Omshakthitt
வாருங்கள்!
வாருங்கள், Omshakthitt, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:26, 28 நவம்பர் 2011 (UTC)
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பீடியா கட்டுரைகளில் வணிக தளங்களை வெளி இணைப்புகளாக தர இயலாது. இது விக்கிப்பீடியாவின் வெளி இணைப்புக் கொள்கைக்குப் புறம்பானது.--சோடாபாட்டில்உரையாடுக 10:17, 29 நவம்பர் 2011 (UTC)
வணக்கத்திற்குரிய முன்னால் மேயர் மா. சுப்பிரமணியன்
தொகுவணக்கத்திற்குரிய முன்னால் மேயர் மா. சுப்பிரமணியன் அவர்கள் வாணியம்பாடி அருகில் ஒரு சிறிய கிராமத்தில் 01.06.1959 அன்று பிறந்தார். அவரது தந்தை ஏரியிலும், குளத்திலும் இருக்கின்ற மீன்களை பிடித்து விற்ற வருகின்ற வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார். இவருடைய தாயார் சின்ன வயதிலேயே இறந்துவிட்ட காரணத்தினால் 5-ம் வகுப்பு படிப்பு முடித்து, சென்னைக்கு படிக்க வந்துவிட்டார். அக்காவும் மாமாவும்தான் இவரை வளர்த்தவர்கள். பள்ளியில் படிக்கும் போதே கலைஞர் என்றால் ஒரு தனிப்பிரியம் கொண்டவர். 18 வயதிலேயே 1976ம் ஆண்டு சைதாப்பேட்டையில் கலைஞர் நற்பணி மன்றமும், இரவு பாடசாலையும் நடத்தி அந்த பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றார். அச்சமயம் இவருக்கு 18 வயதுதான். இவர் 1976 முதல் தி.மு.க.வில் இருந்து தீவிர கட்சி பணியாற்றி வந்தவர். 1987ம் ஆண்டில் சைதை பகுதி தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராகவும், 1992ம் ஆண்டில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராகவும், 2002ம் ஆண்டு முதல் மாநில இளைஞர் அணி துணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். ஏதாவது வேலையில் சேர்வோம் என்று ஒரு ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு ஏற்பட்ட தொழிலாளர் பிரச்சினையில் சங்கம் அமைத்து தலைமை ஏற்று இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினார். இவரது திருமணம் காதல் திருமணம். மனைவியின் பெயர் காஞ்சனா. பிறகு சோடா மற்றும் குளிர்பானம் தயாரிக்கும் கடை நடத்தினார். அதன் பிறகு வங்கி கடன் பெற்று பால் மொத்த வியாபாரம் மற்றும் கட்டுமான பொருள்கள் வியாபாரம் செய்து படிப்படியாக முன்னேறியவர்.
1996ம் ஆண்டு முதன் முதலில் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2001ம் ஆண்டும் தொடர்ந்து மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002ம் ஆண்டு சைதை தொகுதியில் திரு. வை. பெருமாள் அவர்களின் மறைவிற்கு பின் நடந்த இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நின்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார். 2004ம் ஆண்டு இவர் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. விழாவிற்கு செல்லுகின்ற நேரத்தில், இவர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அந்த கார் விபத்தில், அவருடன் பயணம் செய்த நண்பரும், மாநகராட்சி மன்ற உறுப்பினருமான திரு. சு.ஜம்புலிங்கம் அவர்கள் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அத்தருணத்தில் துணை முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியினால், மருத்துவ மனையில் பல வாரங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இன்றும் என்றும் அவர்தான் தன் உயிரை காப்பாற்றியவர் என்று பெருமையாக சொல்லி கொண்டிருப்பார்.
மா.சுப்பிரமணியன்-காஞ்சனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள், மூத்த மகன் இளஞ்செழியன் மாஸ்கோவில் மருத்துவம் பயின்று முடித்து, சென்னையில் பணியாற்றி வருகிறார்.
இவர் அஞ்சல் வழி கல்வி வாயிலாக பி.ஏ. முடித்து, எல்.எல்.பி.யும் முடித்துள்ளார். 1999ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டு பணியாற்றி வருகிறார்.
மா. சுப்பிரமணியன் மேயர் ஆனதும் அவர் அளித்துள்ள பேட்டியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த பணியை பின்பற்றி, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதற்கு ஒரு தொண்டனாக பாடுபடுவேன் என்று தெரிவித்து அதன்படியே செயலாற்றி வருகிறார்.
2015 சென்னையில் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. அது சமயம் தன்னுடைய இல்லம் முற்றிலும் முழ்கடிக்கப்பட்ட நிலையிலும் தன்னலம் கருதாமல் பொது நலமே முக்கியம் என்று சைதாப்பேட்டை பகுதியை சார்ந்த முதியவர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் படகு மூலம் காப்பாற்றினார்.
2016 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக சென்னை சைதாபேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.