றாவது உட்பிரிவு.

ஓர் அலகு நீளமுள்ள கழி / குச்சி?--ரவி 09:45, 20 ஜூன் 2007 (UTC)

--Profvk 09:12, 20 ஜூன் 2007 (UTC)


மேலே Deduction என்பதற்கும் Reduction என்பதற்கும் வித்தியாசம் உண்டா? பிரித்தறிதல் எனலாமா? பிரித்தறிதல் ஒரே தளத்தில் நிகழக்கூடியாதல் அர்த்தம் பொதியவில்லை. Reduction என்னும் பொழுது நிலை வேறுபாடும் உணர்த்தப்படல் வேண்டு. இவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் இருக்க வேண்டும், மேலும் அலசலாம். --Natkeeran 10:31, 20 ஜூன் 2007 (UTC)

ரவி, நன்றி. மீள்வரு தொடர்பு, அலகு இரண்டும் சரி. நற்கீரன், Reduction என்பது பொதுநிலையிலிருந்து குறிப்பிட்ட (கீழ்) நிலைக்கு வருவது. Deduction என்பது, தருக்கரீதியாக, காரண காரியங்களுடன் ஒரு தேற்றத்தையோ அல்லது ஒர் உண்மையையோ அறுதிப்படுத்துவது அல்லது நிறுவுவது. இதற்கு இன்னும் தமிழ் எனக்குத்தெரியவில்லை. உய்த்தறிதலுக்கு ஒரு complement வேண்டும். --Profvk 10:49, 20 ஜூன் 2007 (UTC)

Deduction என்பதற்கு உய்த்தறிதல் என்ற சொல்லை இலங்கைக் உயர்தரக் (+2) கணித பாடங்களில் தமிழில் பாவிக்கின்றார்கள். --Umapathy 16:08, 20 ஜூன் 2007 (UTC)
unique: இது கணிதத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான சொல். இதனில் கணிதப்பொருள் நிரம்ப பொதிந்திருக்கிறது. சரியான தமிழ்ச்சொல் "தனிப்பட்டது", "இரண்டற்றது" இவைகளில் எது சரியாகும்? வேறு சொற்கள் உண்டா?

--Profvk 11:01, 25 ஜூன் 2007 (UTC)

தனிப்பட்டது என்பது சரியாக உள்ளது.

case by case தொகு

case என்ற ஆங்கிலச்சொல்லுக்கு பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. கணிதத்திலும் அறிவியலிலும் 'in this case', 'this case is impossible' 'in this special case' என்ற பிரயோகங்கள் தேவைப்படுகின்றன். case என்ற சொல்லுக்கு அகராதியைப் பார்த்தபோது எனக்குக் கிடைத்த சொற்கள்: அக்கீகத்து; அதிதேசம்; பட்சம்; வாது, வீடு. இவைகளில் 'பட்சம்' ஒன்றைத்தவிர இதர சொற்கள் எனக்கு சரியாகப்படவில்லை. 'பட்சம்' என்ற சொல்லும் 'case' என்ற பெயர்ச்சொல்லுக்கு இணையாகக் கணிதத்தில் பயன்படுமா என்று தோன்றவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, case by case என்ற பொருள் பொதிந்த சொல்லாட்சிக்குச் சரியான தமிழ்ச்சொல் கிடைக்கவில்லை. --Profvk 11:16, 20 ஜூன் 2007 (UTC) case என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கிலத்திலேயே பல பொருட்கள் உள்ளன. http://dictionary.reference.com/browse/case , மேலும் இத்தகு பல பொருள் கொண்ட ஒரு மொழிக்கு, தமிழில் ஒற்றைச் சொல் தேடுவது பொருந்தாது. இடத்திற்குத் தக்கவாறு பொருள் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. case by case என்பதை 'ஒவ்வொரு நிகழ்விலும்' என்று கொள்ளலாம். இது 'விஷயம்' என்கின்ற வடசொல்லுக்கு நிகரான வழக்கம் உடையது. விஷயம் என்பதை நிகழ்வு என்றோ, கருத்து என்றோ, பொருள் என்றோ இடத்திற்கேற்றவாறு பயன்படுத்துவது போல் case என்பதற்கும் இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ளல் வேண்டும்.

தமிழ் இலக்கணத்தில் கேள்விகள் தொகு

"உறுப்புக்கள்", "உறுப்புகள்": எது சரி? --Profvk 11:12, 25 ஜூன் 2007 (UTC)

உறுப்புகள் என்பதே சரியென்று நினைக்கிறேன். ஓரெழுத்து மொழிகளுக்கு மட்டுமே பன்மையில் 'க்' வரும். சான்று : பூக்கள், ஈக்கள்.

விக்கிப்பீடியா கலைச்சொற்கள் தொகு

விக்கிப்பீடியா உதவிபக்கங்கள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டும். வார்ப்புருவில் transclusion மற்றும் substitution இவற்றிற்கு புழங்கிவரும் சொற்கள் யாவை ?

substitution = மாற்றீடு. Transclusion என்னும் சொல்லை ஆங்கில விக்கியில் தந்துள்ளவாறு டெட்' நெல்சன் என்பார் 1982 இல் உருவாக்கினாராம். லிட்டரரி மசீ^ன்சு (Literary machines) என்னும் நூலில் குறிப்பிட்டாராம். இதனைப் புறச்சுட்டு எனலாம். புறத்தே உள்ள விளக்கத்துக்குச் சுட்டு தருதல் அல்லது அதனை சேர்த்தல். எனவே புறச்சேர்ப்பு என்றும் கூறலாம். புறத்தே கூறியுள்ளவற்றை சேர்த்தல் (ஒரு சுட்டின் வழியாக இணைத்தல்). எனவே புறக்கூட்டு என்றும் சொல்லலாம். --செல்வா 19:55, 27 ஏப்ரல் 2010 (UTC)

--மணியன் 08:16, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

Solar Dynamics Observatory என்பதை தமிழில் எப்படி பெயரிடுவது? --குறும்பன் 01:56, 27 ஏப்ரல் 2010 (UTC)

சூரிய சக்திகள் ஆய்வுக்கூடம் என்பது சரியாக இருக்குமா? --Theni.M.Subramani 03:02, 27 ஏப்ரல் 2010 (UTC)
சூரிய இயக்காற்றல் வானாய்வகம் --114.143.122.89 03:27, 27 ஏப்ரல் 2010 (UTC)
கதிரவனியக்க நோக்ககம். ஞாயிற்றியக்க நோக்ககம். நோக்ககம் என்றோ கூர்நோக்கி என்றோ கூறலாம். இங்கே ஞாயிற்றின் புற இயக்கத்தையும் அது நில உலகில் எவ்வகையான விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது என்பதனையறிய ஞாயிற்றை உற்று நோக்கும் கருவியையோ கருவியடுக்கையோ குறிக்கும். வானில் இருந்து இயங்கும் நோக்கியாகையால் ஞாயிற்றியக்க வானோக்ககம் என்றும் சொல்லலாம்.--செல்வா 19:44, 27 ஏப்ரல் 2010 (UTC)