வாருங்கள்!

வாருங்கள், Rkaartikeyan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--AntanO 02:00, 6 ஆகத்து 2015 (UTC)Reply

கவனத்திற்கான

தொகு

கட்டுரைகளில் பிற தளங்களில் இருந்து அப்படியே நகலெடுத்துப் பயன்படுத்துவது பதிப்புரை மீறலாகும். விக்கிப்பீடியாவை சான்றாகப் (உசாத்துணை) பயன்படுத்த முடியாது. நன்றி. --AntanO 02:00, 6 ஆகத்து 2015 (UTC)Reply

பதிலளிப்பதாய் இருந்தால் இங்கு பதிலளிக்க. அதைவிட்டு காவல் துறையில் முறையிடப் போவதாய் முகநூலில் மிரட்டல் விட வேண்டாம். --AntanO 04:33, 6 ஆகத்து 2015 (UTC)Reply

நகல் எடுக்கக்கூடாதா?? சரி நானே ஆதாரங்களின் அடிப்படையில் எழுதி பதிப்பு செய்கின்றேன். நீங்கள் அதை ஏற்க்கின்றீர்களா என்று பார்ப்போம். உசாத்துணைகளையும் அளிக்கின்றேன். அதையும் நீங்கள் நிராகரித்தால் பிறகு முறையாக சைபர் கிரைமில் புகார் அளிப்பதோடு... பறையர்களை ஒன்று கூட்டி பெங்களூருவில் உள்ள விக்கி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துகின்றேன். என் சாதியின் வரலாற்றை இருட்டிப்பு செய்து எங்களை இழிவானவர்களாக இதுவரை கட்டமைத்தது போதும். உங்களைப்போன்றவர்களால் விக்கிபீடியாவிலும் வரலாற்று இருட்டிப்பு செய்வது பொறுத்துக்கொள்ள முடியாது.

இதன்படி, 1, 2, 3, 4, 5 இத்தளங்களில் இருந்து நகல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேச்சுப் பக்கத்தில் உரையாடாது பெருமளவு தகவல் நீக்கப்பட்டுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து செய்தால் நீங்கள் தடை செய்யப்படலாம். இதனை விக்கிப்பீடியா கொள்ளை அனுமதிக்கிறது. மேலும், விக்கிப்பீடியாவில் தொகுக்கும்போது விக்கிப்பீடியாவின் பயன்பாட்டு விதிமுறைகளை அனுசரித்தே தொகுக்க வேண்டும். தக்க சான்று அற்ற அல்லது மலுப்பலான சொற்கள் நீக்கப்படும் என்பதை கவனத்திற் கொள்க. மேலும் பறையர் கட்டுரையில் உள்ள தகவலுக்கு சான்று கேட்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க. விக்கிப்பீடியாவின் பயன்பாட்டு விதிமுறைகளை மீறுவோரை தடைசெய்ய உரிமை உண்டு. இதை எந்நாட்டுச் சட்டமும் தடுக்க முடியாது என்பதையும் கவனிக்க. --AntanO 06:00, 6 ஆகத்து 2015 (UTC)Reply

[சான்றுகள் தேவை] நீங்கள் என்னை தடை செய்யலாம் தாராளமாக... உங்கள் விக்கி சட்டம் அதற்க்கு அனுமதி அளிக்கும் என்கின்ற பட்சத்தில். ஆனால் சரியான வரலாற்று தகவல்களை சேர்க்க மறுப்பதை கேள்வி கேட்க்க எங்கள் நாட்டு சட்டத்தில் அனுமதி உண்டு. நாடார்களைப்பற்றிய இழிவான தகவல்களை(வரலாற்று படி உண்மையாக இருந்தாலும்) அதை அந்த மக்கள் விரும்பவில்லை என்பதால் தமிழக முதல்வரிடம் முறையிட்டு அவர் இந்திய மத்திய அரசிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். அதைப்போன்று தமிழக முதல்வரிடம் மனு அளிக்கவும் ஆவணம் செய்துள்ளோம்.

சான்றுகள் தேவை என்று கேட்டுள்ளீர்கள் பாராட்டுக்கள். சான்றுகளே இல்லாத தகவல்களை எல்லாம் பறையர் பற்றிய வரலாற்றில் பதிவேற்றம் செய்ய அனுமதித்த நீங்கள் நான் ஆதாரத்தோடு சொன்னால் அதை ஏன் ஏற்க்க மறுக்கின்றீர்கள்? என்ன காரணம்?

சரி இறுதியாக விக்கி பயன்பாட்டு விதிமுறைகளின் படி நான் கட்டுரைறை திரும்ப எழுதுகின்றேன். நீங்கள் அதை அனுமதிககின்றீர்களா என பார்ப்போம். மேலும் உதாரணத்திற்க்கு ஒரு திருக்குரள் இருக்கின்றது அந்த திருக்குரள் பல்வேறு தளங்களிலும் நூல்களிலும் அப்படியே தான் இருக்கும். ஆக நான் ஒரு திருக்குரளை உதாரணம் காட்டினால் அது மற்ற பக்கத்தில் உள்ளதை அப்படியே பதிவேற்றம் செய்துள்ளேன் என்று நீக்கி விடுவீர்களா?

இங்கு தேவையற்ற விடயங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. திருக்குறளை அல்லது வேறு ஒன்றை வலிந்து உதாரணம் காட்டினால் நீக்கப்படும். மேலும் நம்பகமற்ற மூலங்களில் இருந்து மேற்கோள் காட்டினாலும் நீக்கப்படும். விரும்பினால், மேலதிக உரையாடலை கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தொடரலாம். //சான்றுகளே இல்லாத தகவல்களை எல்லாம் பறையர் பற்றிய வரலாற்றில் பதிவேற்றம் செய்ய அனுமதித்த நீங்கள்// நான் எங்கு அனுமதித்தேன்? ஆதாரம் என்ன? ஆயிரக்கணக்காண கட்டுரைகள் என் அனுமதி பெற்றா பதிவேற்றப்படுகிறது? நீங்கள் பதிப்புரிமை மீறல் செய்தீர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என் முகநூலுக்கு வந்து அநாகரிகமாக நடந்ததை சரி என்கிறீர்களா? எனக்கு சாதி வெறி கிடையாது. ஆனால் நீங்கள் நடந்து கொள்ளும் பாங்கில்தால் உங்களை நீங்களே அடையாளப்படுத்துகிறீர்கள். --AntanO 06:19, 6 ஆகத்து 2015 (UTC)Reply
நீங்கள் அனுமதிக்கவில்லையா? நன்றி பறையர் பக்கத்தில் நான் பதிவேற்றம் செய்ததை நீங்கள் நீக்கம் செய்ததால் அந்த கட்டுரையை எழுதியது நீங்களாக இருக்கும் என்று நினைத்தேன். ஒரு பறையனாக நீங்கள் வாழ்ந்திருந்தால் நான் நடந்துகொள்ளும் பாங்கில் இருக்கும் உளவியலை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். நான் பதிப்புரிமை மீரல் செய்யவில்லை, யாருடைய பதிப்புரிமையையும் அவர்களின் அனுமதி இல்லாமல் எடுக்கவில்லை. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு-னு ஒரு இணையத்தில் உள்ளது. அந்த குரள் எனக்கும் தெரியும், ஆக அந்த குரளை எழுதி... அதறக்கு ரெப்பரன்ஸ்-ஆக நான் அந்த பக்கத்தை சேர்த்தால் அது எவ்வாறு பதிப்புரிமை மீறல் என்று தெரியவில்லை.
//என் முகநூலுக்கு வந்து அநாகரிகமாக நடந்ததை சரி என்கிறீர்களா?// நீங்கள் இலங்கை, தமிழில் டைப்செய்வதால் தமிழராக இல்லாவிடிலும் குறைந்த பட்சம் தமிழ் தெரிந்தவர் தமிழரை தெரிந்தவர் என்று கருதுகின்றேன். இலங்கையில் எழுதப்பட்ட வையாப்பாடலில் சொல்லப்பட்ட வில்லிகுலப்பறையர்கள் பற்றிய வரலாற்றை நான் எப்படி அந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்வது? தற்ப்பொழுது பேச்சு பக்கத்தில் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். எனில் அதை யார் பதிவேற்றம் செய்வார்? கட்டுரை எழுதியவரா?
இந்தியாவில் மகா பாகவதம் ராமாயணம் என்று புராணங்களிலும் சிலப்பதிகாரம் புறநாணூறு என்ற இலக்கியங்களிலும் பல்வேறு கல்வெட்டுகளிலும் பறையரில் நீண்ட நெடிய வரலாறு உள்ளது. எனில் அந்த வரலாற்றை எல்லாம் மறைத்து இந்த பறையர் பேரினத்தை இழி சாதியாக வைத்த மாற்று மொழிக்காரர்களினால் அடிமைப்பட்டு கிடக்கும் பறையனான எனக்குத்தான் தெரியும். என் வரலாற்றை விக்கி பீடியாவில் இருந்து நீக்கும் நீங்கள் யார் என்ற சந்தேகம். உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் அதற்க்கு மன்னிப்பு கேட்கின்றேன்.

பதிப்புரிமை மீறல்

தொகு
 

வணக்கம், Rkaartikeyan!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 04:40, 6 ஆகத்து 2015 (UTC)Reply

எச்சரிக்கை

தொகு

எக்காரணம் கொண்டும விக்கிப்பீடியா தொகுப்புகளுக்காக சட்ட மிரட்டல் விடுப்பதை விக்கிமீடியா இயக்கம் பொறுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு செய்வது பயனரின் கணக்கு மற்றும் IP முகவரி தடைக்கு இட்டுச் செல்லும். நீங்கள் புதியவர் என்பதால் ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் இடுகிறேன். சட்ட மிரட்டல் விடுப்பதைக் கைவிட்டு கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தீர்வு நோக்கி உரையாடவும். உங்களின் உரையாடலைக் கவனித்து மற்ற பயனர்கள் கருத்திடுவர். தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முற்பட்டால் உங்கள் பயனர் கணக்கும் IP முகவரியும் நிரந்தரமாகத் தடை செய்யப்படும்.--இரவி (பேச்சு) 05:23, 6 ஆகத்து 2015 (UTC)Reply

நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட பறையரின் வரலாற்றை திட்டமிட்டு விக்கி பீடியாவிலும் மறைப்பதால். முறைப்படி சட்டப்பூர்வமாக காவல் துறையில் புகார் அளிப்பேன் என்று சொன்னேன். இதை நீங்கள் மிரட்டல் என்றால் என்ன சொல்லுவது? பறையர்களின் வரலாற்றை இருட்டிப்பு செய்வதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது... ஆயிரக்கணக்கான பறையர்களை திரட்டி புகார் அளிக்கவோ(சட்டம் படித்த வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று விட்டுத்தான் புகார் அளிப்பதை பற்றி இங்கே கூறுகின்றேன். இந்திய நாட்டு சட்டத்தில் அதற்க்கான உரிமை இருக்கின்றது என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்) இல்லை விக்கி பெங்களூரு அலுவலகத்திற்க்கு சென்று புகார் அளிக்கவோ எனது இந்திய நாட்டில் எனக்கு உரிமை உள்ளது. என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

நீங்கள் என்னை விக்கி பீடியாவில் இருந்து தடை செய்யலாம். ஆனால் உண்மை வரலாறுகளை மறைக்க முடியாது. பறையர்களை இழிவு படுத்திய தகவல்களை பறையர் பக்கத்தில் தரவேற்றும் செய்தை அனுமதிக்கும் நீங்கள் பறையரைப்பற்றிய உயர்வான வரலாறுகளை ஏற்க்க முடியாது என்று கூறுவது எந்த மனிதாபிமான அல்லது சட்ட அடிப்படையில் சரி?

இது எங்கள் வாழ்வாதாரப்பிரச்சனை... ஏற்க்கனவே எங்கள் வரலாறுகளை மறைத்து ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பறையர்களை இழிவானவர்களாக கட்டமைத்து வைத்துள்ளனர் ஆதிக்க சாதியினர். அதன் நீட்சியாக விக்கி பீடியா போன்ற உலக மக்கள் பார்க்கும் ஒரு வலை தளத்திலும் பறையர்களின் வரலாற்றை ஏற்க்க மறுப்பது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழ் இலக்கியங்களில் உள்ள பல்வேறு தகவல்களை அப்படியே தான் விக்கியிலும் பதிவேற்றப்பட்டிருக்கின்றது. இலங்கையில் உள்ள இலக்கியம் வையாப்பாடலில் உள்ள பாடலையும் அந்த பாடலில் சொல்லப்பட்ட வில்லிகுலப்பறையர்கள் பற்றிய தகவல்களையும் நான் விக்கி பறையர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தேன். காப்பி பேஸ்டு செய்தது அந்த பாடலை மட்டும்தான்(பல்வேறு தமிழ் இலக்கிய பாடல்கள் அப்படியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்)

எனில் வையாப்பாடலில் அணுக்கேணியை ஆண்ட வில்லிகுலப்பறையர்கள் வரலாற்றை ஏன் ஏற்க்க மறுக்கின்றீர்கள்? அதை நான் காப்பி பேஸ்ட் செய்யவில்லையே!!!

இன்னொரு புதிய பக்கத்தை உருவாக்கி ஆதாரங்களின் அடிப்படையில் அவற்றை என்னால் பதிவேற்றம் செய்ய முடியும். ஆனால் ஏற்க்கனவே இருக்கும் பக்கத்தை செழுமைப்படுத்துங்கள் புதிய பக்கம் வேண்டாம் என்ற விக்கி-யின் வேண்டுகோளுக்கு இனங்கத்தான் ஏற்க்கனவே உள்ள பக்கத்தை எடிட் செய்தேன். பறையர்கள் தங்களை வள்ளுவ வேளாள பறையர் என்றும், சாம்பவ குள வேளாளர் என்றும் அழைக்கப்பட விரும்புகின்றனர் என்பதை புகார் அளிப்பதன் மூலம் தானே உறுதி செய்ய முடியும்.

ஆனால் பறையர்கள் அப்படி விரும்புகின்றனர் என்று நான் எழுதினால் ஆதாரம் இல்லை என்று அதை ஏற்க்க மறுத்து நீக்குகின்றீர்கள். அதற்க்காக புகார் அளிப்பேன் என்றால் அதை மிரட்டல் என்கின்றீர்கள்.

விக்கிப்பீடியா ஒரு பயனர் சமூகத்தால் எழுதப்படுகிறது. இப்பயனர் சமூகத்துக்குள் நல்லிணக்கம் இருந்தால் மட்டும் இத்திட்டம் சாத்தியப்படும். எனவே, எந்த ஒரு தலைப்பு குறித்தும் கட்டுரைப் பொருள் குறித்து உரையாடல் பக்கத்தில் பேசியே முடிவெடுக்க வேண்டும். நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்நாடு தரும் அரசியல் சாசன உரிமைகளை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், அவ்வாறு அணுக முற்படும் போது இப்பயனர் சமூகத்தின் இணக்க நிலை குலைகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, தொடர்ந்து சட்டம், வழக்கு, முறையீடு என்ற தொனியில் தொடராமல் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாட அழைக்கிறேன். தொடரும் பட்சத்தில் உங்கள் பயனர் கணக்கும் IP முகவரியும் நிரந்தரமாக தடை செய்யப்படும். இது இறுதி எச்சரிக்கை. நன்றி.--இரவி (பேச்சு) 05:54, 6 ஆகத்து 2015 (UTC)Reply
சரி எதற்க்கு உங்களோடு மல்லுக்கட்டிக்கொண்டு... நான் தனியாக ஒரு பக்கத்தை உருவாக்கி பறையர் பற்றிய வரலாற்றை எழுத முயற்ச்சிக்கலாமா? பயனர் பேச்சு பக்கத்தில் ஏற்க்கனவே ஒரு டாபிக்-கை உருவாக்கியாச்சு. பொருத்திருக்கின்றேன். மேலும் நீங்கள் என்னை விக்கி பீடியாவில் இருந்து தடை செய்யவதைப்பற்றி எனக்கு வருத்தம் இல்லை. 1 கோடி பறையர்கள் இருக்கின்றனர் இந்த நாட்டில் நான் இல்லாவிட்டாலும் அவர்களில் ஒருவர் முயற்ச்சி செய்வார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் பயனர் குழுமம் என்பது உள்நோக்கோடு ஒரு கோடிப்பேர் இருக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக்கொண்ட பறையர் என்ற பேரினத்தைப்பற்றிய தவறான கருத்துகளை சான்று இல்லாத கருத்துக்களை நீக்க வேண்டுகோள்விட யாரிடம் முறையிட வேண்டும் என்பதையும் தெரியப்படுத்த வேண்டுகின்றேன்.

February 2016

தொகு
 
You have been blocked from editing for a period of 1 மாதம் for violating copyright policy by copying text or images into Wikipedia from another source without verifying permission. You have been previously warned that this is against policy, but have persisted, as you did at பறையர். Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 16:03, 13 பெப்ரவரி 2016 (UTC)
தெளிவாக பதிப்புரிமை மீறல் செய்ய வேண்டாம் என்ற பின்னும் செயற்பட்டதற்காக இத்தடை. இது தொடர்ந்தால் முடிவிலித்தடைக்கு இப்பயனர் உட்படுத்தப்படலாம். --AntanO 16:05, 13 பெப்ரவரி 2016 (UTC)
 

வணக்கம், Rkaartikeyan!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

பதிப்புரிமை மீறல் என்றால் என்ன? நான் மேற்க்கோள் காட்டியது பாவாணர் எழுதிய பண்டைய தமிழ் நாகரீகமும் பண்பாடும் என்ற நூலில் இருந்து. மேலும் அந்நூலானது தமிழக அரசின் இணையதளத்தில் உள்ளது. இது எப்படி பதிப்புரிமை மீறல் என்று எனக்கு விளங்கவில்லை. ஆக தயவு கூர்ந்து விக்கியில் எழுதுவதில் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் எனக்கு பதிப்புரிமை மீறலைப்பற்றி சொல்லும் இந்த விக்கி பக்கத்தில்(Copyright_violations) எந்த  வரியில் சொல்லப்பட்டதை நான் மீறி இருக்கின்றேன் எனச்சொன்னால். விக்கியில் எழுதுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்ததாக அமையும். நன்றி! 

தங்களுக்கு நேரம் இருக்கும் போது மறக்காமல் பதிப்புரிமை மீறல் பற்றிய விக்கி பக்கத்தில்(Copyright_violations)(ஆங்கிலத்தில் உள்ளது, தமிழில் இல்லை) எந்த வரியின் படி நான் பாவாணனர் எழுதிய நூலில் உள்ளதை மேற்க்கோள் காட்டியது பதிப்புரிமை மீறலாகிவிட்டது என்பதை எனக்கு சொல்லுங்கள் AntanO Rkaartikeyan (பேச்சு) 16:26, 13 பெப்ரவரி 2016 (UTC)

திரு இரவி அவர்களே உங்களுக்கு நேரம் இருப்பின் பதிப்புரிமை மீறல் பற்றிய விக்கி பக்கத்தில்(Copyright_violations)(ஆங்கிலத்தில் உள்ளது, தமிழில் இல்லை) எந்த வரியின் படி நான் பாவாணனர் எழுதிய நூலில் உள்ளதை மேற்க்கோள் காட்டியது பதிப்புரிமை மீறலாகிவிட்டது என்பதை எனக்கு சொல்லுங்கள்.

உங்களுக்கு 6 ஆகத்து 2015 அன்று பதிப்புரிமை மீறல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் உங்களுடைய தொகுப்புக்கள் நேரடியாக இல்லாமல் சிறுகச் சிறுக ஏதோ ஒரு வலைப்பக்கத்தில் இருந்து, குறிப்பாக முகநூல் 1, கூகிள் பக்கம் என ஏதோ ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. பகுதி பகுதியாக தேடிப்பாருங்கள். மேலும், தற்போது சேர்த்த பாவாணர் எழுதிய பண்டைய தமிழ் நாகரீகமும் பண்பாடும் என்ற நூல் என்பதற்கு எவ்வித ஆதரமும் இல்லை. ஆகவே அதனை மீளமைத்தேன். நீங்களாக ஆதாரம் என்ற பெயரில் கட்டுரையில் ஒவ்வொன்றான இணைத்து வருகிறீர்கள். இங்கும் அவ்வாறான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இங்கும் இது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் கட்டுரையை வளர்ப்பதற்குப் பதில் உங்கள் கருத்துக்களை கட்டுரையில் சேர்ப்பதிலும், பொருத்தமற்ற விமர்சனங்களையும் முன் வைக்கிறீர்கள். எனவே எல்லாவற்றுக்கும் இத்தடை. நீங்கள் தடையை நீக்க விரும்பினால், பதிப்பரிமை மீறல், பிழையான ஆதாரம் இணைத்தல், வீண் வாதம் செய்யப் போவதில்லை என்று தெரிவித்தால் தடையை நானோ வேறு ஒரு நிருவாகியோ நீக்குவார். நன்றி. --AntanO 17:15, 13 பெப்ரவரி 2016 (UTC)
தமிழ் நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறை செயலர் திரு. தா.கி. ராமச்சந்திரன் இ.ஆ.ப அவர்களை தலைவராக கொண்டு நடத்தப்படும் அமைப்பு "தமிழ் இணையக் கல்விக்கழகம்" ஆகும். அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் tamilvu.org[1]. அதிலே நூலகம்[2] பக்கத்தில் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடைகள்) என்ற பிரிவின் கீழ் பாவாணர் படைப்புகள் என்பதற்க்கு கீழாக 25ஆவது நூலாக பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்[3] என்ற நூல் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் நீங்கள் கூறுகின்றீர்கள் பாவாணர் எழுதிய பண்டைய தமிழ் நாகரீகமும் பண்பாடும் என்ற நூல் என்பதற்கு எவ்வித ஆதரமும் இல்லை. என்று. ஆக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலரை தலைவராக கொண்டு இயங்கும் ஒரு அரசு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணைத்தில் குறிப்பிடும் செய்தி ஆதாரமற்றது எனில் என்ன சொல்வது? கல்வெட்டுகள் என்பது என்ன? அரசர்கள் ஆட்சி காலத்திலே அரசுகளால் செதுக்கப்பட்டவை. தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்று அரசுகள் இணையத்தில் தங்களின் தகவல்களை பதிவு செய்கின்றன. கல்வெட்டுக்கலை விக்கிப்பீடியா ஆதாரமாக எடுத்துக்கொள்ளும் ஆனால் அரசு இணையதளத்தில் உள்ளதை ஆதாரமாக எடுத்துக்கொள்ளாது என்பது எனக்கு வியப்பாக உள்ளது. உங்கள் கூற்றுப்படி ஒருகால் அப்படி ஒரு ஆதாரமற்ற நூல் இருப்பின், பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் (நூல்) என்ற இந்த விக்கி பக்கத்தை ஏன் நீக்கவில்லை? இல்லாத நூலுக்கா ஒரு விக்கி பக்கம்?
பறையர்கள் 90 லட்சம் பேர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்க்கு மேற்க்கோளாக அரசு இணையதளத்தின் சுட்டி[4] தான் கொடுகக்பட்டுள்ளது. எனில் எந்த அடிப்படையில் பறையர்கள் 90 லட்சம் என்பதை விக்கிபீடியா ஏற்றுக்கொண்டுள்ளது Rkaartikeyan (பேச்சு) 17:29, 13 பெப்ரவரி 2016 (UTC)
நீங்கள் ஆரம்ப முதலே தெளிவற்ற உரையாடலில் ஈடுபடுகிறீர்கள். இங்கு பாவாணர் எழுதிய பண்டைய தமிழ் நாகரீகமும் பண்பாடும் என்ற நூல் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இதைவிடுத்து தேவையற்ற விளக்கம் வேண்டாம் இங்கும் தெரிவித்துள்ளேன். அங்கும் அதே தேவையற்ற விளக்கம். --AntanO 17:39, 13 பெப்ரவரி 2016 (UTC)
அந்த நூலின் 22 பக்கம் அது. மேலே முகப்பு[1] என்று உள்ளதே அதை கிளிக் செய்தால் அது பாவாணர் எழுதிய நூல் என்று தெரியுமே நண்பரே Rkaartikeyan (பேச்சு) 17:42, 13 பெப்ரவரி 2016 (UTC)
இவ்வாறுதான் சொடுகி உசாத்துணை தேடி அறிந்து கொள்ள வேண்டும் என்று விக்கிப்பீடியா வழிகாட்டவில்லை. நீங்கள் இதே வீணான தர்க்கம் செய்து கொண்டு இருப்பீர்களானால் முடிவிலித் தடைக்கோ அல்லது குறிப்பிட்ட காலம் வரைக்கம் கடினத் தடைக்கோ உள்ளாகலாம். --AntanO 17:48, 13 பெப்ரவரி 2016 (UTC)
:::: பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் (நூல்) என்ற இந்த விக்கி பக்த்தில் மூன்று மேற்கோள்கள் காட்டப்படுகின்றன அவை 1. ஞா. தேவநேயப்பாவாணர், பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்(1966), பக் 1 , http://tamilvu.org/library/libindex.htm | 2. ஞா. தேவநேயப்பாவாணர், பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்(1966), பக் 6 , http://tamilvu.org/library/libindex.htm | 3. ஞா. தேவநேயப்பாவாணர், பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்(1966), பக் 7. ஆக இதைப்போல நான் மேற்க்கோள் காட்டி இருந்தால் எனது தகவல் சேர்க்கப்பட்டிருக்குமா? தெரிந்துகொள்ளவே கேட்கின்றேன். 1 மாத தடை விதித்துள்ளீர்கள். ஆக தடை நீங்கிய பிறகு நான் சரியாக மீண்டும் பறையர் பக்கத்தில் சேர்க்கவேண்டும் அல்லவா ஆகவே கேட்கின்றேன். தவறாக பொருள் கொண்டு விடாதீர்கள். Rkaartikeyan (பேச்சு) 17:50, 13 பெப்ரவரி 2016 (UTC)
அங்கிருப்பது பிழையான முறை. ஆகவே, நீக்கியுள்ளேன். ஆக்கபூர்வமான தொகுத்தலில் ஈடுபடுவீர்கள் என்ற நல்லெண்ணத்தில் உங்கள் தடையையும் நீக்கியுள்ளேன். --AntanO 17:59, 13 பெப்ரவரி 2016 (UTC)
நன்றி நண்பரே. உங்களின் இந்த தடையால் ஒரு புத்தகத்தில் இருக்கும் விசயத்தை மேற்க்கோள் காட்டும் போது அந்த புத்தகத்தின் பக்கத்தை குறிப்பிடவேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். மீண்டும் நன்றி :) Rkaartikeyan (பேச்சு) 18:02, 13 பெப்ரவரி 2016 (UTC)

சில கருத்துக்கள்

தொகு

உங்களுடன் உரையாடியதில் என்னுடைய அவதானிப்பின் அடிப்படையில் சில கருத்துக்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

  • விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியம் பற்றியும் கொள்கை வழிகாட்டல் பற்றியும் அறிந்து கொள்வது உதவியாக இருக்கும்.
  • கலைக்களஞ்சியம் நமது விருப்பு வெறுப்புக்கு அப்பால் சிறந்த தகவலைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நம்பகமான மூலங்கள் வேண்டும்.
  • நமது கருத்தினைத் தெரிவிக்க, விடயத்துடன் உரையாடல் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள். உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.
  • கட்டுரைக்கு நம்பகமான உசாத்துணை மிக முக்கியம். பார்க்க: en:Wikipedia:Identifying reliable sources, விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி விக்கிப்பீடியா:புரூவ் இட்
  • மற்றவர்களுடன் உரையாடுங்கள், உதவி கேளுங்கள், வேறு விடய கட்டுரைகளையும் தொகுங்கள், நல்லெண்ண நம்பிக்கை கொள்ளுங்கள்.

--AntanO 18:23, 13 பெப்ரவரி 2016 (UTC)

தங்களின் கருத்துக்களுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி :) Rkaartikeyan (பேச்சு) 18:52, 13 பெப்ரவரி 2016 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

தொகு
  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

தொகு

(Sorry for writing in English)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rkaartikeyan&oldid=3908993" இலிருந்து மீள்விக்கப்பட்டது