Pollachi nasan
வாருங்கள்!
வாருங்கள், Pollachi nasan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--Natkeeran 18:40, 5 ஜனவரி 2008 (UTC)
நல்வரவு
தொகுதமிழம் இணைய இதழின் ஆசிரியர், சமூகப் போராளி பொள்ளாச்சி நசன் நீங்கள்தான் என்று நினைக்கின்றேன். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. உங்களின் பங்களிப்பும் ஈடுபாடும் தமிழ் விக்கிப்பீடியாவை பிற பல தளங்களுக்கு எடுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி. --Natkeeran 18:40, 5 ஜனவரி 2008 (UTC)
உதவிகள் எதாவது தேவைப்பட்டால் இங்கேயே கேட்கலாம். இயன்றவரை பிற பயனர்கள் உதவ முயலுவார்கள். உங்கள் கருத்துக்களை பகிர, கருத்துக்கள் கோர Wikipedia:ஆலமரத்தடி இன்னுமொரு இடம். Wikipedia:உதவி, Wikipedia:ஒத்தாசை பக்கம், Wikipedia:புதுப் பயனர் பக்கம் உங்களுக்கு உதவும். நன்றி. --Natkeeran 18:49, 5 ஜனவரி 2008 (UTC)
- ஐயா, வணக்கம்! உங்கள் வருகை கண்டு நான் மிக மகிழ்கிறேன். தமிழம் இணையத்தளத்தைத் தாங்கள் நடத்தும் பாங்கைக்கண்டு வியப்பவர்களில் நானொருவன். அண்மையில் உங்கள் தளத்தில் நீங்கள் விக்கியைப் பற்றி எழுதியிருந்ததைக் கண்டு தங்களுக்கு ஒரு மடல் விடுத்து அழைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன், செயலாற்றுமுன்னமே சேர்ந்துவிட்டீர்கள்! உங்களைப்போன்ற நல்லறிவாளர்கள் தமிழ் விக்கிக்கு ஒப்பரிய வளம் சேர்க்க இயலும். அருள்கூர்ந்து பங்களித்து வழிகாட்டுங்கள்! வருங்காலத்தில் தமிழ் விக்கி ஆணிப்பொன்னாய் விளங்க வேண்டும். அது தங்களைப்போன்ற நல்லறிவாளர்களின் பங்களைப்பால் மட்டுமே உறுதி பெறும். உங்களை வருக வருக என்று வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். --செல்வா 20:20, 5 ஜனவரி 2008 (UTC)
- ஐயா, வணக்கம். இங்கு தரப்பட்டுள்ள உங்கள் வெளியீடுகள் அனைத்திலும் ஒவ்வொன்றை எனக்கு அனுப்பும்படி வேண்டி மின்மடல் ஒன்றை உங்களுக்கு முன்னமே அனுப்பியுள்ளேன். அதற்கான விலையை உங்கள் வங்கிக் கணக்கில் ஏற்றி விடுவேன். வரும் தலைமுறைக்கு அவை இன்றியமையாதவை. அதிலும் எங்களைப் போன்ற தொழில்முறை புலம்பெயர்ந்தவர்களுக்குக் கண்டிப்பாகத் தேவை.
- இங்கு கல்வியியல், விலங்கியல், தமிழர் தொடர்பான கட்டுரைகளிலும் இன்ன பிறவற்றிலும் உங்கள் எழுத்துக்களைக் காண ஆவலாக உள்ளேன். -- சுந்தர் \பேச்சு 04:55, 7 ஜனவரி 2008 (UTC)