விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில்ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

-- Sundar 10:19, 20 ஜூன் 2005 (UTC)

சிவகுமார், காவிரி ஆறு கட்டுரையில் உங்கள் பங்களிப்பைப் பார்த்து மகிழ்ந்தேன். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்று இங்கெ தெரிவிக்கலாம். -- Sundar 10:47, 22 ஜூன் 2005 (UTC)


புதிய பக்கங்களைத் தொடங்கும் முன் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள இணைப்பக்கங்களை ஒரு முறை பாருங்கள். இது, உங்கள் கட்டுரையை சிறப்பாக, விரிவாக எழுத உதவும். அங்கிருந்து, படங்கள், இணைப்புகள் ஆகியவற்றை எளிமையாக வெட்டி இங்கு ஒட்டி விடலாம்.--ரவி (பேச்சு) 13:48, 12 ஜூலை 2005 (UTC)

தங்களுடைய அறிவுரைக்கு நன்றி ;-) .--சிவகுமார்

பாராட்டு தொகு

தங்கள் வருகைக்கு பிறகு இங்கு நிறைய புது கட்டுரைகள் உருவாவது கண்டு மகிழ்கிறேன். தங்களைப்போல் இன்னும் பலர் பங்களிக்க முன் வந்தால், கூடிய விரைவில் 1000 கட்டுரைகள் இலக்கை அடையலாம். 1000 கட்டுரைகள் வந்தால் ஆங்கில விக்கபீடியா முதல் பக்கத்திலிருந்து இணைப்பு கிடைக்கும். அதன் மூலம், மேலும் பலப்பயனர்கள் இங்கு வர வழி வகுக்கலாம். விக்கிபீடியாவிற்கு நீங்கள் பங்களிப்பதற்கான காரணத்தை கண்டேன். என்னுடைய நோக்கமும் அதுவே. தமிழர் தமிழை மட்டுமே கொண்டு உலகறிய உதவும் கருவியாக விக்கிபீடியா விளங்க வேண்டும் என விழைகிறேன்.--ரவி (பேச்சு) 12:39, 19 ஜூலை 2005 (UTC)

ரவி, தங்கள் பாராட்டுக்கு நன்றி. 1000 கட்டுரைகள் என்ற இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும். நான் தமிழார்வமுள்ள எனது நண்பர்களுக்கு தமிழ் விக்கிபீடியா பற்றி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளேன். எனவே விரைவில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். --Sivakumar 05:22, 20 ஜூலை 2005 (UTC)

மிக்க மகிழ்ச்சி :)--ரவி (பேச்சு) 08:41, 20 ஜூலை 2005 (UTC)

குஜராத் தொகு

குஜராத் கட்டுரையில் உங்கள் பங்களிப்பைக் கண்டேன். நன்றி. அக்கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களை இங்கே காணவும்.

  • புதிய படிமங்களை பதிவேற்றும் முன்னர் commons:-ல் அந்த படம் உள்ளதா எனப் பார்க்கவும். ஆங்கில விக்கிபீடியாவில் பயன்படுத்தப்படும் பல "கட்டற்ற படிமங்கள்" காமன்ஸிலிருந்தே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை எந்த மொழி விக்கிபீடியாவிலும் (மீண்டும் பதிவேற்றத் தேவையில்லாமல்) அப்படியே பயன்படுத்தலாம்.
  • நான் ஏற்கெனவே இருந்த படிமத்தைக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறாகப் பயன்படுத்துவதால் அங்கே படிமத்தை மாற்றினால் அம்மாற்றம் உடனடியாக இங்கும் தானாகவே ஏற்படும்.
  • ஆங்கில உட்பட பிற மொழி விக்கிபீடியா கட்டுரைகளுக்கான் இணைப்பை இப்படி ([[en:Gujarat]]) தரலாம். இவ்வாறாகத் தரப்படும் இணைப்புகள் தாமாகவே கட்டுரையின் இடப்புறம் உள்ள சட்டத்திற்குள் வந்து விடும்.

-- Sundar \பேச்சு 05:34, 21 ஜூலை 2005 (UTC) தங்களுடைய அறிவுரைக்கு நன்றி :-) .--சிவகுமார்

இந்திய இரயில்வே தொகு

இந்திய இரயில்வே கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றி. -- Sundar \பேச்சு 05:09, 10 ஆகஸ்ட் 2005 (UTC)

இந்திய இரயில்வே கட்டுரைக்கு உங்கள் தொடர்ச்சியான பங்களிப்புக்களுக்கு நன்றி. -- Sundar \பேச்சு 09:21, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியா வழுக்களுக்கு ஓட்டளியுங்கள் தொகு

விக்கிபீடியா:வழு நிலவரங்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழுக்களின் இணைப்புகளை பின்பற்றி பக்சில்லா தளத்தில் சென்று ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஓட்டளிப்பதின் மூலம் இந்த வழுக்களை பக்சில்லா காரர்கள் முன்னுரிமை கொடுத்து சரி செய்வர். அது தமிழ் விக்கிபீடியா திட்ட வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு ஓட்டளிப்பதற்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து நீங்கள் அத்தளத்தில் பயனர் கணக்கு உருவாக்க வேண்டியிருக்கும். இந்த வழுக்களின் நிலவரம் குறித்த தொடர் மின்மடல்களை நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத மின் மடல் முகவரியைக்கொடுத்து பயனர் கணக்கு உருவாக்கலாம். மேற்கொண்டு விளக்கம் தேவைப்பட்டால் தயவு செய்து என் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். நன்றி--ரவி (பேச்சு) 10:34, 12 ஆகஸ்ட் 2005 (UTC)

தங்கள் சிறந்த பங்களிப்பு தொடரட்டும் தொகு

பிரபஞ்சத்திலுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ் மக்களுக்கு தருவதுடன், இணையத்திலுள்ள சிறந்த தமிழ் பக்கங்களை இணைக்கும் பாலமாகவும் விக்கிபீடியா விளங்க வேண்டும் என்பதே என்னுடைய ஆவலும். இந்திய இரயில்வே கட்டுரையை தாங்கள் தொடங்கியதும், விரிவு படுத்தியதும் பாராட்டுக்குரியது. அது மேலும் விரிவடைந்து ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரை போல் வளர வேண்டும் என வாழ்த்துறேன். அதற்கு என்னால் இயன்றவரையிலும் பங்களிக்கிறேன். தங்கள் பங்களிப்பும் தொடர வாழ்த்துகிறேன். - ஸ்ரீநிவாசன் 13:25, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

நாடுகள் மற்றும் அவற்றின் தலைநகரங்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். -- Sundar \பேச்சு 09:11, 24 ஆகஸ்ட் 2005 (UTC)

நன்றி :-)Sivakumar 11:06, 24 ஆகஸ்ட் 2005 (UTC)

ஒரு சிறு ஆலோசனை. கூடிய வரை நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் இருந்து ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள இணைக் கட்டுரைகளுக்கு இணைப்பும் அங்கிருந்து தமிழ் கட்டுரைகளுக்கு இணைப்பும் கொடுத்தால் மேலும் பயனர்கள் வர ஏதுவாகும். ஹரியானா கட்டுரைக்கு நான் செய்துள்ள மாற்றங்களை இங்கே காணுங்கள். நன்றி. -- Sundar \பேச்சு 05:23, 25 ஆகஸ்ட் 2005 (UTC)

moving ur anonymous contributions தொகு

  • Sivakumar, there is no need to delete your anonymous user pages. In case, u forget to log in in future, other users will still know that it is you. Otherwise, again a new anonymous user page will be created and we will be posting welcome template again :) so my suggestion is that let the page stay. By the way, deleting a user account is also not possible..Only we can delete the user pages.--ரவி (பேச்சு) 15:02, 10 செப்டெம்பர் 2005 (UTC)Reply

category:oceans தொகு

ok, will do it this time, but just for ur info, all you need to create a new category is type [[Category:பெருங்கடல்கள்]] or [[பகுப்பு:பெருங்கடல்கள்]] just as you would do for already existing categories in the article. when you save the article, the category at the bottem appears as a red link. click the red link and enter the parent category in the edit box, [[Category:நீர்நிலைகள்]] in this case, and your category gets created! -ஸ்ரீநிவாசன் 14:43, 10 செப்டெம்பர் 2005 (UTC)Reply

கட்டுரைப் பரவல் தொகு

பலதரப்பட்ட கட்டுரைகளை உருவாக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நானும் முடியும்போது தொகுக்கிறேன். -- Sundar \பேச்சு 09:02, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நன்றி :-) Sivakumar 14:40, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நிர்வாகியாக விருப்பமா? தொகு

நீங்கள் விரும்பினால், உங்களை முறைப்படி தமிழ் விக்கிபீடியா நிர்வாகியாக தேர்ந்தெடுக்கச் சொல்லி மயூரநாதன் அவர்களிடம் பரிந்துரைக்க விரும்புகிறேன். நிர்வாகியாவதின் மூலம் மேலும் சில பக்கங்களை இன்னும் எளிமையாக உங்களால் தொகுக்க இயலும். தள பராமரிப்பில் உதவவும் ஏதுவாக இருக்கும். --ரவி (பேச்சு) 08:56, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply

என் மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி ரவி. எனக்கும் இதில் விருப்பமே. மேலும் நிவாகியாவாதன் மூலம் இன்னும் சிறப்பாக பங்களிக்க முடியும் என்பதில் மிக்க மகிழ்ச்சி.-Sivakumar 09:22, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply

Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்களை நிர்வாகியாக முன்மொழிந்துள்ளேன். தயவு செய்து அதை ஏற்று மறுமொழி தாருங்கள். --ரவி \பேச்சு]] 10:43, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply

அவ்வாறே செய்துள்ளேன். ஆதரவு தெரிவித்த சுந்தருக்கு நன்றி.-Sivakumar 10:55, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நிர்வாகி பொறுப்பு தொகு

வாழ்த்துக்கள், சிவகுமார். இங்கே செய்யப்பட்ட வேண்டுகோள் மீதான வாக்கெடுப்பில் உங்களை நிர்வாகியாக்குமாறு எடுக்கப்பட்ட முடிவின் இறுதியில் நான் உங்களுக்கு நிர்வாகிகளுக்குறிய அணுக்க உரிமைகளை ஏற்படுத்தியுள்ளேன். நீங்கள் இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி விக்கிபீடியாவை மேலும் செம்மைப்படுத்த உதவுவீர்கள் என்று நம்புகிறேன். :-) -- Sundar \பேச்சு 09:51, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

"காப்பு செய்" என்ற இணைப்பை அழுத்தினால் காப்பு நீக்கும் வரை எவராலும் அப்பக்கத்தைத் தொகுக்க முடியாது. கட்டுக்கடங்காத அளவு நாச வேலைகள் நடக்கும் போதும் இரு பயனர்களுக்கிடையே தொகுத்தல் போர் நடக்கும் போதும் சில கொள்கைகளுக்குட்பட்டு இக்காப்பைப் பயன்படுத்தலாம். மேலதிக தகவல்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள இப்பக்கத்தைப் படிக்கவும். முடிந்தால் மொழிபெயர்க்கவும். -- Sundar \பேச்சு 10:29, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

வாழ்த்துக்கள் தொகு

சிவா தாங்கள் நிர்வாகியானதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:-) --Vignesh.C.Bose 10:37, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

வாழ்த்துக்கள் சிவகுமார். விக்கிபீடியாவில் படிப்படியாக அதிகரித்து வரும் உங்கள் ஈடுபாடு கண்டு மகிழ்கிறேன்--ரவி (பேச்சு) 11:11, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

சிவா, வாழ்த்துக்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் நிர்வாகி அணுக்க உரிமையைப் பயன்படுத்தித் தமிழ் விக்கிபீடியா மேலும் வளர உதவுவீர்கள் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 18:19, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

நன்றிகள் தொகு

சிவக்குமார் அவர்களே, "நிர்வகி தேர்தலில்" ஆதரவு தந்ததுக்கு நன்றிகள். நீங்கள் இந்தியா முழுக்க சுற்று பயனம் செய்பவர் போல் தெரிகின்றது. இந்தியாவில் உள்ள இடங்களை பற்றி பல கட்டுரைகளை எழுதுவதுடன் மட்டும் அல்லாமல், இந்திய இரயில்வே தொடர்பாகவும் அக்கறையுடன் எழுதுகின்றீர்கள். அதைவைத்துத்தான் மேற்கண்ட அனுமானம்:-) மேலும், உங்களை போலவே, தமிழ் விக்கிபீடியா பல தகவல்களை தமிழில் ஒருங்கே தொகுக்க நல்ல வழிமுறை என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. உங்கள் நிர்வாகி பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். --Natkeeran 23:53, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

வாழ்த்துக்கள் தொகு

நிர்வாகியானதன் மூலம் மேலும் சிறப்பான முறையில் உங்கள் பங்களிப்புகள் தொடரும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் -ஸ்ரீநிவாசன் 11:41, 4 அக்டோபர் 2005 (UTC)Reply

இந்திய தலைநகர தகவல்சட்டம் தொகு

இந்திய மாநிலங்கள், நகரங்கள் பற்றிய கட்டுரைகளை விரிவுபடுத்துவதற்கும், குறுங்கட்டுரைகள் உருவாக்குவதற்கும், தகவல் சட்டங்கள் உருவாக்கி வருவதற்கமும் என் நன்றிகளும், பாராட்டுகளும். வார்ப்புரு பேச்சு:இந்திய தலைநகர தகவல்சட்டம் என்ற பக்கத்தில் எனது சில சந்தேகங்களை தெரிவித்துள்ளேன். இந்த வார்ப்புருவை உருவாக்கியவர் என்ற முறையில் அது பற்றி உங்கள் எண்ணங்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். தலைநகரங்களுக்கு தனியான வார்ப்புரு உருவாக்கியதற்கு சரியான காரணம் இருந்தால் பிரச்சனையில்லை. இல்லையெனில் பெயர்மாற்றம் செய்யவேண்டுமெனில் மற்ற கட்டுரைகளிலும் இவ்வார்ப்புருவை பயன்படுத்துவதற்கு முன்பே செய்வது நன்று. -ஸ்ரீநிவாசன் 12:00, 4 அக்டோபர் 2005 (UTC)Reply

இன்று ஒரு தகவல் தொகு

இன்று ஒரு தகவல் திட்டம் குறித்து என் பேச்சுப் பக்கத்தில் விட்ட செய்தியைக் கண்டேன். அனைவருடைய கருத்தையும் அறிந்த பின்னர் செயல்படுத்தலாம். உங்கள் பின்னூட்டங்களை ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். எடுத்துக்காட்டாக, இன்று ஒரு தகவல் என்பதற்கு பதில், இந்த வாரத் தகவல் என்றும் வைக்கலாம். தகவல் எதுவும் கிடைக்காத பொழுது அதற்காகவாவது புதிய கட்டுரை உருவாக்கத் தோன்றும். மேலும் தகவல்களில் இருந்து இணைக்கப்படும் பிற கட்டுரைகளும் பார்வைக்கு வரும். -- Sundar \பேச்சு 09:46, 5 அக்டோபர் 2005 (UTC)Reply

இந்திய இரயில்வே தொகு

சிவகுமார், இரயில்வே கட்டுரைக்கு என் பங்களிப்பு போதுமா, இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா :)? சில பத்திகளை ஆங்கிலத்தில் அப்படியே வெட்டி ஒட்டி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது தமிழாக்கம் செய்கிறேன். நீங்களும் செய்யலாம். இத்தளத்தில் ஆகச் சிறந்த சிறப்புக் கட்டுரையாக இதை மாற்றுவோம். ஆங்கில விக்கி பக்கத்தில் அடிக்குறிப்புகளுக்கு இணைப்புகள் தந்திருக்கிறார்கள். அது போல நீங்களும் மாற்றங்கள் செய்வீர்ளானால், கட்டுரையின் நம்பகத்தனமை கூடும். மிக்க பொறுமையுடன் இக்கட்டுரையை வளர்த்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். எப்படி இந்த தலைப்பில் உங்களுக்கு ஆர்வம் வந்தது என அறிய ஆவல். அப்புறம், படிமங்களை பதிவேற்றும் போது அது குறித்த பதிப்புருமை தகவல்களையும் தாருங்கள். எடுத்துக்காட்டுக்கு, இரயில்வே யானைக்குட்டி படம் ஆங்கில விக்கிபீடியா பக்கத்தில் அது பற்றிய பதிப்புரிமை தகவல்களுடன் இருக்கிறது. அதை அப்படியே வெட்டி ஒட்டினால் போதுமானது. இந்திய நகரங்கள் பற்றியும் உலக நகரங்கள் பற்றியும் நீங்கள் ஆர்வமுடன் கட்டுரைகள் உருவாக்குவது மகிழ்ச்சி அளிக்கிறது--ரவி (பேச்சு) 15:43, 5 அக்டோபர் 2005 (UTC)== பாராட்டு == இன்றைய தினமலரில் உங்கள் வலைப்பதிவு பற்றி குறிப்பிடப்படுள்ளது. வாழ்த்துக்கள். http://www.dinamalar.com/2005oct09/flash.asp --ரவி (பேச்சு) 14:46, 9 அக்டோபர் 2005 (UTC)Reply

கணினியியல் வகை பிரித்தல், துணை வகை ஏற்படுத்தல் தொகு

கணினி, மென்பொருள் சம்பந்தமாக நீங்கள் பல கட்டுரைகள் எழுதிவருவதி வருவது மகிழ்ச்சியழிக்கின்றது. கணினியியல் உட் பிரிவுகளை ஆய்ந்து அதற்க்குகேற்ற மாதிரி துணை வகைகளை வகுப்பதே நன்று. (உ+ம்: அவ்வாறு இயற்பியலுக்கு செய்துள்ளேன்.) எனினும், தற்சமயம் தகவல்கள் சிதறாமல் குறைந்த பட்சம் உங்கள் கட்டுரைகளை கணினியியல் பகுப்பில் சேர்தீர்களானால் நன்று. நீங்கள் சமீபத்தில் எழுதியவற்றை சேற்க்க முயன்றுள்ளேன். கணினியல் வகை செய்வது தொடர்பாக உங்களின் கருத்தையும் வேண்டி நிற்கின்றேன். நன்றி. --Natkeeran 20:13, 17 அக்டோபர் 2005 (UTC)Reply

reverting edit தொகு

from the recent changes page follow the link vErupaadu of any page..then u can see the comparison between last two edits..if the latest edit is not useful u can revert to the previous edit..there will be a link called munnilaiyaakku at the top right hand side of page near the recent version.u can use that..this revert facility is available only for administrators. so u can make good use of it. also before welcoming anonymous users, check whether their contribution is useful..if yes, then welcome with anonymous template..if the contribution is useless or testing then use the template test. for example, the latest edit by anonymous user in ramayana article is useless..u shd have welcomed him with test template instead of anonymous template :) also there is no need to welcome interwiki users or bot users who come here just to add interwiki links--ரவி (பேச்சு) 07:26, 25 அக்டோபர் 2005 (UTC)Reply

Thanks for the info dude :-) - சிவகுமார் 08:27, 25 அக்டோபர் 2005 (UTC)Reply

small note தொகு

when u leave தரமுயர்த்து template, it will be useful if u could give comments in the talk page how to improve the article.--ரவி ([[User talk:Ravidreams|பேச்சு)]] 11:53, 18 நவம்பர் 2005 (UTC)Reply

அவ்வாறே செய்வோம் ரவி. - சிவகுமார் 07:03, 21 நவம்பர் 2005 (UTC)Reply

Hi Sivakumar, the bot hangs after sometime. Thanks for reminding. I've restarted it. -- Sundar \பேச்சு 12:03, 13 டிசம்பர் 2005 (UTC)

பண்பாடு/வாழ்க்கை தொகு

சிவக்குமார், நீங்கள் மிகவும் நேர்த்தியாக பங்களிக்கின்றீர்கள். மிகவும் ஒழுங்காக உங்கள் செயல்பாடுகள் அமையும் போல இருக்கின்றது. பண்பாடு/வாழ்க்கை பகுப்புகளை சேர்ப்பதில் உங்களுக்கும் ஆட்சோபனை இல்லை என்றால் செயல்படுத்தலாம் என்று இருக்கின்றேன். மேலும் விளக்கங்கள்: Wikipedia பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு. நன்றி.

மகிழ்ச்சி தொகு

சில வழமையான பயனர்கள் சுணங்கி உள்ள போதும் நீங்கள் தொடர்ந்து அளவும் தரமும் குறையாமல் பங்களிப்பது, புதுப்புது கட்டுரைகளை உருவாக்கி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி--ரவி 14:38, 15 டிசம்பர் 2005 (UTC)


உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. யார் வந்தாலும், யார் வரவிட்டாலும் சிவகுமார் ஒரு பதிவாவது இடுவதை கவனித்திருக்கின்றேன். உங்களை நிர்பந்திப்பதாக கருதாதீர்கள். ஆனால், நீங்கள் மிக நேர்த்தியாக செயல்படுவதை கவனிக்க கூடியதாக உள்ளது. பாராட்டுக்கள். --Natkeeran 14:16, 19 டிசம்பர் 2005 (UTC)

நீக்க பட வேண்டிய பக்கங்கள் தொகு

சிவகுமார், எல்லா நீக்க பட வேண்டிய பக்கங்களையும் வாக்கெடுக்ப்புக்க் விடவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக நிர்வாகியான நீங்கள் வெற்று பக்கங்களை நீக்குவதில் பிறர் ஆட்சோபனை தெரிவிக்க மாட்டார்கள் என நம்பலாம். நிர்வாக வசதியற்ற பிற பயனர்களுக்கும், பிறர் ஆட்சோபிக்க கூடிய பக்கங்களுக்கே வாக்கெடுப்பு பொருந்தும் என்று நினைக்கின்றேன். எல்லா விடயங்களையும் வாக்கெடுப்புக்கு விடுவது பயனர்களுக்கு சலிப்பு கொடுத்துவிடும். எனினும், தங்களின் தற்போதை தெரிவுகளுக்கு ஆதரவே. --Natkeeran 18:44, 19 டிசம்பர் 2005 (UTC)

அயரா உழைப்பு தொகு

உங்கள் அயரா உழைப்பும் பங்களிப்பும் மிகவும் மகிழ்ச்சியளித்து, இத்திட்டம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையூட்டுகிறது. உங்கள் பணி தொடரட்டும். -- Sundar \பேச்சு 07:42, 25 டிசம்பர் 2005 (UTC)

Let's hope that others' edits shall compensate for your reduced edits next month. -- Sundar \பேச்சு 08:50, 25 டிசம்பர் 2005 (UTC)

Thanks for reminding. I'll go to my desk and start the bot. -- Sundar \பேச்சு 09:47, 25 டிசம்பர் 2005 (UTC)

I've started the bot once again. But, need to get bot status before the next run as otherwise, it clogs the recent changes page. -- Sundar \பேச்சு 05:11, 19 ஜனவரி 2006 (UTC)

ராஜாவிடமிருந்து தொகு

வரவேர்ப்புக்கு நன்றி சிவ குமார்! நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் விக்கிபீடியாவிற்கு வருகிறேன். என்னிடம் தமிழ் விக்கிபீடியாவிற்கு தேவைப்படும் Latha Font இல்லை. நான் language converter மூலம் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அதனால் கட்டுரைகள் எழுதுவதில் சிரமமாக இருக்கிறது. சிரமமில்லையேல் உதவி செய்யவும். நன்றி - வைகுண்ட ராஜா 20:05, 22 ஜனவரி 2006 (UTC)

அவதார்ங்களுக்கு படங்கள் போட்டால் நன்றாக இருக்கும். தொகு

--Natkeeran 19:00, 8 பெப்ரவரி 2006 (UTC)

They are not in Commons. Have to be uploaded into TWpedia. we'll do it. I'm leaving now :-) -- சிவகுமார் 19:03, 8 பெப்ரவரி 2006 (UTC)

விக்கி மூலம் தமிழ் படுத்தப்பட்டு, பழந்தமிழ் நூல்கள் அங்கு இடப்படவேண்டும் தொகு

அண்மையில், கோபி அவர்கள் ஒரு மடலில் பழந்தமிழ் நூல்களை விக்கி நூல்களிலும் பார்க்க விக்கி மூலத்தில் சேர்பதுதான் பொருத்தம் கருத்துரைந்திருந்தார். அம்மடலையும் அதற்கான என் பதிலையும், ஆலமரத்டையில் காணலாம். விக்கி மூலத்தின் தமிழ் பிரிவை ஏற்படுத யாரை தொடர்பு கொண்டு, எப்படி இடைமுகத்தை தமிழ் படுத்தலாம் என்ற விளக்கத்தை தர முடியுமா. மேலும், அம்முயற்க்கு உங்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகின்றது. --Natkeeran 18:40, 13 பெப்ரவரி 2006 (UTC)

Translation request தொகு

Greetings Sivakumar!, I know that you have a good understanding about Jesus; Could you please help me translate the English words (or at least the "subtitles) of this article into Tamil? Please. Your help would be gratefully appreciated. --Regards, Jason, 7 March 2006

சொற்பிறப்பியல் தொகு

ஆம். பல சொற்களுக்கு இனி நல்ல விளக்கம் கிடைக்கும். -- Sundar \பேச்சு 11:19, 13 மார்ச் 2006 (UTC)

Renaming of Sikhism Religion and Budhism Religion தொகு

Sivakumar, I have renamed two short articles that you created to reflect the category name, so that main essays can evolve from them. I hope you do not mind, let me know if you do. --Natkeeran 19:10, 7 ஏப்ரல் 2006 (UTC)

Even more wikipedia!--Natkeeran 02:07, 21 ஏப்ரல் 2006 (UTC)

Hi siva, didnt visit ur blog for last two three months. may be some one else commented--ரவி 08:26, 26 ஏப்ரல் 2006 (UTC)

hey did u change ur name to peruvijayan :)??? or there are more admins in ur blog ? anyway just visited ur blog.looks nice with lot of content. donno which comment u were refering to as mine--ரவி 10:34, 26 ஏப்ரல் 2006 (UTC)

oh amusing to know about this one more ravishankar in biotech :) i personally know many ravishankars from my institute itself. That biotech blog was cool. Thanks for introducing that guy. hey, u din answer who is peruvijayan, yet? curious because of the name :)--ரவி 18:03, 26 ஏப்ரல் 2006 (UTC)
oh glad to know that its u. intereesting name..saw lot of updatess in utr blog..but please don forget wiki..ha ha..even if u cannott create new articles u can copy edit and critic the old articles.--ரவி 11:29, 27 ஏப்ரல் 2006 (UTC)

Translating Templates தொகு

Sivakumar, when you translate template files you would have to do in the template files, not where they are used. --Natkeeran 17:39, 6 மே 2006 (UTC)Reply

Consider this essay (ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா) where you have translated number of template items, those items are not showing up in the essay. You would have to tranlate the items in the templates (ex: வார்ப்புரு:Infobox protected area). I hope this explains a bit more. --Natkeeran 19:21, 9 மே 2006 (UTC)Reply

தமிழகத் தேர்தல் தொகு

சிவகுமார், நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் இதுபற்றி அறிந்து தக்கன செய்யுங்களேன். -- Sundar \பேச்சு 07:12, 12 மே 2006 (UTC)Reply

Thanks, we should probably meet up someday. :-) -- Sundar \பேச்சு 07:21, 12 மே 2006 (UTC)Reply

பார்க்கவும் தொகு

சிவா, பார்க்கவும்:பேச்சு:2006 உலகக்கோப்பை கால்பந்து--ரவி 11:39, 16 ஜூன் 2006 (UTC)

நன்றி தொகு

பாராட்டுக்கு நன்றி என் பணி என்றும் தமிழுக்கு --டெரன்ஸ் 03:54, 21 ஜூன் 2006 (UTC)\பேச்சு

மாற்ற்ம் செய்துள்ளேன் கவனிக்கவும் --டெரன்ஸ் 09:11, 23 ஜூன் 2006 (UTC) செல்வகுமாரிடம் மன்னிபு கோறியுள்ளேன் பயனர் பேச்சு:C.R.Selvakumar --டெரன்ஸ் 13:56, 23 ஜூன் 2006 (UTC)

நன்றி தொகு

:-))--டெரன்ஸ் 13:54, 18 ஜூலை 2006 (UTC)

Chola temples of TN - a very interesting documentary in google தொகு

--Natkeeran 19:00, 20 ஜூலை 2006 (UTC)


ஆமாம், கூகுள் விடியோவை பார்பதற்கு அவர்களின் விடியோ பிளேயரை கீளே உள்ள தரவிறக்கம் இணைப்பு மூலம் தரவிறக்கம் செய்ய வேண்டும். இலவசம்தான். http://video.google.ca/playerdownload

--Natkeeran 12:59, 21 ஜூலை 2006 (UTC)

டொம் ஹாங் கட்டுரையில் உதவி தொகு

நான் டொம் ஹாங் பற்றிய கட்டுரை ஆரம்பித்ததுடன் ஒரு தகவல் பெட்டியையும் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து சேர்த்தேன். ஆனால் தகவல் பெட்டி சரிவர இயங்க மறுக்கின்றது. அதை ஒரு தடவை கவனிப்பீங்களா? நன்றி--ஜெ.மயூரேசன் 07:12, 21 ஜூலை 2006 (UTC)

சரியாக்கப்பட்டது.--ரவி 09:35, 21 ஜூலை 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு :) தொகு

சிவா,

  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:01, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

நாட்காட்டி வார்ப்புருக்கள் தொகு

சிவகுமார், ஜனவரி முதல் ஜூன் வரையான மாதங்களுக்கான நாட்காட்டி வார்ப்புருக்களை உருவாக்கித் தரமுடியுமா? அம்மாதங்களின் நாட்களுக்கான குறுங்கட்டுரைகளை உருவாக்க அது வசதியாக இருக்கும். நன்றி. கோபி 19:05, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

வார்ப்புருக்களுக்கு நன்றி சிவகுமார். ஏனைய மாதங்களுக்கும் உருவாக்கி விடுங்கள். அத்துடன் டிசம்பர் மாத நாட்காட்டி சற்று அகலமாகவிருப்பதையும் சரி செய்துவிடுங்கள். நான் ஜனவரி 1 முதல் ஜூலை 28 வரையான திகதிகளுக்குக் குறுங்கட்டுரைகள் உருவாக்க எண்ணியுள்ளேன். அதற்கு உங்கள் வார்ப்புருக்கள் பயனுள்ளதாக உள்ளன. மீண்டும் நன்றி. --கோபி 17:13, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

siva, thanks for bringing to my attention about the wikinews voting page. that mistake has already been reverted now. so, no problem--ரவி 11:39, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

Fine. --சிவகுமார் 12:20, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

விக்சனரிக்கும் வாங்க தொகு

சிவா, அப்பப்ப பழைய மாதிரி விக்சனரிக்கும் வந்து போங்க..இப்ப அங்க நானும் மாணிக்கமும் மட்டும் முனைப்போடு பங்காற்றி வருகிறோம்..தனியா இருக்க ரொம்ப பயமா இருக்கு..ஹா..ஹா..இது உங்களுக்கு மட்டுமான பிரத்தியேக அழைப்பு..ஆனா, நீங்க ஏத்துக்காட்டி அப்புறம் யாரை அழைக்கிறதுனு யோசிக்கணும்.. வேற என்ன செய்ய ? :) ஆலமரத்தடி பொத்தாம் பொது அழைப்புகள் அவ்வளவு பயன் தரவில்லை. சுந்தர், தானியங்கி சொற் சேர்ப்பு குறித்து சில திட்டங்கள் வைத்திருக்கிறார்..விரைவில், விக்கிபீடியாவை விஞ்சும் அளவுக்கு விக்சனரியின் வளர்ச்சி இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். அப்படியே உங்க பேச்சுப் பக்கத்துக்கு அடுத்த தொகுப்பு போட்டுடுங்க..பக்கம் பெரிசாயிடுச்சு--ரவி 21:40, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

Return to the user page of "Sivakumar/தொகுப்பு 1".